Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

மிதுன ராசி பலன் 2021 - Gemini Horoscope 2021 in Tamil

September 16, 2020 | Total Views : 1,336
Zoom In Zoom Out Print

மிதுன ராசி 2021 பொதுப்பலன்கள்:

மிதுன ராசி அன்பர்களே ! வருட கிரகங்கள் என்று கூறப்படும் குரு, சனி, மற்றும் ராகு-கேதுவின் சஞ்சாரம் காரணமாக இந்த வருடம் நன்மையையும் தீமையும் கலந்த பலன்களை நீங்கள் பெறுவீர்கள். நிழலின் அருமை வெயிலில் தானே தெரியும்.  சில கஷ்டங்கள் இருந்தால் தான்  சந்தோஷத்தை நாம் அனுபவிக்க முடியும். மகிழ்ச்சி தரக் கூடிய விஷயங்கள் யாவை? எந்த விஷயத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை பார்க்கலாம் வாருங்கள். இந்த வருடம் நீங்கள் எதிர்பாராத லாபம் மற்றும் நஷ்டம் இரண்டையும் எதிர் கொள்வீர்கள். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலக் கட்டங்களில் உங்களுக்கு அதிர்ஷ்டமான வாய்புகள் கிட்டும். குறிப்பாக  பணி மற்றும் தொழில் குறித்த பல வாய்ப்புகள் உங்களை  நாடி வரும். இந்த  வாய்ப்புகளை தக்க முறையில் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் நீங்கள் சிறந்த வளர்ச்சி காண இயலும். செப்டம்பர் 15 முதல் நவம்பர் 20 வரையிலான காலக் கட்டங்களில் நீங்கள் சில சவாலான தருணங்களை சந்திக்க நேரும். நவம்பர் 20க்குப் பிறகு உங்களுக்கு எல்லா விதத்திலும் நன்மை கிட்டும்.  நிதிநிலையிலும் இந்த வருடம் சில எதிர்பாராத லாபங்கள் மற்றும் நஷ்டங்கள் இரண்டையும் சந்திப்பீர்கள். மிதுன ராசி மாணவர்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கின்றது. இந்த வருடத்தின் ஆரம்ப மாதங்கள், வெளிநாடு சென்று கல்வி பயில நினைக்கும்  மாணவர்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். வீட்டில் சுப நிகழ்சிகள் நடை பெறும்.  பிப்ரவரி மாத நடுப் பகுதி முதல் ஏப்ரல் மாத நடுப் பகுதி வரை  வாழ்க்கைத் துணையுடன் மோதல்களும்  தேவையற்ற கருத்து வேறுபாடுகளும்  ஏற்படும். திருமணமாகாதவர்களுக்கு தக்க துணை கிடைக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.மிதுன ராசி வாசகர்களே வாசகர்களே புத்தாண்டு மிதுன ராசி பலன் 2021 குறித்து முழு விவரம் அறிய தொடர்ந்து வாசிக்கவும்.

உங்கள் பிச்சனைகளுக்கு தீர்வு காண -  ஜோதிட நிபுணர் ஆலோசனைகள்

வேலை மற்றும் தொழில்:

இந்த வருடம் உங்களுக்கு எதை எடுப்பது எதை விடுப்பது என  நீங்கள் அலசி ஆராய்ந்து தேடி எடுக்கும் வகையில் வாய்ப்புகள் பலவும் உங்களை நாடி வரும். அதனை சமார்த்தியமாக பயன்படுத்திக் கொள்வது உங்கள் கையில் தான் உள்ளது.  உங்கள் கடின உழைப்பு மற்றும் சரியான முயற்சிகளின் மூலம் நீங்கள் எதிர் கொள்ளும் தடைகளை வெல்ல முடியும். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலக் கட்டத்தில் உங்களுக்கு பணியிடத்தில் மதிப்பும் பதவி உயர்வும் கிட்டும். ஆனால் செப்டம்பர் முதல் நவம்பர் இடைப்பட்ட காலம் வரை பணியிடத்தில் சக பணியாளர்கள், மேலதிகாரிகள் அல்லது தொழில் கூட்டாளிகளிடம் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். சிலருக்கு வேலை மாற்றம் கிட்டும். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலக் கட்டத்தில் நீங்கள் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு உள்ளது.  

வேலை மற்றும் தொழிலில் வெற்றி  பெற : குரு ஹோமம்

காதல் மற்றும் குடும்பம்:

இந்த வருடம் நீங்கள் குடும்பத்தில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். உங்கள் வீட்டில் சுப நிகழ்சிகள் நடக்கும். குறிப்பாக ஜூன் மாதம் நடைபெற வாய்ப்புள்ளது. உங்கள் குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிக்கும். அதாவது புதிய உறவு ஓன்று உங்கள் வீட்டின் வரவாக இருக்கும். அந்த சமயத்தில் நீங்கள் உங்கள் நேரம், பணம் மற்றும் ஆற்றல் மூன்றையும் செலவு செய்வீர்கள்.  இந்த வருட முடிவில் உங்களுக்கு விருப்பமில்லாத விஷயங்கள் நடந்தாலும் நீங்கள் அதனைப் பொறுமையுடன் கையாள்வீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின் போக்கில் காணப்படும் மாற்றம்   உங்களை பாதிக்கும். மே மற்றும் ஜூன் மாதங்களில் கணவன் மனைவி  நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகளை உங்கள் கண்காணிப்பில் வைத்திருங்கள் 

திருமண உறவில் நல்லிணக்கம் காண : சிவ -சக்தி  ஹோமம் 

பொருளாதாரம் மற்றும் நிதிநிலை:

இந்த வருடம் உங்கள் நிதிநிலை சாதாரணமாக இருக்கும். ஜனவரி, பிப்ரவரி, ஏப்ரல், மே மற்றும் செப்டம்பர் மாதங்களில் உங்களுக்கு செல்வம் சேர்வதற்கான வாய்ப்பு உள்ளது. உங்கள் செலவுகளும் அதிகரிக்கும் என்பதால் வரவுக்கேற்ற செலவுகளாக உங்க செலவுகளை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்களை சந்தோஷப்படுத்த நீங்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் சிலவற்றை வாங்குவீர்கள்.   நீங்கள் சொத்து வாங்கல் மற்றும் விற்றல் குறித்த முடிவுகள் எடுக்கும் போது நன்மை தீமைகளை  ஆராய்ந்து  முடிவு எடுக்க வேண்டும். இந்த வருடம் முதலீடுகளை மேற்கொள்ளும் போது அதன் நன்மை தீமைகளை ஆராய்ந்து முடிவெடுக்க  வேண்டியது அவசியம்.

நிதிநிலை மேம்பட : மகாலட்சுமி ஹோமம்

மாணவர்கள் மற்றும் கல்வி:

மிதுன ராசி மாணவர்களுக்கு இந்த வருடம் நல்ல பலன்கள் கிடைக்கும்  என்றாலும்  சில ஏமாற்றங்களையும் சந்திக்க வேண்டியிருக்கும். வெளிநாடு சென்று மேற்படிப்பு படிக்க முயற்சி  செய்பவர்களின் முயற்சியில் வெற்றி கிட்டும்.  இந்த வாய்ப்பு பெரும்பாலும்  ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் கிட்டும். இந்த வருடம் நீங்கள் கல்வி சம்பந்தமான போட்டித் தேர்வுகளில் வெற்றிபெறுவீர்கள். படிப்பை முடித்து விட்டு வேலை தேடிக் கொண்டு இருப்பவர்கள் இன்னும் சிறிது காலம் பொறுமையுடன் இருக்க வேண்டும். இந்த வருடம்  வெளிநாடு சென்று பயில விரும்பும் மாணவர்களை விட வேலை வேண்டி செல்பவர்களுக்கு இது சாதகமான வருடமாக இருக்கும். வெளிநாட்டுக்கு பிரயாணம் செய்யும் போதும் அங்கு தங்கியிருக்கும் போதும் நீங்கள் எல்லா வகையிலும் கவனமுடன் இருக்க வேண்டும்.  

கல்வியில் வெற்றி பெற – புதன் ஹோமம் 

ஆரோக்கியம்:

இந்த வருடம் நீங்கள் உங்கள் உடல் ஆரோக்கியத்தை  காத்துக் கொள்ள வேண்டும். சில உடல் உபாதைகளை நீங்கள் சந்திக்க நேரும். குறிப்பாக ரத்தம் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் உணவு உண்ணும் முறை மற்றும் வாழ்க்கை முறையில் கவனமாக இருங்கள். துரித உணவு  உங்கள் ஆரோக்கியத்தை சீர் குலைக்கும்.  உங்கள் கண்கள், வயிறு மற்றும் தூக்கம் இவைகளில் கவனம் தேவை. யோகா மற்றும் தியானம் போன்றவற்றை தினமும் மேற்கொள்ளுங்கள். அதன் மூலம் உங்கள் மனப் பதட்டம் குறையும்.  வாழ்வில் வரும் ஏற்ற இறக்கங்கள் குறித்து நீங்கள் மனம் தளராதீர்கள். பொறுமையுடன் எந்த விஷயத்தையும் கையாண்டால் உங்கள் ஆரோக்கியத்தை காத்துக் கொள்ளலாம். 

ஆரோக்கியம் மேம்பட : தன்வந்தரி ஹோமம் 

வீட்டில் செய்யக் கூடிய பரிகாரங்கள்:

•    ஜோதிடர்கள் ஆலோசனை பெற்று மரகதக் கல்லை அணிந்து கொள்ளுங்கள்
•    புதன் கிழமை அன்று ஏழை மற்றும் அனாதைக் குழந்தைகளுக்கு பச்சை நிற ஆடை தானம் அளியுங்கள்.
•    ஓம் ஸ்ரீ புதாய நமஹ – இந்த புதன் மந்திரத்தை  108 முறை ஜெபிக்கவும்
•    பச்சைக் காய்கறிகள் மற்றும் கொத்தமல்லியை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
•    குருமார்கள் மற்றும் வயதானவர்களுக்கு உதவி செய்யுங்கள் 
•    சனிக்கிழமைகளில் காகம் மற்றும் வளர்ப்பு விலங்குகளுக்கு உணவளியுங்கள்

அனுகூலமான மாதங்கள் : ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், நவம்பர், டிசம்பர்
அனுகூலமற்ற மாதங்கள் : ஜனவரி, பிப்ரவரி, மார்ச், அக்டோபர்

(இந்த மாதங்களில் உங்களுக்கு விருப்பமான கடவுள் பிரார்த்தனை மேற்கொள்ளுங்கள். மேலும் பரிந்துரைக்கப்படும்  பரிகாரங்களை மேற்கொள்ளுங்கள்)

banner

Leave a Reply

Submit Comment