Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

மீனம் நவம்பர் மாத ராசி பலன் 2020 | November Matha Meenam Rasi Palan 2020

October 7, 2020 | Total Views : 546
Zoom In Zoom Out Print

மீன ராசி நவம்பர் மாத பொதுப்பலன்கள்:

மீன ராசி அன்பர்களுக்கு, இது, நன்மைகள் பலவற்றை அள்ளித் தரும் மாதமாக இருக்கக்கூடும். அனைத்து விஷயங்களும், உங்கள் விருப்பப்படியே நடைபெறலாம். ஏறத்தாழ, உங்கள் செயல்கள் அனைத்திலும் நீங்கள் வெற்றியும் பெறலாம். பொருள் வசதி நிறைந்த வாழ்க்கையை நீங்கள் அனுபவிப்பீர்கள். உங்கள் பேச்சு, தகவல் தொடர்பு இவற்றின் ஆற்றலைக் கொண்டு, பிரச்சனைகளை சிறப்பாகத் தீர்த்து விடுவீர்கள். செய்ய வேண்டிய பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து, அவற்றை முடிக்க முயற்சி செய்யுங்கள். உங்களில் சிலர் குடும்பத்துடன் உல்லாசப் பயணம் செல்லக்கூடும். இது உங்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை அளிக்கலாம். கலைஞர்கள் மற்றும் தொழில் முனைவோர், அரசாங்கத்திடமிருந்து பரிசுகளை வெல்லும் வாய்ப்பு உள்ளது. ஆனால் ‘தான்’ என்ற அகந்தையை, நீங்கள் கட்டுக்குள் வைப்பது அவசியம். இல்லையென்றால், சில நேரங்களில் இது உங்களை நெறிமுறையற்ற வழியிலும் செயல்படச் செய்து விடலாம். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாகவே காணப்படுகிறது. உங்களது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கு, இது உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். இந்த மாத ராசிபலன் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்க போகின்றது என்பதை முழுமையாக அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள். 

 

மீன ராசி காதல் மற்றும் திருமண வாழ்க்கை:

நீங்கள் ரகசியமாக வைத்திருக்கும் காதல் விவகாரம், உங்கள் உறவினர்களால் வெளிச்சத்திற்கு வந்துவிடக் கூடும். இதைக் கொண்டு அவர்கள் ஒரு சர்ச்சையை உருவாக்க முயலலாம். எனவே, இது குறித்து உங்கள் குடும்பத்தினரிடம் உடனடியாகத் தெரிவித்து விடுங்கள். இதன் மூலம் உறவினர்கள் உண்மையை உணர்ந்து கொண்டு, உங்களுக்கு ஆதரவாகத் திரும்புவார்கள். இந்த நேரத்தில் பெற்றவர்களின் சம்மதத்தைப் பெற்று, நீங்கள், உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைத் துவக்குவதற்கான நடவடிக்கைகளில் இறங்கலாம். 

மண வாழ்க்கையில் நல்லிணக்கத்துக்கான இறை வழிபாடு: சந்திர பகவான் பூஜை

மீன ராசி நிதி:

தாராளமான பண வசதி, உங்களை மகிழ்ச்சியடையச் செய்யும். நண்பர்களுக்குத் தேவை ஏற்படும் பொழுது, உங்களில் சிலர் பண உதவி செய்யக்கூடும். உங்களது இந்த உதவியை, அவர்கள், நன்றியுடன் நினைவு கொள்வார்கள். நீண்ட கால முதலீடுகள் செய்வதற்கும், இது சரியான நேரம் ஆகும். விவேகமாகச் செயல்பட்டு, நீங்கள் உங்கள் கடன்களையும் அடைத்து விடக்கூடும். கடந்த காலத்தில் செய்யப்பட்ட ஊக அடிப்படையிலான முதலீடுகளிலிருந்து சிலருக்கு, சிறப்புத் தொகை ஏதாவது கிடைக்கவும் வாய்ப்புள்ளது. ஆனால் உங்களது அசையா சொத்துக்களைப் பழுது பார்ப்பது, புதுப்பிப்பது போன்றவற்றிற்காக, இப்பொழுது நீங்கள் செலவு செய்ய வேண்டியிருக்கலாம்.  

நிதிநிலையை மேம்படுத்துவதற்கான இறை வழிபாடு: செவ்வாய் பகவான் பூஜை

மீன ராசி வேலை:

பணியில் முன்னேற்றம் கானலாம். இது உங்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் திருப்தி செய்யும் வகையிலும் இருக்கும். உங்கள் செயலாற்றலைக் கருத்தில் கொண்டு, உங்கள் நிறுவனம் உங்களுக்கு, விசேஷ ஊதிய உயர்வை அளிப்பதற்கும் வாய்ப்புள்ளது. சக ஊழியர்களுடன் நீங்கள் கொண்டுள்ள சுமுக உறவும் உங்களுக்குச் சாதகமாக அமையும். பயணங்கள் செல்வதற்குத் தயாராக இருங்கள். இது உங்கள் பணிகள் சிலவற்றை நிறைவேற்றுவதற்கு உதவிகரமாக இருக்கும்.    

வேலை முன்னேற்றத்திற்கான இறை வழிபாடு: குரு பகவான் பூஜை

மீன ராசி தொழில்:

தொழில் தொடர்பான உங்கள் திட்டங்கள் சீராக நடை பெறக்கூடும். உங்களது புதிய தொழில் முயற்சிகள், உங்களுக்கு, பெயரையும், புகழையும் பெற்றுத் தரக்கூடும். வியாபார நடவடிக்கைகள் சிலவற்றிற்கு, உங்கள் தொழில் கூட்டாளிகளைப் பொறுப்பேற்குமாறு செய்யுங்கள். இது பணிகளை விரைவாக முடிக்க உதவும். உங்கள் வாடிக்கையாளர்களின் ஆதரவினால், நிறைவேற்றப்பட்ட சில திட்டங்களிலிருந்து, நீங்கள், லாபங்களையும் எதிர்பார்க்கலாம்.   

மீன ராசி தொழில் வல்லுநர்கள்:

மீன ராசி தொழில் வல்லுநர்களுக்கு, இது, முன்னேற்றமான காலமாகத் தெரிகிறது. இந்த நேரத்தில் உங்கள் முயற்சிகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கக் கூடும். பணி நடைபெறும் தளத்தில் உள்ள வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கு முயற்சி செய்யுங்கள். நீண்ட காலப் பணியாக இருக்கும் இவற்றால் உங்களுக்கு நன்மை விளையும் வாய்ப்புள்ளது. உங்கள் செயலாற்றலுக்காக, உங்களில் சிலருக்கு திடீர் உதிய உயர்வு கிடைக்கலாம். இது உங்களுக்கே கூட ஆச்சரியம் தரலாம். தவிர, வேலைகளை விரைந்து முடிப்பதற்காக, இந்த நேரத்தில், சில புதிய ஊழியர்களை, உங்களுக்குக் கீழ் பணிபுரிவதற்கு நியமிப்பது அவசியம்.   

மீன ராசி ஆரோக்கியம்:

உங்கள் உடல்நிலை சிறப்பாகவே இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தை, நீங்கள் நன்கு கவனித்துக் கொள்வீர்கள். இது உங்களை ஆற்றலுடனும், சுருசுருப்பாகவும் வைக்க உதவும். ஏதாவது பயணம் செல்லவும் நீங்கள் திட்டமிடுவது நல்லது. இது உங்கள் மகிழ்ச்சியை அதிகரிக்கும். மேலும், தவறாமல் தியானம் மேற்கொள்ளவும். இது, வேலையில் நீங்கள் அதிக கவனம் செலுத்த, உதவும்.       

ஆரோக்கிய வாழ்வுக்கான இறை வழிபாடு: பகவான் வைத்தியநாதர் பூஜை     

மீன ராசி மாணவர்கள்:

உங்கள் கல்வி முயற்சிகள் சீராக நடைபெறும். உங்கள் அர்ப்பணிப்பு உணர்வு, பாடங்களை நீங்கள் முறையாகப் படித்து, முடிக்க உதவும். அத்துடன் கூட, சக மாணவர்களுடன் சேர்ந்து படிக்கும் பொழுது, பாடங்களைப் பற்றிய உங்கள் அறிவை, உங்களால் அவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் முடியும். பாடதிட்டத்திற்கு அப்பாற்பட்ட சில நடவடிக்கைகளிலும் நீங்கள் அதிக ஆர்வம் காட்டக் கூடும். உங்களில் சிலர், விளையாட்டுப் போட்டிகள், நிகழ்ச்சிகள் போன்றவற்றில் பங்கு பெறுவதற்காகவும் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். எனவே, பொதுவாக இது உங்களுக்கு, வரவேற்கத்தக்க நேரமாக இருக்கும்.   

படிப்பில் சிறந்து விளங்குவதற்கான இறை வழிபாடு: தேவி சரஸ்வதி பூஜை           

சுப தினங்கள்: 3, 7, 11, 19, 22, 29, 30

அசுப தினங்கள்:    12, 18, 25, 27, 28

banner

Leave a Reply

Submit Comment