AstroVed Menu
AstroVed
search
search

கும்பம் செப்டம்பர் மாத ராசி பலன் 2022 | September Matha Kumbam Rasi Palan 2022

dateAugust 3, 2022

கும்பம் செப்டம்பர் மாத பொதுப்பலன்கள் 2022:

கும்ப  ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்து காணப்படும் மாதமாக உள்ளது. குடும்பத்தில் நல்லுறவு காணப்படும். திருமண முயற்சிகள் கைகூடும்.உத்தியோகத்தில் கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். தொழில் மூலம் ஆதாயம் கிட்டும்.  உங்கள் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். நீங்கள் ஊக வணிகம், குதிரை ரேஸ் மற்றும் லாட்டரி டிக்கெட் போன்றவற்றின் மூலம் நல்ல அதிர்ஷ்டமான வாய்ப்புகளை பெறக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. இந்த மாதம் காப்பீடு போன்றவற்றில் முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.

காதல் / குடும்பம்:

கும்ப ராசி இளம் வயதில் இருப்பவர்கள் இந்த மாதம் காதல் வயப்பட வாய்ப்பு உள்ளது. காதலர்களுக்கு இடையே மகிழ்ச்சி நிறைந்து காணப்படும். காதலர்கள் வெளியூர்களுக்கு சென்று இன்புற்று இருக்க இந்த மாதம் உகந்த மாதமாக இருக்கும்.  திருமணத்திற்குக் காத்திருப்பவர்களுக்கு இந்த மாதம் திருமணம் கைகூடும். குடும்பத்தில்  உள்ள அனைவரிடமும் நல்லுறவு நீடிக்கும். குழந்தை மற்றும் வீட்டு பெரியவர்களுடனான உறவு நிலை பலப்படும். 

திருமணமான தம்பதிகளுக்கிடையே வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்பட சுக்கிரன் பூஜை

நிதி நிலை:

இந்த மாதம் உங்கள் நிதிநிலை சிறப்பாக இருக்க ஒரளவு வாய்ப்பு உள்ளது,  இந்த மாதம் அதிக முயற்சியின்றி எளிதில் பணம் சம்பாதிப்பீர்கள். அதிர்ஷ்டம் வாயிலாக பணம் பெருகும். ஊக வர்த்தகங்களான பங்கு மற்றும் க்ரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து அதிக லாபத்தை பெறுவார்கள். புதிதாக மணமான தம்பதிகளுக்கு ஆடை அணிகலன் மற்றும் தங்க நகைகள் எடுப்பது  சம்மந்தமாக செலவுகள் ஏற்படலாம். வீடு பராமரித்தல், வீட்டிற்கு வண்ணம் அடித்தல் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவது தொடர்பாக செலவீனங்கள் ஏற்படலாம்.

கடன் பிரச்சனைகள் தீர துர்கா பூஜை

வேலை:

உத்தியோகத்தில் இருக்கும் கும்ப ராசி அன்பர்கள் அங்கீகாரம் பெற கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டியிருக்கும். நீங்கள் ஆயத்த ஆடை மற்றும் பயணம் சார்ந்த துறைகளில் பணிபுரிபவர் என்றால் உத்தியோகத்தில் உயர்வு காண்பீர்கள். நீங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த சம்பள உயர்வு பெற இன்னும் சற்று காலம் பொறுமை காக்க வேண்டும். 

தொழில்:

இந்த மாதம் தொழிலில் நீங்கள் மூலதனத்தை முதலீடு செய்வீர்கள். அதன் மூலம் லாபம் காண்பீர்கள். தங்கம் மற்றும் பிளாட்டினம் சம்மந்தப்பட்ட தொழில் செய்பவர்கள் அதிக லாபம் கிடைக்க பெறுவார்கள்.கணினி உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் கடந்த மாதத்தை விட இரு மடங்கு பண  வரவை பெறுவார்கள்.

தொழில் வல்லுனர்கள்:

உயர்கல்வித் துறை, மருத்துவத் துறை, மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறையில் வேலையில் உள்ள தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் தங்கள் தொழிலில் பிரகாசிப்பார்கள். அவர்களுக்கு உத்தியோக உயர்வு உண்டு. தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் தயாரிக்கும் துறையில் பணியில் உள்ள தொழில் வல்லுனர்களுக்கு தன நிலையில் உயர்வு ஏற்படும். 

உத்தியோகம் மற்றும் தொழிலில் மேன்மை கிடைக்க ராகு பூஜை

ஆரோக்கியம்:

உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிறு சிறு உபாதைகள் வந்து போகும். தலைவலி, காய்ச்சல் மற்றும் சளி போன்ற உடல் உபாதைகள் ஏற்படும் நேரமிது. சரியான உணவு, ,முறையான  உடற்பயிற்சி  போதுமான ஒய்வு உங்கள் ஆரோக்கியத்தை காக்க உதவும். 

நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் மேம்பட செவ்வாய் பூஜை

மாணவர்கள்:

மாணவர்கள் மனதை ஒருமுகப்படுத்தி கல்வி  பயில்வார்கள். எனவே  அவர்களின் கிரகிக்கும் திறன் கூடும். படிப்பில் அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெறுவார்கள். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பதற்கிணங்க கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்கள் விடாமுயற்சியுடன் செயல்பட்டு படிப்பில் வெற்றி காண்பார்கள். ஆராய்ச்சி கல்வி படிக்கும் மாணவர்கள் பேராசிரியர்களின் உதவியுடன் தனது ஆராய்ச்சியில் வெற்றி பெறுவார்கள். 

கல்வியில் தடை நீங்கி வெற்றி கிடைக்க கேது பூஜை

சுப நாட்கள்: 

1, 2, 3, 10, 12, 13, 27, 28, 30.

அசுப நாட்கள்:

4, 5, 9, 11, 23, 24, 25, 26, 29.


banner

Leave a Reply