மீனம் அக்டோபர் மாத ராசி பலன் 2021 | October Matha Meenam Rasi Palan 2021

Invoke Guru Dattatreya To Remove Suffering and Gain Happiness JOIN NOW
x
x
x
cart-added The item has been added to your cart.

மீனம் அக்டோபர் மாத ராசி பலன் 2021 | October Matha Meenam Rasi Palan 2021

September 3, 2021 | Total Views : 137
Zoom In Zoom Out Print

மீனம் அக்டோபர் பொதுப்பலன்கள் 2021:

மீன ராசி அன்பர்களின் குடும்ப வாழ்கை இனிமையாக இருக்கும். கணவன் மனைவி உறவு சுமுகமாக இருக்கும். வீட்டில் வயது முதிர்ந்தவர்களின் ஆலோசனை கேட்டு நடப்பதன் மூலம் நன்மை காணலாம். திருமணத்திற்குக்  காத்திருப்பவர்கள் இந்த மாதம் மனதிற்குப் பிடித்த தக்க துணையைக்  கண்டு கொள்வார்கள். இந்தமாதம் தங்களின் பொருளாதார நிலையில் சற்று இறக்கம் காணப்படும். இந்த மாதம்  நீங்கள் கடினமான முயற்சிகள் எடுப்பதன் மூலம் உங்கள் வருமானத்தை உயர்த்திக் கொள்ள இயலும்.  அலுவலகத்தில் அதிக பணிகள் காணப்படும். மேலதிகாரிகளின் ஆலோசனைப்படி பணியாற்றுவது நன்மை அளிக்கும்.. தொழில் அல்லது வியாபாரம் மேற்கொள்பவர்கள் பெரிய அளவிலான வாடிக்கையாளர்களைப்  பெறுவீர்கள்.மாணவர்கள் விடா முயற்சியினால் படிப்பில் வெற்றி காண இயலும்.  உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். மனம் சோர்வுடன் காணப்படும். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.

உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள் 

காதல் / குடும்பம்:

இளம் வயது மீன ராசி அன்பர்கள் மனதில் காதல் அரும்பு மலரும். காதலில் மகிழ்ச்சியும் இனிமையும் இருக்கும். கணவன் மனைவி இருவரும் கருத்து ஒருமித்து வாழ்வீர்கள். உங்களுக்கு இடையே அன்னியோன்யம் பெருகும். இந்த மாதம் உங்கள் உறவினர்களுடன்  நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் மாதமாக இருக்கும். 

நிதி நிலை:

பொருளாதாரத்தைப் பொறுத்தவரை இந்த மாதம் உங்களுக்கு அதிர்ஷ்டகரமான மாதமாக இருக்கும். இந்த மாதம் உங்கள் பணப்புழக்கம் அதிகரிக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். உங்கள் கடந்த கால முதலீடுகளின் மூலம் லாபம் பெறும் வாய்ப்பு உள்ளது. வீடு மராமத்துப் பணி போன்ற வகையில் செலவுகளை மேற்கொள்வீர்கள். 

வேலை:

பணியிடத்தில் பொறுப்புகள் அதிகமாக இருக்கும். கூடுதல் பணிகள் உங்களுக்கு வழங்கப்படும்.  அதிக பணிச் சுமை இருந்த போதிலும் சிறப்பாக பணியாற்றுவீர்கள். உத்தியோகம் குறித்த முக்கிய முடிவுகளை எடுக்கும் முன்பு அதன் நன்மை தீமைகளை ஆராய்ந்து முடிவு எடுங்கள். பணியிடத்தில் உங்கள் பொறுப்புகளை சரிவர நிறைவேற்றி அதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். 

தொழில்:

சொந்த தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்கள் இந்த மாதம் புதிய தொழில் வாய்ப்புகளைப் பெறுவார்கள். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். அதிக பணிகள் காணப்படும். வாடிக்கையாளர்களை நீங்கள் திருப்திபடுத்த அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். பங்கு வர்த்தக தொழில் செய்பவர்களுக்கு நல்ல தன வரவும் அதிக லாபமும் கிடைக்கும். 

தொழில் வல்லுனர்கள்:

நீங்கள் அரசுத் துறையில் பணிபுரிபவர் என்றால் உயர்அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வாக்குவாத்தை தவிர்ப்பது நன்மை பயக்கும். அவர்களுடன் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. நிதித்துறை, கல்வித்துறை, மருத்துவத் துறை மற்றும் நீதித்துறையில் இருக்கும் தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் தங்கள் தொழிலில் பிரகாசிப்பார்கள்.

ஆரோக்கியம்:

உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிறுநீரகம் சம்மந்தப்பட்ட உடல்நல பாதிப்பு ஏற்படலாம். போதுமான நீர் உட்கொண்டு இந்த பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். தாய் மற்றும் தந்தையின் உடல் நலனில் அக்கறை தேவை. வேலை பளு காரணமாக மனம் சோர்வுடன் காணப்படும். தியானம் செய்வதன் மூலம் புத்துணர்ச்சி பெறலாம். 

மாணவர்கள்:

மாணவர்கள் மனதை ஒருமுகப்படுத்தி கல்வி பயில்வார்கள். வெற்றியும் காண்பார்கள். பள்ளிக் கல்வி படிக்கும் மாணவர்களின் கிரகிக்கும் திறன் கூடும்.  உயர்கல்வி பயிலும் மாணவர்கள் பொறுமையுடன் கடினமாக உழைத்துப் படித்தால் வெற்றி நிச்சயம். வெளிநாட்டில் கல்வி பயில நினைக்கும் மாணவர்கள் சில தாமதங்களை சந்திக்க நேரும்.

Leave a Reply

Submit Comment
See More

Latest Photos