மகரம் நவம்பர் மாத ராசி பலன் 2020 | November Matha Magaram Rasi Palan 2020

மகர ராசி நவம்பர் மாத பொதுப்பலன்கள்:
மகர ராசி அன்பர்களுக்கு, இது, சாதகமான மாதமாக இல்லாமல் போகலாம். உங்கள் செயல்களில் வெற்றி பெற, நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். குடும்பத்தினருடன் உங்கள் பேச்சு வார்த்தை போன்றவையும் மிகவும் குறைந்து விடக் கூடும். வழக்கமான வீட்டு வேலைகள் சிலவற்றைச் செய்து முடிப்பதற்கும் கூட நீங்கள் கஷ்டப்பட வேண்டியிருக்கலம். உடன் பிறந்தவர்களுடன் ஏற்படும் கருத்து வேறுபாடுகள், உங்களுக்கு அதிக கவலை தரலாம். மற்றவர்களும் உங்கள் உண்மையான நோக்கங்களைப் புரிந்து கொள்ளாமல் போகலாம். உங்கள் பேச்சைக் கேட்காமலும், உறுதி மொழிகளை ஏற்றுக் கொள்ளாமலும் போகலாம். நிதிநிலையும் உங்களை விரக்தியடைய வைக்கலாம். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் நட்பைப் பெற முயலுங்கள். இது அங்கு நல்லுறவைப் பராமரிக்க உதவும். இப்பொழுது நீங்கள் நேரம் தவறி உணவு உண்ணக்கூடும். கடும் மன அழுத்தத்துக்கும் ஆளாகக் கூடும். எனவே, உங்கள் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும் என்று கூற முடியாது. எனவே, எச்சரிக்கையாக இருக்கவும். இந்த மாத ராசிபலன் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்க போகின்றது என்பதை முழுமையாக அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.
மகர ராசி காதல் மற்றும் திருமண வாழ்க்கை:
உங்கள் காதலர் அல்லது காதலியிடமிருந்து சற்றே ஒதுங்கி இருப்பது நலம். ஏனெனில் இருவருக்கும் இடையே, இப்பொழுது, தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உருவாக வாய்ப்புள்ளது. இந்த உறவைத் தொடர்வது குறித்த அவரது எண்ணத்தை நீங்கள் புரிந்து கொள்வதும் நல்லது. இது, எதிர்காலத்தைப் பற்றி யோசிக்கவும், உங்கள் திருமணம் குறித்து திட்டமிடவும் உதவும். ஆனால் அவசரப்பட்டு, உறவை முறித்து விட வேண்டாம். உங்கள் காதல் துணைக்கு, உங்கள் மதிப்பை, காலம் மட்டுமே உணர்த்த முடியும்.
மகர ராசி நிதி:
பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் உங்களுக்குக் கவலை அளிக்கலாம். இருப்பினும், இந்த நேரத்தில் கடன் வாங்குவதோ, நிதி உதவி பெறுவதோ நல்லதல்ல. இதற்கு பதிலாக, உங்களிடம் இருக்கும் பணத்தைக் கொண்டு, நிலைமையைச் சமாளிக்க முயற்சி செய்யுங்கள். ஆனால் அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய தொகைகளை, செலுத்தாமல் விட்டுவிட வேண்டாம். தவறினால், நீங்கள் அபராதம் செலுத்த வேண்டி வரலாம். உங்கள் சொத்துக்கள் எதையாவது விற்று கடனைத் திரும்பச் செலுத்தும் உங்கள் திட்டங்கள், வெற்றி பெறக்கூடும். இதனால் கிடைக்கும் தொகையைக் கொண்டு, நீங்கள் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுத்து, கடனை அடைத்து விட முடியும்.
நிதிநிலையை மேம்படுத்துவதற்கான இறை வழிபாடு: குரு பகவான் பூஜை
மகர ராசி வேலை:
பணியில் இருப்பவர்கள் பொறுமையைக் கடைபிடித்து, அவர்கள் வேலையை முழு முனைப்புடன் செய்வதற்கு ஏற்ற காலம் இது. எனினும், அலுவலகத்தில் உங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காமல் போகலாம். இது உங்களுக்கு ஏமாற்றம் தரலாம். ஆனால் நம்பிக்கை இழந்து விடாமல், உங்கள் பணியைத் தொடருங்கள். பயனுள்ள நடவடிக்கைகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். தவிர, வேறு சிலர் ஈடுபட்டுள்ள ஒழுக்கக்கேடான எந்தச் செயலிலும் நீங்கள் சிக்கிக் கொண்டு, அதற்கு பலியாகி விடாதீர்கள். சிந்தனையிலும், செயலிலும் தெளிவாகவும், திறந்த மனதுடனும் இருங்கள். இது உங்களுக்கு நன்மை விளைவிக்கும்.
வேலை முன்னேற்றத்திற்கான இறை வழிபாடு: செவ்வாய் பகவான் பூஜை
மகர ராசி தொழில்:
தொழில் முனைவோர், தங்களது முந்தைய தொழில் முயற்சிகளில், தாங்கள் செய்த தவறுகளையும், அதனால் ஏற்பட்ட நஷ்டங்களையும் நினைவு கூர்ந்து, அது போன்ற தவறுகளைத் திருத்திக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். இது விஷயங்களை நன்கு ஆராய்வதற்கும், லாபங்கள் தரும் திட்டங்களைத் தீட்டுவதற்கும், பயனுள்ளதாக அமையும். ஆனால் இது, தொழிலில் நீங்கள் சிறந்த ஆதாயம் அடைய உகந்த நேரமாக இல்லாமல் போகலாம். மேலும், உங்கள் தொழில் கூட்டாளிகளை முழுவதுமாக நம்பி விட வேண்டாம். அவர்களின் வேலைத்திறன், உற்பத்தி போன்றவற்றைக் கூர்மையாகக் கவனிப்பது நல்லது.
மகர ராசி தொழில் வல்லுநர்கள்:
இந்த நேரத்தில், மகர ராசி தொழில் வல்லுநர்களின் செயலாற்றலுக்கு உரிய மதிப்பும், மரியாதையும், கிடைக்காமல் போகலாம். ஆனால் நம்பிக்கை இழந்து விடாமல், புரிந்துணர்வுடனும், பொறுமையுடனும் இந்தக் காலகட்டத்தை எதிர் கொள்ள முயலுங்கள். உங்கள் கவனக்குறைவின் காரணமாக, பணியிடத்தில் ஏதாவது பிரச்சனை உருவாக வாய்ப்புள்ளது. ஆகவே, ஒழுங்குமுறையைக் கண்டிப்பாக அனுசரிக்கவும்; நேரம் தவறாமையைப் கடைபிடிக்கவும்; அலுவலக சட்ட திட்டங்களைத் தவறாமல் மதித்து நடக்கவும்; சக ஊழியர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க முயற்சி செய்யவும். அதிக வேலை, இப்பொழுது உங்களைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கக் கூடும்.
மகர ராசி ஆரோக்கியம்:
இந்தக் காலத்தில், உங்கள் உடல்நிலை கவலை அளிக்கலாம். சிலர் சரியான உணவு, மருந்துகள் போன்றவற்றை முறையாக உட்கொள்ளத் தவறலாம். இது உடலில் சில பிரச்சனைகளை உருவாக்கலாம். உடற் பயிற்சிகளையும், தியானப் பயிற்சியையும் தவறாமல் செய்யவும். இது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
ஆரோக்கிய வாழ்வுக்கான இறை வழிபாடு: பகவான் வைத்தியநாதர் பூஜை
மகர ராசி மாணவர்கள்:
தேர்வுகளின் தங்கள் திறமையை நிரூபிக்க, மாணவர்கள் முழு முயற்சி செய்வார்கள். எனினும், சில நேரங்களில் இது, உரிய பலனை அளிக்காமல் போகலாம். உங்கள் எதிர்பார்ப்புகளும் நிறைவேறாமல் போகலாம். எனவே நீங்கள் வேறு வகையில் முயற்சி செய்ய வேண்டியிருக்கலாம். ஆனால் உங்களுக்குள் அமைந்திருக்கும் இயற்கையான திறன்கள் காரணமாக, கடும் முயற்சிகளுக்குப் பின், இறுதியில், நீங்கள் வெற்றியடையக் கூடும். குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட முயற்சி செய்யுங்கள். தேவைப்படும் நேரத்தில், கல்வி தொடர்பாகவும், மற்ற விஷயங்களிலும், பெற்றோர்களின் வழிகாட்டுதலின் படி நடந்து கொள்ளுங்கள்.
படிப்பில் சிறந்து விளங்குவதற்கான இறை வழிபாடு: தேவி சரஸ்வதி பூஜை
சுப தினங்கள்: 2, 4, 6, 7, 10, 11, 13, 17, 21, 22, 29, 30
அசுப தினங்கள்: 1, 5, 12, 14, 18, 23, 26, 27, 28
