Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

ரிஷப ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | Rishaba Rasi Sani Peyarchi Palangal 2020-2023

November 29, 2019 | Total Views : 7,384
Zoom In Zoom Out Print

பொதுப்பலன்கள்:

ரிஷப  ராசி அன்பர்களே!  தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு சனி பெயர்கிறார். இந்த பெயர்ச்சியில் , சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாம் ராசியில் சஞ்சாரம் செய்கிறார். ஆட்சி வீடான மகரத்தில் இருக்கும் சனி பகவான் உங்களுக்கு சாதகமான பலன்களை அளிப்பார்.  மகரத்தில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான் அங்கிருந்து உங்கள் ராசிக்கு மூன்றாம், ஆறாம், மற்றும் பதினொன்றாம் வீட்டைப் பார்வையிடுகிறார்.  மூன்றாம் வீடு  முயற்சியையும், ஆறாம் வீடு உத்தியோகத்தையும் பதினொன்றாம் வீடு லாபத்தையும் குறிக்கும்.

எனவே ரிஷப ராசி அன்பர்கள் அதிக முயற்சிகள் மூலம் தனவரவு, உத்தியோக மேன்மை மற்றும் வெற்றி வாய்ப்பை உருவாக்கிக்கொள்ளலாம்.

மேலும் விவரங்கள் அறிய சனி பெயர்ச்சி பலன்கள்

இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!

குடும்பம்:

குடும்ப உறவில் சிறு சிறு பிரச்சினைகள் வந்து போகும். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விலகும். காதலர்கள் தங்கள் காதல் உறவை திருமண பந்தமாக மாற்றிக் கொள்ள ஏற்ற தருணம். வயது முதிர்ந்த ரிஷப ராசி அன்பர்கள் ஆன்மீக சுற்றுலா மேற்கொள்வதன் மூலம் அமைதி காணலாம்.

பரிகாரங்கள்:

  • சனி ஹோரையில் கருப்பு எள் கலந்த சாதத்தை காகத்திற்கு உணவாக கொடுக்கலாம்.
  • தானியங்கள் அளிக்கவும்.

மேலும் விவரங்கள் அறிய சனி பெயர்ச்சி பலன்கள்

உடல்நலம்:

ரிஷப ராசியைச் சேர்ந்த குழந்தைகளின் ஆரோக்கியம் சீராக இருக்கும்.  பெண்கள் மற்றும் வயதில் மூத்தவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். பெண்களுக்கு கர்பப்பை சார்ந்த உடல் நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சிலருக்கு மூக்கு காது தொண்டை போன்றவற்றில் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. உணவே மருந்து என்பதற்கேற்ப சிறந்த உணவு முறையைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் உங்கள் உடல் நலத்தை சிறப்பாக பேணிக் காக்க இயலும்.  

பரிகாரங்கள்:

  • ஊனமுற்றவர்களுக்கு வஸ்திர தானம் செய்வதன் மூலம் நல்ல ஆரோக்கிய உடல்நலம் பெறலாம்.

மேலும் விவரங்கள் அறிய சனி பெயர்ச்சி பலன்கள்

பொருளாதாரம்:

பொருளாதார நிலையில் தேக்க நிலையை சந்தித்து வந்த ரிஷப ராசி அன்பர்கள் சனியின் மகரப்பெயர்ச்சிக்குப் பின் பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றத்தை காண்பர். வீடு மற்றும் நிலம் வாங்குவதற்கு வங்கிக்கடன் அமைய சிரமப்பட்டவர்களுக்கு  எளிதில் வாங்கிக்கடன் அமையும். பூர்வீக சொத்துக்களின் மூலமாக தன வருவாயை பெருக்கிக்கொள்ள முடியும். தரகு தொழில் செய்பவர்கள் பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். ஊக வணிகமான பங்கு வர்த்தக தொழில் புரிபவர்கள் மிதமான தன லாபமும் மிதமான பொருளாதார முன்னேற்றமும் அடைவார்கள்.

பரிகாரங்கள்:

  • பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு தன ரீதியான உதவிகள் புரிந்து வர மேன்மை உண்டாகும்.

மேலும் விவரங்கள் அறிய சனி பெயர்ச்சி பலன்கள்

இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!

தொழில்:

தொழில் அல்லது வேலை எதுவாக இருந்தாலும் இந்த சனிப் பெயர்ச்சி உங்களுக்கு ஓரளவிற்கு சாதகமாக உள்ளது எனலாம். அடிமைத் தொழில் செய்பவர்கள் தங்கள் வேலையில் பிரகாசிக்க சிறந்த காலக் கட்டம் ஆகும்.  தகவல் தொடர்பு, விளம்பரம் மற்றும் பயணம் சார்ந்த தொழில் செய்பவர்கள் தங்கள் தொழிலில் முன்னேற்றம் காண்பார்கள். புதிய தொழில்  தொடங்க இது சாதகமான நேரம் என்பதால் உங்கள் முயற்சிகளை இந்தக் காலகட்டத்தில் மேற்கொள்வது நல்லது.

பரிகாரங்கள்:

  • பகல் வேளையில் உபவாசம் இருந்து இரவு மட்டும் உணவு உட்கொண்டு வர தொழில் ரீதியாக முன்னேற்றம் ஏற்படும்.

மேலும் விவரங்கள் அறிய சனி பெயர்ச்சி பலன்கள்

படிப்பு:

இந்த சனிப் பெயர்ச்சியின் ஆரம்ப காலத்தில் கல்வி பயிலும் மாணவ மாணவியருக்கு கல்வியில் கவனச் சிதறல் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நிலை மார்ச் மாதத்திற்குப் பிறகு படிப்படியாக சீரடையும். படிப்பில் கவனம் அதிகரிக்கும். கல்லூரி முடித்துவிட்டு உயர் கல்வி சேர நினைக்கும் மாணவர்களின் விருப்பங்கள் நிறைவேறுவதில் சில தடங்கல்கள் இருக்கும். தாமதங்கள் ஏற்படும். என்றாலும் மனம் தளர வேண்டாம். விரக்தி அடைய வேண்டிய அவசியமில்லை. முயற்சி திருவினையாக்கும் என்பதனை மனதில் கொண்டு முயற்சி செய்வதன் மூலம் நீங்கள் உயர்ந்த நிலையை அடைய இயலும். 

பரிகாரங்கள்:

  • 2019க்கு பிறகு குரு ஹோமம் செய்ய படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
  • இல்லாத குழந்தைகளுக்கு படிப்பதற்கு உதவி செய்வதன் மூலம் படிப்பில் முன்னேற்றத்தைக் காணலாம்.

மேலும் விவரங்கள் அறிய சனி பெயர்ச்சி பலன்கள்

பொதுவான பரிகாரம்

  • ஹோமம் செய்வதன் மூலம் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் உயர்வை சந்திக்கலாம்.
banner

Leave a Reply

Submit Comment