Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

ரிஷப ராசி பலன் 2021 - Taurus Horoscope 2021 in Tamil

September 16, 2020 | Total Views : 1,034
Zoom In Zoom Out Print

ரிஷப  ராசி 2021 பொதுப் பலன்கள்:

ரிஷப  ராசி அன்பர்களே ! வருட கிரகங்கள் என்று கூறப்படும் குரு, சனி, மற்றும் ராகு-கேதுவின் சஞ்சாரம் காரணமாக இந்த வருடம் நன்மையையும் தீமையும் கலந்த பலன்களை நீங்கள் பெறுவீர்கள். நிழலின் அருமை வெயிலில் தானே தெரியும்.  சில கஷ்டங்கள் இருந்தால் தான்  சந்தோஷத்தை நாம் அனுபவிக்க முடியும். மகிழ்ச்சி தரக் கூடிய விஷயங்கள் யாவை? எந்த விஷயத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை பார்க்கலாம் வாருங்கள். உங்கள் நிதிநிலை சிறப்பாக இருக்கும். உங்கள் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். பணியிடத்தில் நீங்கள் சில பிரச்சினைகளை சந்திக்க நேரும்.  என்றாலும் உங்கள் வருமானத்திற்கு குறைவிருக்காது.  வருட ஆரம்பமே குடும்பத்தில் பதட்டம், வாக்குவாதம் போன்ற பல பிரச்சினைகளுடன் தொடங்கினாலும் மார்ச் மாத இறுதி வாக்கில்   இந்த நிலை மாறும்.  காதல் புரியும்  ரிஷப ராசி  அன்பர்களுக்கும் இதே நிலை தான். ஏப்ரல் முதல் ஜூன் வரை குடும்பத்தில் நிலைமை சீராக இருக்கம். உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். உங்களுக்கு  கண்களில் பிரச்சினை, முதுகு வலி, வயிறு சார்ந்த  பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மற்றும் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் சிறிது அக்கறை  காட்ட வேண்டும் குறிப்பாக உங்கள் வாழ்க்கைத் துணை ஆரோக்கியத்தில். கல்வி பயிலும் ரிஷப ராசி மாணவர்களுக்கு இந்த வருடம் சிறப்பான வருடம் தான். நீங்கள் போராட்டங்களை சந்தித்தாலும் இறுதியில் வெற்றி உங்களுக்கே. உங்களில் சிலர் வெளிநாடு செல்லும் வாய்ப்பினைக் கூட பெறுவீர்கள். ரிஷப  ராசி வாசகர்களே வாசகர்களே புத்தாண்டு ரிஷப  ராசி பலன் 2021 குறித்து முழு விவரம் அறிய தொடர்ந்து வாசிக்கவும்.


உங்கள் பிச்சனைகளுக்கு தீர்வு காண -  ஜோதிட நிபுணர் ஆலோசனைகள்

 

வேலை மற்றும் தொழில்:

நீங்கள் நீண்ட நாட்களாக எதிர் பார்த்துக் காத்திருந்த வேலை மாற்றம் பதவி உயர்வு போன்ற வேலை சார்ந்த உங்கள் கனவுகள் யாவும் நிறைவேறும் வருடமாக இந்த வருடம் உங்களுக்கு இருக்கும். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையில் இருக்கும் சாதகமான காலக் கட்டத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டு வாழ்வில் வெற்றி காணுங்கள். புதிய வேலை, பதவி உயர்வு காரணமாக உங்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும். என்றாலும் உங்கள் முன்னேற்றம் நிச்சயிக்கப்பட்ட ஒன்று தான். தொழில் அல்லது வியாபாரம் மேற்கொள்பவர்கள் சிறிது கவனமுடன் இருக்க வேண்டும். குறிப்பாக கூட்டாகத் தொழில் செய்பவர்கள் தேவையற்ற வாக்கு வாதங்களில் ஈடுபட வேண்டாம்.

வேலை மற்றும் தொழிலில் வெற்றி பெற – தக்ஷிணாமூர்த்தி ஹோமம் 

இந்த வருடம் உங்கள் குடும்ப வாழ்வில் குதூகலம் குறைந்தே காணப்படும்.  குடும்ப  உறுப்பினர்கள் உங்களோடு கருத்தொருமித்து  செயல்படுவது என்பது உங்களுக்கு கனவாகத் தான் இருக்கும். என்றாலும் இந்த வருடத்தின் மத்தியில் இந்த நிலை சீராகும். அதுவரை நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் குறிப்பாக உடன் பிறந்தவரக்ளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடனும் வாக்கு வாதம் மேற்கொள்ளாதீர்கள். அனுசரித்து நடந்து  கொள்வதன் மூலம்  உங்கள் வாழ்க்கைப் படகை நீங்கள் சீராகக் கரை சேர்க்க முடியும்.  சொத்துக்களில் முதலீடுகளை செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் குரு சஞ்சரிக்கும்  காலங்கள் நீங்கள் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.  சிலருக்கு குழந்தை பாக்கியம் கூட கிட்டும்.  

உங்கள் திருமண வாழ்வில் நல்லிணக்கம் பெருக -  சிவ சக்தி ஹோமம் 

நிதிநிலை/ பொருளாதாரம்:

இந்த வருடம் உங்களுக்கு பண வரவு நன்றாக இருக்கும். சொத்துக்கள் சேரும். தந்தை வழி சொத்துக்கள் உங்களுக்கு கிடைக்கும். அதே சமயத்தில் பண விரயமும் ஏற்படும்.  வருட ஆரம்பத்தில் தேவையற்ற செலவுகள் இருக்கும். ஆனால்  வருடத்தின் பிற்பகுதியில் சுப நிகழ்சிகள், விசேஷங்கள் போன்ற  சுப செலவுகளாக இருக்கும்.  நீங்கள் ஆன்மீக யாத்திரை மேற்கொள்வீர்கள். ஆன்மீகக் காரியங்களுக்க்காகவும் செலவுகளைச் செய்வீர்கள். பெரிய வகையிலான முதலீடுகள் செய்யும்  எண்ணம் இருந்தால் நிபுணர்களின் ஆலோசனை பெற்று அதற்கேற்ப செயலாற்றுங்கள்.

உங்கள் நிதிநிலையில் முன்னேற்றம் காண – குபேர ஹோமம் 

மாணவர்கள்:

ரிஷப ராசி மாணவர்கள் விரும்பும் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை கிடைக்கப் பெறுவீர்கள். போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ள நினைக்கும் மாணவர்கள் ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு வெற்றி காண்பார்கள். சில மாணவர்கள் மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்லும் வாய்ப்பினைக் கூடப் பெறுவார்கள். உங்கள் மனதிற்கேற்ற நண்பர்கள் கிடைக்கப் பெறுவீர்கள். படித்து முடித்து வேலைக்கு காத்திருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். 

கல்வியில் வெற்றி காண  - ஹயக்ரீவ ஹோமம்

ஆரோக்கியம்:

வருட ஆரம்பத்தில், அதாவது முதல் நான்கு மாதங்கள் நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். மற்ற சமயங்களில்  உங்கள் ஆரோக்கியம் சீராக இருக்கும். நீங்கள் சுறுசுறுப்பாகவும் தன்னம்பிக்கையுடனும் செயல்படுவீர்கள். உங்கள் ராசியில் ராகுவும் ஏழாம் வீட்டில் கேதுவும் இருக்கும் காரணத்தால் அதீத தன்னம்பிக்கை காரணமாக சில தொல்லைகளை சந்திப்பீர்கள். உங்கள் உணவு முறையில் கவனம் தேவை. 

உங்கள் ஆரோக்கியம் சிறக்க – தன்வந்தரி ஹோமம்

வீட்டில் செய்யக் கூடிய பரிகாரங்கள்:

•    ஓம் ஸ்ரீ ராஹவே நமஹ என்ற மந்திரத்தை 108 முறை ஜெபியுங்கள்
•    ஓம் ஸ்ரீ கேதவே நமஹ என்ற மந்திரத்தை 108 முறை ஜெபியுங்கள்
•    ஜோதிடரை கலந்து ஆலோசித்து வைரக் கல்லை அணியுங்கள் 
•    தினமும் சூரிய நமஸ்காரம் செய்யுங்கள்  
•    ஏழைகளுக்கு அன்னதானம் அளியுங்கள். விலங்குகள், மற்றும்  பறவைகளுக்கு உணவு அளியுங்கள் 

அனுகூலமான மாதங்கள் : ஜனவரி, ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, செப்டம்பர், டிசம்பர் 
அனுகூலமற்ற மாதங்கள் : பிபரவரி, மார்ச், ஆகஸ்ட், அக்டோபர், நவம்பர் 
            
(இந்த மாதங்களில் உங்களுக்கு விருப்பமான கடவுள் பிரார்த்தனை மேற்கொள்ளுங்கள். மேலும் பரிந்துரைக்கப்படும்  பரிகாரங்களை மேற்கொள்ளுங்கள்)
 

banner

Leave a Reply

Submit Comment