AstroVed Menu
AstroVed
search
search
x
cart-added The item has been added to your cart.

மேஷ ராசி பலன் 2021 - Aries Horoscope 2021 in Tamil

dateSeptember 16, 2020

மேஷ ராசி 2021 பொதுப் பலன்கள்:

மேஷ ராசி அன்பர்களே ! வருட கிரகங்கள் என்று கூறப்படும் குரு, சனி, மற்றும் ராகு-கேதுவின் சஞ்சாரம் காரணமாக இந்த வருடம் நன்மையையும் தீமையும் கலந்த பலன்களை நீங்கள் பெறுவீர்கள். நிழலின் அருமை வெயிலில் தானே தெரியும்.  சில கஷ்டங்கள் இருந்தால் தான்  சந்தோஷத்தை நாம் அனுபவிக்க முடியும். மகிழ்ச்சி தரக் கூடிய விஷயங்கள் யாவை? எந்த விஷயத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை பார்க்கலாம் வாருங்கள். இந்த வருடம் உங்களுக்கு நன்மை தீமை என இரண்டு பலன்களும் கலந்து காணப்படும்.  உங்கள் தனிப்பட்ட வாழ்வில் சில சவால்களை நீங்கள் சந்திக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும்.  ஏற்ற இறக்கமான நிதிநிலை இருக்கும். கணவன் மனைவி உறவில் இணக்கமான சூழ்நிலை இருப்பது கடினம். நீங்கள் விரும்பும் வகையில் உங்கள் வாழ்க்கைத் துணையின் நடவடிக்கை இல்லாதது உங்களுக்கு மன வருத்தத்தை அளிக்கும்.  குடும்ப வாழ்வில் பதட்டமான சூழ்நிலை நிலவும் என்றாலும் படிப்படியாக இந்த நிலை சீராகும். குடும்பத்தில் உங்கள் பொறுப்புகள் அதிகமாகும். உங்கள் பொருளாதாரா நிலை சிறப்பாக இருக்கும். உங்கள் நிதிநிலையில் காணும் முன்னேற்றம் உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். மேஷ ராசி மாணவர்களுக்கு சில சவால்களை சந்தித்த பின்  கல்வியில் வெற்றி கிடைப்பது திண்ணம்.  மேஷ ராசி வாசகர்களே வாசகர்களே புத்தாண்டு மேஷ ராசி பலன் 2021 குறித்து முழு விவரம் அறிய தொடர்ந்து வாசிக்கவும்.

உங்கள் பிச்சனைகளுக்கு தீர்வு காண -  ஜோதிட நிபுணர் ஆலோசனைகள்

வேலை மற்றும் தொழில் 

வேலை மற்றும் தொழிலைப் பொறுத்தவரை உங்களுக்கு யோகமான வருடம் தான் என்று சொல்ல வேண்டும்.  பணியில் ஸ்திரத் தன்மை இருக்கும். பணியிடத்தில் பிறரின் ஒத்துழைப்பையும் நீங்கள் பெறுவீர்கள். பணியில் ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்றவையும் உங்களை நாடி வரும் காலக் கட்டமாகத் தான் இந்த வருடம் உங்களுக்கு அமையும்.  பணி நிமித்தமாக வெளி நாடு செல்லும் பாக்கியம் கூட ஏற்படும்.  அதன் மூலம் உங்கள் வருமானம் உயரும். நிதிநிலை மேம்படும்.  என்றாலும் நீங்கள் கவனமாகப் பணியாற்ற வேண்டும். நீங்கள் சொந்தத் தொழில் அல்லது வியாபாரம் செய்பவர் என்றால் இன்னும் சிறிது கூடுதல் கவனத்துடன் பணியாற்ற வேண்டும். வீடு விற்றல் வாங்கல் தொழிலைச் செய்பவர்கள் இந்த வருடம்  மேன்மையான பலன்களைப் பெறுவார்கள். 

வேலை மற்றும் தொழிலில் வெற்றி பெற – குரு ஹோமம் 

காதல் மற்றும் குடும்பம்:

குடும்ப வாழ்க்கை மற்றும் உறவைப் பொறுத்தவரை இந்த வருடம் சாதாரணமான வருடமாகத் தான் இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்படும் சூழல்நிலை ஏற்படலாம். அவர்களுடன் பேசும் போது நீங்கள் கவனமாகப் பேச வேண்டும்.  கணவன் மனைவி உறவில் சில மோதல்கள் மற்றும் விரிசல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நீங்கள் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.  உங்கள் கடுமையான பேச்சினால் அவர்கள் மனம் புண்படாத வகையில் பார்த்துக் கொள்வது உங்கள் கையில் தான் உள்ளது. மற்றபடி குடும்பத்தில் அமைதி நிலவும். முக்கியமாக பிப்ரவரி மார்ச் மாதம் குடும்ப வாழ்வில் இனிமை பொங்கும். அந்தக் காலக் கட்டத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையின் முழு ஒத்துழைப்பையும் ஆதரவையும் நீங்கள் பெறுவீர்கள்.  திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கை கூடும். குழந்தையற்ற தம்பதிகள் குழந்தைப் பேறு பெறுவார்கள்.  குழந்தைச் செல்வம் உள்ளவர்கள் தங்கள் மக்களின் கல்வி முன்னேற்றம் கண்டு மகிழ்வார்கள். திருமண வயதில் இருக்கும் தங்கள் மகன் / மகளுக்கு திருமணம் நடக்கக் காண்பார்கள். 

திருமண உறவில் நல்லிணக்கம் காண – சிவ-சக்தி ஹோமம்

பொருளாதாரம் மற்றும் நிதிநிலை:

இந்த வருடம் உங்கள் பொருளாதார நிலை ஸ்திரத் தன்மையின்றி சிறிது ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும். வருட முற்பகுதியை விட பிற்பகுதியில் உங்கள் நிதிநிலையில் நீங்கள் முன்னேற்றம் காண்பீர்கள்.  நீங்கள் வெளிநாடு சென்று கூட பொருள் ஈட்டுவீர்கள். அதே சமயத்தில் சில இழப்புகளையும் நீங்கள்  சந்திக்க நேரும். நீங்கள் வீடு வண்டி, வாகனம் போன்றவற்றை வாங்குவீர்கள். உங்கள் பெற்றோரின் உடல் நிலை குறித்த மருத்துவச் செலவுகளையும் இந்த வருடம் நீங்கள் மேற்கொள்வீர்கள். 

நிதிநிலை மேம்பட: குபேர ஹோமம்

மாணவர்கள் மற்றும் கல்வி:

மேஷ ராசி மாணவர்களுக்கு இந்த வருட ஆரம்பத்தில் நன்மை தீமை இரண்டும் கலந்த பலன்கள் காணப்படும்.  முயற்சி உடையார் இகழ்ச்சியடையார் என்பதற்கிணங்க இந்த வருடம் நீங்கள் மேற்கொள்ளும் கடின உழைப்பிற்கு தக்க பலன்களை நீங்கள் அடைந்தே தீருவீர்கள். உங்கள் கவனம் சிதறாமல் மனதை ஒருமுகப்படுத்தி நீங்கள் செயலாற்றினால் வெற்றியின் உச்சத்தை நீங்கள்  தொடலாம். போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் வெற்றி வாகை சூடுவார்கள். வெளி நாடு செல்ல விரும்பும் மாணவர்கள் தங்கள் கனவு நனவாகக் காண்பார்கள். கல்வி இறுதி  ஆண்டு முடித்த மாணவர்கள் வேலை வாய்ப்பு கிடைக்கப் பெறுவார்கள்.    

கல்வியில் வெற்றி பெற – ஹயக்ரீவ ஹோமம்

ஆரோக்கியம்:

இந்த வருடம் நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதிகப் பணிகள் காரணமாக உங்கள் மனதில் பதட்ட நிலை காணப்படும். அதிக நேரம் உட்கார்ந்து  பணி புரிவதால் முதுகு வலி ஏற்பட வாய்ப்புள்ளது. அஜீரணக் கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது.  முறையான உணவு மற்றும் தூக்கம் மேற்கொள்வதன் மூலம் நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை  தக்க வைத்துக் கொள்ளலாம். 

ஆரோக்கியம் மேம்பட : தன்வந்தரி ஹோமம்

வீட்டில் செய்யக் கூடிய பரிகாரங்கள் :

•    ஜோதிடர் ஆலோசனையைப் பெற்று சிகப்பு பவளம் அணியவும்.
•    பிரதி செவ்வாய்க்கிழமை மற்றும் சனிக்கிழமை  ஹனுமான் சாலிசா , ஹனுமான் மந்திரம் மற்றும்  சுந்தர காண்டம் பாராயணம் செய்யவும். 
•    யாரிடமும் கோபம் கொள்ளாதீர்கள். கடின வார்த்தைகளைப் பேசாதீர்கள். 
•    முரண்பட்ட கருத்து ஏற்படும் இடங்களில் வாதத்தில் பங்கு கொள்ளாதீர்கள். 
•    தினுமும் சூரிய வழிபாடு மேற்கொள்ளுங்கள்.
•    ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுங்கள்


அனுகூலமான மாதங்கள் : ஏப்ரல், மே. ஜூன், ஜூலை, ஆகஸ்ட், நவம்பர், டிசம்பர்
அனுகூலமற்ற மாதங்கள் : ஜனவரி, பிப்ரவரி, மார்ச், செப்டம்பர், அக்டோபர்


(இந்த மாதங்களில் உங்களுக்கு விருப்பமான கடவுள் பிரார்த்தனை மேற்கொள்ளுங்கள். மேலும் பரிந்துரைக்கப்படும்  பரிகாரங்களை மேற்கொள்ளுங்கள்)
 


banner

Leave a Reply