இவர்கள் நடுத்தர உயரம் அல்லது அதனினும் சற்று குள்ளமான உருவம் கொண்டவர்கள். அகன்ற நெற்றி, அழகிய கண்கள், நீண்ட கைகள் சற்று குள்ளமான கால்கள் கொண்டவர்கள். பெண்கள் நல்ல உருண்டையான முகமும், நீண்ட கேசமும், பருத்த புருவமும், அகன்ற நெற்றியும், அழகான சிறுத்த கண்களும் குறுகிய கழுத்தும், அழகான உதடும்அழகான பாதமும் உடையவர்கள்.
கும்ப ராசிக்காரர்கள் கல்வியில் சிறந்த ஊக்கம் உடையவர்கள். தெய்வ வழிபாடுகளில் நாட்டம் உடையவர்கள், அலட்டிக் கொள்ளாத எதையும் வெளிப்படுத்தாத அல்லது தன்னை வெளிக் காட்டிக்கொள்ளாத இயல்பு உடையவர்கள். எந்த ஒரு செயலை செய்தாலும் பிறர் மதிக்கும் அளவிற்கு செய்வார்கள். சமயோசித புத்தி உடையவர்கள். எதையும் சீர் தூக்கி ஆராய்ந்து பார்க்கும் தன்மை கொண்டவர்கள். நம்பிக்கையுடன் செயல்படுவார்கள்.
சக மனிதர்களிடம் விரைவில் ஒன்றி போகும் இயல்பு உடையவர்கள். வீணை, புல்லாங்குழல் போன்ற இசைக் கருவிகளை வாசிக்கும் திறன் பெற்றவர்கள். விவேகத்துடன் நடந்து கொள்வார்கள். சலிப்பில்லாத போக்கு இவர்களிடம் காணப்படும். இயல்பானவர்கள் திடமான மன உறுதி உடையவர்கள். தான் நினைத்ததை சாதிக்கும் திறன் பெற்றவர்கள்.
கும்ப ராசிக்காரர்கள் பிறரிடம் காணப்படும் சிறு குற்றங்களையும் பழித்துப் பேசும் இயல்பு உடையவர்கள். தங்களைப் பற்றி தாங்களே பெருமையாகப் பேசிக் கொள்வார்கள். மற்றவர்கள் செய்த உதவியை உடனே மறந்து விடுவார்கள். இவர்கள் பெண்களின் நட்பை எளிதில் பெறுவார்கள். இவர்கள் எவ்வளவு படித்திருந்தாலும் மேதைகளாக இருந்தாலும் பிரபலம் ஆவது மிகவும் கடினம். சுபக் கிரக பார்வை பெற்ற கும்ப ராசிக்கார்கள் புகழ் பெறுவார்கள்.

Leave a Reply