AstroVed Menu
AstroVed
search
search
x
cart-added The item has been added to your cart.

கும்ப ராசி பொதுவான குணங்கள், Meena Rasi Character in Tamil

dateApril 28, 2020

நடுத்தர உயரம், அகன்ற நெற்றி, கூர்மையான கண்கள், தடித்த உதடுகள்,  திரண்ட மார்பு உருண்டையான கால்கள் மற்றும் அழகிய பாதங்கள் கொண்டவர்கள். பெண்கள் அழகிய சிரித்த முகம், ஒல்லியான முகம், வரிசையான பற்கள், சங்கு கழுத்து, உருண்ட கால்கள் மற்றும் அழகிய பாதங்கள் உடையவர்கள்.

மீன ராசிக்காரர்கள் எதார்த்த வாழ்வை விரும்புபவர்கள். மற்றவர்கள் விரும்பும் வண்ணம் தன்னை காட்டிக் கொள்வார்கள். பொறுமை இருக்கும் அளவிற்கு கோபமும் இருக்கும். நேர்மையானவர்கள். தன்னைக் காத்துக் கொள்வதற்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள். பழைய நினைவுகளை அசைபோடுபவர்கள். தயாள குணம் உடையவர்கள். தனக்கென்று எதையும் வைத்துக் கொள்ளாத தயாள குணம் இவர்களிடம் இருக்கும்.

meena-rasi-character-in-tamil

தான் செய்த செயல்கள், செய்யப் போகும் காரியங்கள் எதையும் மனம் விட்டு சொல்ல மாட்டார்கள். பயந்த சுபாவம் கொண்டவர்கள். சுமாரான கல்வி ஞானம் கொண்டவர்கள். ஆசார அனுஷ்டானங்களை அறிந்திருப்பார்கள்.  ஆனால் அதை கடைபிடிப்பதில் சந்தேகம்தான். தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வார்கள். வாசனைத் திரவியங்கள் மற்றும் ஆடை ஆபரணங்களில்  மிகுந்த நாட்டம் உடையவர்கள்.

இவர்கள் முன் ஜாக்கிரதையுடன் நடந்து கொள்பவர்கள். பிறர் உதவி மூலம் தங்கள் வாழ்க்கையை நடத்துவார்கள்.  நல்ல கிரக பலம் பெற்ற மீன ராசிக்காரர்கள் நல்ல செல்வம் செல்வாக்கு பெற்றிருப்பார்கள். என்றாலும் சில எதிர்பாராத கஷ்டங்களை அனுபவிப்பார்கள். 


banner

Leave a Reply