Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

விருச்சிகம் மே மாத ராசி பலன் 2021 | May Matha Viruchigam Rasi Palan 2021

April 5, 2021 | Total Views : 576
Zoom In Zoom Out Print

விருச்சிகம் மே மாத பொதுப்பலன் 2021:

விருச்சிக ராசி அன்பர்களே ! மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை நீங்கள் இந்த மாதம் உணர்ந்து கொள்ளும் மாதமாக இருக்கும். இந்த மாதத்தில் நீங்கள் முக்கியமான மாற்றத்தை எதிர்பார்க்கலாம். அவைகளுள் சில உங்களுக்கு நன்மை பயப்பதாகவும் இருக்கலாம், சில சவால்கள் நிறைந்ததாகவும் இருக்கலாம். குடும்பம், நிதிநிலை, உத்தியோகம் போன்ற எந்தவொரு விஷயத்திலும் நிதானமாக செயல்படுங்கள். பதட்டத்தை தவிர்த்து விடுங்கள். பொறுத்தார் பூமி ஆள்வார் என்பதை உணர்ந்து மிகவும் பொறுமையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் செலவுகளை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். சம்பாதிக்கும் பணத்தை எதிர் கால நலன் கருதி சேமிக்கவும் செய்யுங்கள். பூர்வீகச் சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் எழுவதற்கு வாய்ப்பு உள்ளது.   இந்த மாதம் நீங்கள் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவீர்கள். நீங்கள் பணி புரிபவராக இருந்தால் சிறப்பாக செயலாற்றுவீர்கள். என்றாலும் உங்கள் வார்த்தைகளில் கவனம் தேவை. திருமணத்திற்குக் காத்திருப்பவர்களுக்கு இந்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட வாய்ப்பு உள்ளது.  மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.  

காதல் / குடும்ப உறவு :

விட்டுப் பிரிந்த காதலர்கள் இந்த மாதம் மீண்டும் இணையும் வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவி ஓருவரையொருவர் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். அதன் மூலம் நல்லுறவை வளர்க்க முடியும்.திருமணத்திற்குக் காத்திருப்பவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட வாய்ப்பு உண்டு. 

திருமண உறவில் நல்லிணக்கம் காண : அங்காரகன் பூஜை 

நிதிநிலை :

இந்த மாதம் முதலீடு செய்வது குறித்து யோசிப்பீர்கள். எனவே  முதலீடுகள் குறித்த விவரங்களை நீங்கள் நன்கு அறிந்துகொள்ள  முயல்வீர்கள். நீங்கள் அறிந்து கொண்ட விஷயங்களின் அடிப்படையில் நண்பர்களுக்கும் ஆலோசனைகளைக் கூறுவீர்கள். உங்கள் கையில் பணப்புழக்கம் சரளமாக இருக்கும். பெரிய அளவிலான செலவுகளை தவிர்த்துவிடுங்கள். முதலீடுகள் குறித்த முக்கிய முடிவுகளை இந்த மாதம் எடுக்காமல் தள்ளிப் போடுங்கள்.

உங்கள் நிதிநிலைமை மேம்பட : குபேரன் பூஜை 

வேலை :

உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு பணியிடத்தில் இந்த மாதம் அனுகூலமான நிலைமை காணப்படும். நீங்கள் கடினமாக உழைத்து முன்னேறுவீர்கள். பணியிடத்தில் காணப்படும் பல பிரச்சினைகள் தீர நீங்கள் ஆலோசனைகளைக் கூறுவீர்கள். உங்கள் புகழ் கூடும்.  நீங்கள் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்வீர்கள். உங்கள் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுபவர்களும் இருப்பார்கள். எனவே கவனமுடன் செயல்படுங்கள். சில சமயம் பணியிடத்தில் அவசரமான நெருக்கடியான நிலைமையை நீங்கள்  சந்திக்க நேரும்.  சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளுடன் சில மோதல்கள் ஏற்படும். நீங்கள் கவனமுடன் செயல்பட்டால் இந்தப் பிரச்சினைகளை எல்லாம் எளிதாக சமாளித்து வெற்றி காணலாம்.

தொழில் :

இந்த மாதம் நீங்கள் அதிக போட்டியாளர்களை சந்திக்க  நேரும். இதனால் பதட்டமான சூழ்நிலை இருக்கும். சிறிது ஒய்வு அல்லது விடுப்பு எடுத்துக் கொள்வதன் மூலம் இழந்த உற்சாகத்தை திரும்பப் பெறுவீர்கள். இருந்த போதிலும் நீங்கள் சிறப்பாக திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். உங்களின் சரியான முடிவுகள் மூலம் நீங்கள் லாபம் காண்பீர்கள். 

தொழில் வல்லுனர்கள் :

நீங்கள் துணிச்சலுடன் செயல்படுவீர்கள். உங்கள் திறமைகள் அனைத்தும் வெளிப்படும் மாதமாக இந்த மாதம் இருக்கும். தொழிலில் போட்டிகள் அதிகமாக இருக்கும். என்றாலும்  அதை சமாளிக்கும் ஆற்றலும் உங்களுக்கு இருக்கும்.  கடின உழைப்பும் விடா முயற்சியும் உங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும். நீங்கள் தனித்து செயல்பட விரும்புவீர்கள். உங்கள் பேச்சாற்றல் வெளிப்படும். உங்கள் படைப்பாற்றல் திறமை வெளிப்படும்.  

வேலை மற்றும் தொழிலில் மேம்பட : சூரியன் பூஜை 

ஆரோக்கியம் :

இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சீராக இருக்கும் என்ற போதிலும் உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். அஜீரணக் கோளாறுகள் ஏற்படும் என்பதால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். தகுந்த மருத்துவ சிகிச்சையும் மருந்தும் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள்.  

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சனி பூஜை 

மாணவர்கள் :

விருச்சிக ராசி மாணவர்கள்  இந்த மாதம் சிறந்த மாதமாக இருக்கக் காண்பார்கள். அனைத்து மாணவர்களுக்கும் இந்த மாதம் அதிர்ஷ்டகரமான மாதமாக இருக்கும். தேர்வில் எளிதாக தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண்களை எடுப்பார்கள். மாணவர்களுக்கு பெற்றோரின் ஆதரவும் ஊக்கமும் கை கொடுக்கும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் வழிகாட்டுதலும் மாணவர்களை உற்சாகப்படுத்தும். 
கல்வியில் சிறந்து விளங்க : அங்காரகன் பூஜை

சுப தேதிகள் : 9, 10, 11, 12, 13 14, 20, 23, 25,26, 27, 28, 29, 30, 31, 
அசுப தேதிகள் : 1 ,2,3, 4, 5, 6, 7, 8, 15, 16, 17, 18, 19, 21, 22, 24.

banner

Leave a Reply

Submit Comment