sign in Account
x
x
Search
x
ருத்ர ஹோமம்

ருத்ர ஹோமம்

ருத்ர ஹோமம் – இந்த ஹோமம் ஒன்பது கிரகங்களை சாந்திப்படுத்தி அதன் மூலம் தோஷங்களை நிவர்த்தி செய்து நன்மை தரும் பலன்களை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்றது. மேலும் இதன் மூலம் லௌகீக மற்றும் ஆன்மீக இன்பங்களைப் பெற இயலும்.
{{variation.Name}}:
{{variationdetail.VariationName}}
{{oldPrice}} You Save {{Save}}
{{Price}}
இலவச ஷிப்பிங்
அளவு:
{{requiredQty}}
{{prdvariation.ParentName}}:
{{variation.Name}}
{{childname.ChildVariationTypeName}}:
{{childDetails.VariationName}}

புராதனச் சிறப்பு வாய்ந்த ஹோமம்

அறிமுகம்

Rudra Homa

படைத்தல், காத்தல், அழித்தல் எனும் முத்தொழில்களைப் புரியும் மும்மூர்த்திகளுள் ஒருவர், சிவபெருமான். சிவபெருமானின் அம்சமே ருத்ர மூர்த்தி வடிவம் ஆகும். ரிக் வேதம், ருத்ரனை, “வல்லவருக்குள் வல்லவர்” எனப் போற்றுகிறது. இந்த சக்தி வாய்ந்த ருத்ரனுக்கு அர்ப்பணிக்கப்படும் ஹோமமே, ருத்ர ஹோமம் ஆகும்.

ருத்ரனை ஆராதிக்கும் வகையில் செய்யப்படும் இந்த ஹோமம், பயம் மற்றும் கவலையைப் போக்கி, பாதுகாப்பை அளிக்க வல்லது. ருத்ரனின் அருளால், இக பர இன்பங்களை அள்ளித் தரக் கூடியது. மேலும், நவக்கிரகங்கள் எனப்படும் சக்தி வாய்ந்த ஒன்பது கோள்களை சாந்தப்படுத்தி, அதன் மூலம் தோஷங்களை நிவர்த்தி செய்து, நன்மை தரும் பலன்களை அதிகரிப்பதற்காகவும், இது மேற்கொள்ளப்படுகின்றது.

ருத்ர ஹோமத்தின் சிறப்பம்சங்கள்

ருத்ர ஹோமம், மன இருளை அகற்ற வல்லது. தீய விளைவுகளை அழிக்க வல்லது. பயத்தைப் போக்க வல்லது. இந்த ஹோமத்திலிருந்து எழும் புனித ஆற்றல்கள், உங்கள் வாழ்க்கையையே நல்ல முறையில் மாற்றியமைக்கும் வல்லமை படைத்தவை. பாதுகாப்பையும், வாழ்வின் நலன்கள் பலவற்றையும் அளிக்க வல்லவை. எதிர்மறைத் தாக்கங்களைப் போக்கி, அமைதியை அளிக்கக் கூடியவை. ஆகவே, இந்த ஹோமத்தில் பங்கு கொண்டு, பயம், கவலை போன்ற பலவீனங்களை அகற்றி, இன்னல்களிலிருந்து உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்.

பாரம்பரிய முறை ஹோமம்

ருத்ர ஹோமம், வேத சாஸ்திரங்களை நன்கு கற்றறிந்த, அனுபவம் வாய்ந்த புரோகிதர்களால், ஆகம விதிப்படி, பக்தி சிரத்தையுடன் முறையாக நடத்தப்படுகிறது. இந்த ஹோமத்தின் பொழுது, யஜுர் வேதத்தில் கூறப்பட்டுள்ள, புராதனமான வேத ஸ்லோகமான ஸ்ரீ ருத்ரம் ஓதப்படுகின்றது. இவற்றில், ருத்ரனின் பல வடிவங்கள், அவரது பண்புகள் பற்றிக் கூறப்பட்டுள்ளன. இந்த மந்திரங்களை உச்சரிக்கும் போது எழும் ஒலியின் ஆற்றல் மிக்க சக்திகள், பல நன்மைகளை அளிக்கக் கூடியவை. இந்த ஹோமம், சுப ஹோரைகளிலும், ஒருவரது ஜென்ம நட்சத்திரத்தின் அடிப்படையில் கணிக்கப்பட்ட நேரங்களிலும் நடத்தப்படுகிறது. அனைத்து செயல்களிலும் வெற்றி பெறவும், எதிர்மறைத் தாக்கங்களை விலக்கி நன்மை பெறவும், இந்த ஹோமத்தை வருடத்திற்கு ஒரு முறை நடத்துவது நல்லது.

பிரசாதங்கள்

இந்த ஹோம வழிபாட்டில், ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம், உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

நன்மைகள்

ருத்ர ஹோமத்தின் நற்பலன்கள்
  • தேவையற்ற பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் கிட்டும்

  • தீய சக்திகளிலிருந்து பாதுகாப்பு பெறலாம்

  • உறவுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிட்டும்

  • வீடு மற்றும் பணியிடத்தில் சாதகமான சூழ்நிலை ஏற்படுத்தித் தரும்

  • எண்ணங்கள் மற்றும் செயல்களில் தெளிவு கிடைக்கும்

  • கடன்கள் தீரும்

  • வாழ்வில் வெற்றிகள் கிடைக்கும்

ருத்ர ஹோம மந்திரங்கள்

ஓம் ஹ்ரௌம் ஜூம் சஹ அல்லது ஓம் தத் புருஷாய வித்மஹே

அல்லது

மஹா தேவாய தீமஹீ

தன்னோ ருத்ர ப்ரசோதயாத் ஸ்வாஹா

காணொளிகள்

வாடிக்கையாளர்களால் அதிகமாக விரும்பப்பட்ட சேவைகள்

வாடிக்கையாளர்களின் அனுபவங்கள்

ஆஸ்ட்ரோவேதின் இந்த சேவை குறித்த உங்கள் அனுபவத்தை எழுதும் முதல் நபராக நீங்கள் இருங்கள். Click here
We use cookies to optimise your experience on our website and to personalize the content. By continuing to use the site, you agree to our use of cookies. Learn More.
Accept