AstroVed's End of Season Sale: Up to 50% OFF on our Packages, Fire Labs, Monthly Powertimes, Mantra Writing & Sacred Products Order Now

கும்பம் நவம்பர் மாத ராசி பலன் 2020 | November Matha Kumbam Rasi Palan 2020

October 7, 2020 | Total Views : 551
Zoom In Zoom Out Print

கும்ப ராசி நவம்பர் மாத பொதுப்பலன்கள்:

கும்ப ராசி அன்பர்களே! இது உங்களுக்கு நல்லதும், அல்லாததும் கலந்த மாதமாக இருக்கக்கூடும். எந்த ஒரு விஷயத்திலும், இப்பொழுது நீங்கள், மிகுந்த அறிவாற்றலுடன் செயல்பட வேண்டியிருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் செய்யும் தவறுகள், பொது வாழ்க்கையில் உங்களுக்குப் பிரச்சனைகளை உருவாக்கலாம். உங்கள் பேச்சும் சிலரை மிகவும் புண்படுத்தி விடக்கூடும் என்பதால், பேசும் பொழுதும் நீங்கள் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. ஆனால், சிலர் உங்களைத் தவறாகப் புரிந்து கொண்டிருந்தால், அதை நீக்குவதற்கு அல்லது குறைப்பதற்கு நீங்கள் தீவிர முயற்சி எடுப்பீர்கள். நீங்கள் கடுமையாகவும் உழைத்து, உங்கள் பணிகளை மிக விரைவாக முடித்தும் விடுவீர்கள். ஆனால் அன்புக்குரியவர்களிடம் உங்களுக்கு ஏதாவது ஏமாற்றம் ஏற்படலாம். சில உறவுகளில் சலனங்களும் ஏற்படலாம். இது உங்களை விரக்தியடையச் செய்யலாம். வேலையும் சரி, தொழிலும் சரி, சுமுகமாக நடைபெறாமல் போகலாம். சில நேரங்களில் உங்களுக்கு பாதகமாகவும் மாறலாம். எனவே பொறுமையாக இருந்து, பிரச்சனைகளை நாசூக்காகக் கையாள முயற்சி செய்யுங்கள். ஆனால் உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கக்கூடும். இருப்பினும், ஞாபக மறதியின் காரணமாக நீங்கள் சில நேரங்களில் மந்தமாகச் செயல்படலாம். இந்த மாத ராசிபலன் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்க போகின்றது என்பதை முழுமையாக அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.        

கும்ப ராசி காதல் மற்றும் திருமண வாழ்க்கை:

இந்த நேரத்தில் உங்களுக்கு மிகவும் தேவையானது, பொறுமை தான். உறவுகளில் ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு இதுவே சிறந்த வழியாகும். காதல் விவகாரங்கள் சுமாராக இருக்கும். உங்கள் துணையிடமிருந்து வரும் தேவையற்ற சில தகவல்கள் உங்களுக்குக் கவலை அளிக்கலாம். திருமணம் தொடர்பாக இறுதி முடிவு எடுப்பதற்கு இது உகந்த காலம் அல்ல என்பதால், திருமணத்திற்கு வரன் தேடுவதை ஒத்திப் போடுவது நல்லது.   

மண வாழ்க்கையில் நல்லிணக்கத்துக்கான இறை வழிபாடு: புத பகவான் பூஜை
        
கும்ப ராசி நிதி:

இந்த நேரத்தில் உங்களுக்கு நிதி நெருக்கடி ஏற்படக்கூடும். நீங்கள் செலுத்த வேண்டிய தொகைகளைச் செலுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கவும். உங்கள் தேவைகளைச் சமாளிப்பதற்காக, வேறு இடங்களிலிருந்து பணத்தைத் திரட்டுவதும் எளிதாக இருக்காது. அதில் சில பிரச்சனைகள் எழவும் வாய்ப்புள்ளது. மேலும், பண விஷயத்தில், நண்பர்கள் அல்லது மற்றவர்கள் சார்பில் எந்தவித வாக்குறுதியையும் அளித்து விட வேண்டாம். இது உங்களைப் பிரச்சனையில் சிக்க வைத்து விடக்கூடும்.   

நிதிநிலையை மேம்படுத்துவதற்கான இறை வழிபாடு: கேது பகவான் பூஜை

கும்ப ராசி வேலை:

வேலை விஷயங்கள் சராசரியாக நடைபெறும். உங்களுக்கு அளிக்கப்படும் பணிகளைக் குறித்த நேரத்தில் முடித்து விட முயற்சி செய்யவும். இது, உங்களைப் பற்றிய எதிர்மறை எண்ணங்கள் எழாமல் தடுக்க உதவும். எனினும், சக ஊழியர்களிடமிருந்து ஓரளவு ஒத்துழைப்பை நீங்கள் எதிர்பார்க்கலாம். ஆனால், வேலையில் அதிக உற்பத்தித் திறனுடன் பணியாற்றவும். மற்றவர்களைப் பற்றி வம்பு பேசுவதையும் தவிர்க்கவும். இவை உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.  

வேலை முன்னேற்றத்திற்கான இறை வழிபாடு: சனி பகவான் பூஜை

கும்ப ராசி தொழில்:

தொழில் நடவடிக்கைகள் ஓரளவிற்கே சரியாக இருக்கும் எனலாம். வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தாலும், வரவு குறைவாகவே இருக்கக் கூடும். இது பணிகளைத் தொடர விடாமல், உங்களை அதைரியப்படுத்துவதுடன், புண்படுத்தியும் விடலாம். உங்கள் கடின உழைப்பும், நீங்கள் விரும்பும் பலனை அளிக்காமல் போகலாம். தவிர, தொழில் கூட்டாளிகளின் செயல்திறனை, நீங்கள் உன்னிப்பாகக் கவனிப்பதும் அவசியம். மேலும் இப்பொழுது, புதிய தொழில் எதுவும் துவங்க வேண்டாம். இவற்றை சிறிது காலத்திற்கு ஒத்திப் போடுவது நல்லது.

கும்ப ராசி தொழில் வல்லுநர்கள்:

கும்ப ராசி தொழில் வல்லுநர்களான உங்களது உழைப்பு பலனளித்தாலும், உங்கள் நிறுவனத்திடமிருந்து, அவற்றுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காமல் போகலாம். இப்பொழுது, உங்கள் செயலாற்றல் குறைந்து போகவும் வாய்ப்பு உள்ளது. எனவே எச்சரிக்கையாக இருந்து, இது போல நடைபெற்று விடாமல் தடுத்துக் கொள்ளவும். மேலும், அலுவலகத்தில் எவரிடமும் எதிர்மறை அணுகுமுறையுடன் பழக வேண்டாம். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்கள் சிலர் உங்கள் அறிவுரைகளைப் பின்பற்றாமல் இருக்கலாம்; அல்லது மற்ற ஊழியர்களுடன் கைகோர்த்துக் கொண்டு, உங்களுக்கே தீங்கு செய்ய நினைக்கலாம். இது போன்ற விஷயங்களில் சிக்கிக் கொள்ளாமல் எச்சரிக்கையாக இருக்கவும்.

கும்ப ராசி ஆரோக்கியம்:

இப்பொழுது நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள். எனினும், புரதச் சத்து, தாதுச் சத்து போன்றவை நிறைந்த பதார்த்தங்களை உட்கொள்வது, அதிக ஆற்றல், பலம் ஆகியவை அளித்து, சிறு உடல் உபாதைகளைத் தவிர்க்க உதவும். இத்துடன் கூட, நீங்கள் தியானமும் செய்வது நல்லது. இது உங்கள் மனதின் சக்தியை அதிகரித்து, உங்களுக்கு அமைதி தரும்.

ஆரோக்கிய வாழ்வுக்கான இறை வழிபாடு: பகவான் வைத்தியநாதர் பூஜை   

கும்ப ராசி மாணவர்கள்:

பயனற்ற வேலைகளில் நேரத்தை வீணடிக்காமல், நீங்கள் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். மேலும், அளவுக்கு அதிகமான நம்பிக்கையுடன் இருக்காதீர்கள்; உங்கள் பாடங்களைக் குறைத்தும் மதிப்பிட்டு விடாதீர்கள். இவை உங்கள் வெற்றிக்குப் பெரும் தடங்கலாக மாறக்கூடும். உங்கள் பேச்சு, தகவல் தொடர்பு போன்றவற்றிலும் சுமுக நிலையைக் கையாளுங்கள். இது தற்போதைய காலகட்டத்திலும் சரி, வரும் காலத்திலும் சரி, உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.   

படிப்பில் சிறந்து விளங்குவதற்கான இறை வழிபாடு: தேவி சரஸ்வதி பூஜை           

சுப தினங்கள்: 3, 4, 8, 11, 14, 19, 22, 26, 30
அசுப தினங்கள்: 7, 11, 24, 27, 29

banner

Leave a Reply

Submit Comment