AstroVed Menu
AstroVed
search
search

கும்பம் அக்டோபர் மாத ராசி பலன் 2021 | October Matha Kumbam Rasi Palan 2021

dateSeptember 3, 2021

கும்பம் அக்டோபர் பொதுப்பலன்கள் 2021:

குடும்பத்தில் நடக்கும் சுப நிகழ்ச்சிகள் மூலம் மனதில் மகிழ்ச்சி பொங்கும். குடும்பச் சூழல் மிகவும் ரம்மியமாக இருக்கும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் பரஸ்பரம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவீர்கள்.  இருவருக்கும் இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உத்தியோகத்தில்  உங்கள் ஆலோசனைகளை தக்க சமயத்தில் அளித்து  பணியிடத்தில் சில பிரச்சினைகளுக்கு தீர்வு கூறுவீர்கள். உங்கள் தைரியமும் திறமையும் பிறரின் பாராட்டைப் பெறும். உங்கள் ஆரோக்கியம் இந்த மாதம் சீராக இருக்க வாய்ப்பில்லை எனவே கவனம் தேவை. மாணவர்கள் சென்ற மாதத்தை விட இந்த மாதம் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். என்றாலும் புத்தி கூர்மையுடன் செயல்பட வேண்டும். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.   

உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள் 

காதல் / குடும்பம்:

குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். வீட்டில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் வாய்ப்புகள் உள்ளது. விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் கணவன் மனைவி உறவில் நெருக்கம் அதிகரிக்கும். காதல் உறவில் மனஸ்தாபங்கள் உண்டாகலாம். கவனம் தேவை. ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். ஆன்மீகத்திற்காக பயணம் மேற்கொள்வீர்கள்.

நிதி நிலை:

சென்ற மாதத்தை விட இந்த மாதம் பண வரவு சற்று அதிகமாக இருக்கும். என்றாலும் சில சுப செலவுகளை மேற்கொள்ள வேண்டி நீங்கள் கடன் வாங்கக்ககூடிய வாய்ப்பும் உள்ளது. பிறரிடம் கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது.  மருத்துவத் துறையில் இருப்பவர்களுக்கு இந்த மாதம் நல்ல வருமானம் கிடைக்கும்.

வேலை:

நீங்கள் அரசுத் துறை அல்லது அரசு சார்ந்த துறைகளில் பணி புரிபவர் என்றால்  நீங்கள் கவனமாகப் பணியாற்ற வேண்டும். பணியிடத்தில் உங்கள் வார்த்தைகளில் கவனம் தேவை. தவற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். மேலதிகாரிகளுடன் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். கல்வித்துறை மற்றும் பொழுதுபோக்குத் துறையில் பணிபுரிபவர்களுக்கு உத்தியோகத்தில் ஏற்றம் உண்டாகும். வெளிநாட்டில் உத்தியோகம் தேடுபவர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்பு கிடைக்கப் பெறுவீர்கள்.

தொழில்:

சொந்தத் தொழில் செய்யும் கும்ப ராசி அன்பர்கள் அதிக உழைப்பை மேற்கொள்ள வேண்டியிருக்கும். பங்கு வர்த்தக தொழில் புரிபவர்கள் இந்த மாதம் அதிக லாபங்களை எதிர்பார்க்கலாம். ஏற்றுமதி தொழிலில் உள்ளவர்கள் இந்த மாதம் தங்கள் தொழிலில் பிரகாசிப்பார்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த மாதம் சிறந்த மாதமாக இருக்கும். வியாபாரத்தில் அதிக லாபத்தை எதிர்பார்க்கலாம். கூட்டுத் தொழில் உங்களுக்கு லாபத்தை அளிக்கும். 

தொழில் வல்லுனர்கள்:

நீங்கள் தொழில் வல்லுனராகப் பணியாற்றுபவர் என்றால் இந்த மாதம் நீங்கள் பணியில் பளிச்சிடுவீர்கள். உங்கள் திறமை மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும்.  உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரமும் முன்னேற்றமும் காண்பீர்கள். நிதித்துறையில் உள்ள தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் பணியில் சில முன்னேற்றங்களைக் காண்பீர்கள். மருத்துவம், சட்டம் மற்றும் கல்வித் துறையில் இருப்பவர்கள் இந்த மாதம் பதவி உயர்வு மற்றும் தன நிலையில் ஏற்றம் ஏற்படும்.

ஆரோக்கியம்:

இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சீராக இருக்க வாய்ப்பில்லை. ஒரு சில ஆரோக்கியக் குறைபாடுகளை நீங்கள் சந்திக்க நேரும். சிறு உடல் உபாதைகள் வந்து போகும். சிறிய அளவிலான உடல் பாதிப்புகள் என்றாலும் நீங்கள் உடனடியாக மருத்துவரை கலந்து ஆலோசிக்க வேண்டும். குடல் சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உணவு பழக்கத்தில் கவனம் தேவை. உங்கள் தாயின் உடல் நலத்தில் நீங்கள் அக்கறை செலுத்த வேண்டும். 

மாணவர்கள்:

மாணவர்கள் கடந்த மாதத்தை விட இந்த மாதம் முன்னேற்றம் காண்பார்கள். என்றாலும் மனதில் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். சோம்பலைத் தவிர்க்க வேண்டும். மனதை ஒருமுகப்படுத்தி கல்வி பயில வேண்டும். கவனச்சிதறலுக்கு எளிதில் ஆட்படுவார்கள். கவனச் சிதறல்  அவர்கள் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும். ஆசிரியர் மற்றும் பெற்றோரின் ஆலோசனைகளைக் கேட்டு நடந்து கொள்வதன் மூலம் வெற்றியை எளிதில் அடையலாம். ஆராய்ச்சி கல்வி பயிலும் மாணவர்கள் பல புதிய விஷயங்களை கற்றுக் கொள்வார்கள். 


banner

Leave a Reply