கடக ராசி சனி பெயர்ச்சி பலன்கள் | Kadaga Rasi Sani Peyarchi Palangal 2020-2023

பொதுப்பலன்கள்:
கடக ராசி அன்பர்களே! தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு சனி பெயர்கிறார். இந்த பெயர்ச்சியில் , சனி உங்கள் ராசிக்கு ஏழாம் ராசிக்கு பெயர்வதால் கண்டக சனியாக அமைகின்றது. என்றாலும் அதனை நினைத்து நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. சனியின் பார்வை பாக்கிய ஸ்தானமாகிய 9 ஆம் ஸ்தானத்திலும், சுக ஸ்தானமாகிய 4 ஆம் ஸ்தானத்திலும் விழுகின்றது. எனவே வீடு, வாகனம், நிலம் போன்றவற்றால் ஆதாயம் கிடைக்கும். நீங்கள் நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருந்த வெளி நாட்டு வேலை மற்றும் படிப்பு சம்பந்தமான உங்கள் எதிர்பார்ப்புகள் யாவும் நிறைவேறக் காண்பீர்கள். இந்த வகையில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை காணப்படும். எனவே இந்த சனிப் பெயர்ச்சி உங்கள் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும் என்று நீங்கள் நம்பலாம்.
மேலும் விவரங்கள் அறிய சனி பெயர்ச்சி பலன்கள்
இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!
குடும்பம்:
உங்கள் ராசிக்கு ஏழில் சனி பிரவேசிப்பதால் பெயர்ச்சியின் ஆரம்ப காலக் கட்டத்தில், குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சினைகள் ஏறப்டும். தம்பதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படும். பொறுமையாகவும் உணர்ச்சி வசப்படாமலும் நடந்து கொள்வதன் மூலம் ஓரளவு சகஜ நிலையை உருவாக்கிக் கொள்ளலாம். இந்தச் சூழல் ஒருவருட காலம் நீடிக்க வாய்ப்புள்ளது. எனவே உறவு முறையில் கவனம் தேவை. 2021 ஜனவரிக்குப் பிறகு தம்பதியரிடையே இணக்கமான சூழல் உருவாகும். பிற குடும்ப உறுப்பினர்களிடமும் சுமூகமான உறவை பராமரிக்க இயலும். விளையாட்டுப் போக்கில் இருந்த உங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளில் சில சிறந்த மாற்றங்களைக் காண்பீர்கள். படிப்பில் அவர்கள் நாட்டம் அதிகரிக்கும். உங்கள் வீட்டில் இருக்கும் மூத்தவர்களும் அவர்கள் படிப்பிற்கு உறுதுணையாக இருப்பார்கள்.
பரிகாரங்கள்:
மேலும் விவரங்கள் அறிய சனி பெயர்ச்சி பலன்கள்
உடல்நலம்:
ஆரோக்கியமான மனம் இருந்தால் தான் ஆரோக்கியமான உடல் நிலை இருக்கும். இந்த சனிப்யெயர்ச்சியின் ஆரம்ப காலத்தில் உங்கள் உணர்ச்சிப்பூர்வமான எண்ணங்கள் காரணமாக உங்கள் மன அமைதி கெடும். அமைதியற்ற மன நிலை காரணமாக உங்கள் ஆரோக்கியம் பாதிக்கும். இந்த நிலை மே 2019 க்கு பிறகு மாறும். எனவே பொறுமை கடைபிடிக்க வேண்டும். தினமும் தியானம் மேற்கொள்வதன் மூலம் உங்கள் மனதை ஒரு கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள இயலும். தியானம் மேற்கொள்வதன் மூலம் உங்கள் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். கடக ராசி ஆண்களுக்கு இதயம் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்கள் கல்வி பயிலும் மாணவராக இருந்தால் ஞாபகமறதி ஏற்பட வாய்ப்புள்ளது.
பரிகாரங்கள்:
மேலும் விவரங்கள் அறிய சனி பெயர்ச்சி பலன்கள்
பொருளாதாரம்:
சுய தொழில் செய்யும் கடக ராசி அன்பர்கள் இந்த பெயர்க்சியில் தொழிலில் மேம்பாடு காண்பார்கள். அதன் மூலம் பொருளாதார முன்னேறம் கண்டு மகிழ்வார்கள். உங்கள் பொருளாதார முன்னேற்றத்திற்கு உங்கள் மனைவி உறுதுணையாக இருப்பார். பங்கு வர்தகத்தில் ஈடுபட்டவர்கள் இந்த பெயர்ச்சியில் சிறிது பின்னடைவை சந்திப்பார்கள். அது மட்டுமின்றி விரயம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே கவனமுடன் செயலாற்ற வேண்டும். தரகுத் தொழில் , வீடு மற்றும் நிலம் விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்கள் இந்த பெயர்ச்சியில் சிறந்த முன்னேற்றம் காண்பார்கள். எனவே இந்த காலக் கட்டத்தை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பரிகாரங்கள்:
மேலும் விவரங்கள் அறிய சனி பெயர்ச்சி பலன்கள்
இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!
தொழில்:
பணியில் இருக்கும் கடக ராசி அன்பர்களுக்கு, வெகு நாட்களாக காத்துக் கொண்டிருந்த உத்தியோக உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதனால் பொறுப்புகளும் அதிகாரிக்கும். வேலைப் பளு கூடும். சுய தொழில் செய்யும் கடக ராசி அன்பர்கள் இந்த காலக் கட்டத்தை தங்கள் முன்னேற்றத்த்திற்கு பயன்படுத்திக் கொள்வதன் மூலம் சிறந்த பலன்களைக் காண இயலும். பங்கு வர்த்தகம், குறிப்பாக ஊக வணிகம் எதிர்பார்த்த லாபத்தையும் ஏற்றத்தையும் அளிக்காது. எனவே அதில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.
பரிகாரங்கள்:
மேலும் விவரங்கள் அறிய சனி பெயர்ச்சி பலன்கள்
கல்வி
கல்வி பயிலும் மாணவர்களுக்கு கவனிப்பு திறன் மற்றும் கிரகிக்கும் ஆற்றல் அதிகரிக்கும். கல்வியில் மட்டுமன்றி இசை, வாய்பாட்டு போன்றவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல தேர்ச்சி பெற்று நல்ல மதிப்பெண்களைப் பெற்று மேற்கல்விக்கு தயாராவார்கள். அதில் வெற்றியும் பெறுவார்கள். ஆராய்ச்சிக் கல்வியில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் அரசின் மூலம் உதவித் தொகை பெறுவார்கள். கடக ராசியைச் சார்ந்த மாணவிகள் படிப்பில் முதல் நிலை வகிப்பார்கள். மாணவர்கள் கலைத்துறையில் பரிமளிப்பார்கள்.
பரிகாரங்கள்:
மேலும் விவரங்கள் அறிய சனி பெயர்ச்சி பலன்கள்
