AstroVed Menu
AstroVed
search
search

கும்ப ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | Kumbam Rasi Sani Peyarchi Palangal 2020-2023

dateNovember 29, 2019

பொதுப்பலன்கள்:

கும்ப ராசி அன்பர்களே! தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு சனி பெயர்கிறார். இந்த பெயர்ச்சியில், சனி உங்கள் ராசிக்கு பன்னிரண்டாம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார். இந்த ஸ்தானம் விரய ஸ்தானம் எனப்படும். இங்கு சஞ்சாரம் செய்யும் சனி பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் ஸ்தானத்தையும், ஆறு மற்றும் ஒன்பதாம் ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார். இரண்டாம் இடம் என்பது தனம் மற்றும் குடும்ப ஸ்தானத்தை சுட்டிக் காட்டும். ஆறாம் இடம் ருண (கடன்) ரோக சத்துரு ஸ்தானத்தை சுட்டிக் காட்டும். ஒன்பதாம் இடம் பாக்கிய ஸ்தானத்தை சுட்டிக் காட்டும்.

சனியின் பார்வை மூலம் உங்கள் உத்தியோக நிலை உயரும். பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டு பண வரவு அதிகரிக்கும். பாக்கிய ஸ்தானத்தில் சனியின் பார்வை படுவதால் எதிர்பாராத அதிர்ஷ்டம் ஏற்படும். வெளி நாட்டு பயணம் வெளி நாட்டு உத்தியோகம் என வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும்.

மேலும் விவரங்கள் அறிய சனி பெயர்ச்சி பலன்கள்

 

சனிப்பெயர்ச்சி 2020-2023 சுய முன்னேற்றம் காண சனி பெயர்ச்சி சிறப்பு ஹோமம் மற்றும் பூஜையில் பங்கு கொள்ளுங்கள்

இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!

குடும்பம்:

திருமணமாகியும் குழந்தைப் பேறு இல்லையே என ஏங்குபவர்களுக்கு அந்த ஏக்கம் தீரும் வகையில் புத்திர பாக்கியம் கூடும். புத்திர பாக்கியம் தாமதமான தம்பதியர் விரைவிலேயே புத்திர பாக்கியம் பெறுவார்கள். கும்ப ராசியைச் சேர்ந்த காதலர்களுக்கு காதலில் வெற்றி கிட்டும். திருமணத்திற்கு காத்திருப்பவர்களுக்கு, திருமண முயற்சியில் வெற்றி கிட்டும். திருமணமான தம்பதியரின் மனதில் அன்னியோன்யம் அதிகரிக்கும். முதுமை பருவத்தில் உள்ளவர்கள் சில மருத்துவ செலவுகளை மேற்கொள்ள நேரும். உத்தியோகத்திற்கு செல்லும் பெண்கள் தங்கள் பணியை சிறப்பாக ஆற்றி உத்தியோக உயர்வு பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். அதன் மூலம் அவர்களின் பொருளாதார நிலையும் உயரும்.

பரிகாரங்கள்:

  • உபவாசம் இருந்து துர்கையம்மன் சன்னதியில் பசுநெய் விளக்கு ஏற்றி வர குடும்ப முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவும்.
  • பருவத்தினருக்கு இனிப்பு பதார்த்தத்தை அளிப்பதன்மூலம் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.

மேலும் விவரங்கள் அறிய சனி பெயர்ச்சி பலன்கள்

உடல்நலம்:

கும்ப ராசி அன்பர்கள் இந்த பெயர்ச்சி காலத்தில் தங்கள் உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும். தூக்கத்திற்கு நேரம் ஒதுக்க வேண்டும். ஆழ்ந்த உறக்கம் மேற்கொள்ள வேண்டும். தூக்கமின்மை பிரச்சனையிலிருந்து உங்களை காத்துக் கொள்ள நீங்கள் உடற்பயிற்சி மற்றும் யோகா செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு பேச்சு தாமதப்படும். முதுமைப் பருவத்தில் இருப்பவர்கள் இருதயம் சம்பந்தப்பட்ட பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும். எனவே உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கும்ப ராசியைச் சேர்ந்த பெண்களுக்கு உடல் பருமன் பிரச்சினை ஏற்படும். சத்தான மற்றும் சரிவிகித உணவை உட்கொள்வதன் மூலம் மற்றும் நடைப் பயிற்சி மேற்கொள்வதன் மூலம் நீங்கள் இந்தப் பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.

பரிகாரங்கள்:

  • மஞ்சள் ஆடை உடுத்திவர உடல் பாதிப்புகள் குறையும்.

மேலும் விவரங்கள் அறிய சனி பெயர்ச்சி பலன்கள்

பொருளாதாரம்:

கும்ப ராசி அன்பர்களுக்கு இப்பொழுது ஏழரைச் சனி காலக் கட்டம் ஆகும். கருமமே கண்ணாக இருந்து கடினமாக உழைப்பதன் மூலம் பிரச்சினைகளில் இருந்து விடுபட இயலும். நல்ல பொருளாதார முன்னேற்றம் கிட்டும். பணத்தை முதலீடு செய்து தொழில் செய்பவர்கள் தங்கள் முதலீட்டின் மூலம் சிறந்த லாபம் காண இயலாது. மருத்துவ துறையைச் சார்ந்தவர்கள் மற்றும் மருத்துவ தொழில் செய்பவர்கள் தொழிலை சிறப்பாக செய்வதன் மூலம் பொருளாதார மேன்மை அடைய இயலும். அரசுத் துறையில் பணிபுரிபவர்கள் சிறப்பான முறையில் பணி செய்து தங்கள் பொருளாதார முன்னேற்றத்தை உயர்த்திக் கொள்வார்கள்.

பரிகாரங்கள்:

  • எப்பொழுதும் தனது மணிபர்ஸில் வைத்திருப்பதன் மூலம் பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.

மேலும் விவரங்கள் அறிய சனி பெயர்ச்சி பலன்கள்

இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!

தொழில்:

அறிவியல் துறை சார்ந்த கல்வி கற்றவர்கள் தங்கள் வேலை வாய்ப்பு அதிகரிக்கக் காண்பார்கள். சட்டம் பயின்ற மாணவர்கள் சிறந்த நிறுவனத்தில் வேலை வாய்ப்பை பெறுவார்கள். அயல் நாட்டு சுற்றுலா அமைப்பாளர்கள் தங்கள் தொழிலில் மேன்மை கிடைக்கப் பெறுவார்கள். மனோதத்துவ நிபுணர்கள் மற்றும் நல்வாழ்வியல் பயிற்றுனர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் அல்லது தொழிலில் மேம்பாடு கிடைக்கும். அதன் மூலம் பண வரவு அதிகரிக்கும். வருமானம் உயரும்.

பரிகாரங்கள்:

  • தொழில் முன்னேற்றத்திற்கு சனிக்கிழமை தோறும் நல்லெண்ணை குளியல் செய்துவரவும்.
  • அன்னதானம் செய்து வர தொழில் முன்னேற்றம் காணலாம்.

மேலும் விவரங்கள் அறிய சனி பெயர்ச்சி பலன்கள்

படிப்பு:

கும்ப ராசியைச் சார்ந்த கல்வி பயிலும் மாணவர்கள் சனிப்பெயர்ச்சியின் ஆரம்ப காலகட்டத்தில் கல்வியில் மந்தமான போக்குடன் காணப்படுவார்கள். என்றாலும் இந்த நிலை அக்டோபர் 2020க்கு பிறகு மாறும். படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.அறிவியல் துறை மாணவர்கள் பிற துறை மாணவர்களைக் காட்டிலும் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். தொல்லியல் மற்றும் கடற் பொறியியலில் ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு வெளி நாடுகளில் தேவை அதிகரிக்கும்.

பரிகாரங்கள்:

  • பார்வை அற்றவர்களுக்கு வஸ்திரம் மற்றும் காலணிகளை தானமாக கொடுத்து படிப்பில் நல்ல முன்னேற்றம் அடையலாம்.

மேலும் விவரங்கள் அறிய சனி பெயர்ச்சி பலன்கள்

பொது பரிகாரம்


banner

Leave a Reply