AstroVed Menu
AstroVed
search
search

தனுசு மே மாத ராசி பலன் 2021 | May Matha Dhanusu Rasi Palan 2021

dateApril 5, 2021

தனுசு மே மாத பொதுப்பலன் 2021 :  

தனுசு ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்களுக்கு அற்புதமான பல நல்ல பலன்கள் கிடைக்கும் என்றாலும்  நீங்கள் எதிர்பார்க்கும் சில விஷயங்களில் சற்று ஏமாற்றமும் இருக்கும். நீங்கள் கணிசமான வருமானத்தை ஈட்டுவீர்கள். பணத்தை சேமிக்கவும் செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் தேவையில்லாமல் சண்டை சச்சரவு மற்றும் வாக்குவாதங்கள் செய்வது போன்றவற்றில் ஈடுபடாதீர்கள். அளவுடன் பேசுங்கள். அன்புடன் பழகுங்கள். அவர்களுடன் உங்களின் பொன்னான நேரத்தை செலவு செய்யுங்கள்.  இதன் மூலம் குடும்பத்தில் நல்லுறவு ஓங்கும். அமைதி நிலவும். உத்தியோகம் செய்பவர்கள் பணியிடத்தில் அனுகூலமான சூழ்நிலை இருக்கக் காண்பார்கள். பணியிடத்தில் புதிய வாய்ப்புகள் வந்து சேரும். பணியில் முன்னேற்றங்களைக் காண்பீர்கள். நீங்கள் சொந்தத் தொழில் செய்பவராக இருந்தால் புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். அதன் மூலம் லாபமும் காண்பீர்கள். உங்கள் ஆரோக்கியம் இந்த மாதம் சாதாரணமாக இருக்கும். மாணவர்கள் மனப் பக்குவத்துடன் எதையும் எதிர்கொண்டு முன்னேற வேண்டும். உற்சாகத்துடனும். பொறுமையுடனும், நேர்மையுடனும் செயல்பட வேண்டிய மாதம் இது. மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.  

காதல் / குடும்ப உறவு  :

தனுசு ராசி இளம் வயது அன்பர்கள் சிலர் இந்த மாதம் காதல் வலையில் விழக் கூடும். காதல் உறவுகள் இனிக்கும். திருமணமான தம்பதிகள் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு விட்டுக் கொடுத்தும்  அனுசரித்தும் செல்வதன் மூலம் இல்லறத்தில் இனிமை பொங்கும். இந்த மாதக் கடைசியில் கருத்துவேறுபாடுகள் காரணமாக இருவருக்கும் இடையே சிறிய மோதல் அல்லது வாக்குவாதம் ஏற்படும் என்பதால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். 

திருமண உறவில் நல்லிணக்கம் காண : சுக்கிரன் பூஜை 

நிதிநிலை :

இந்த மாதம் நீங்கள் கணிசமான பண வரவைக் காண்பீர்கள். நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள் என்பத சொல்லித் தான் தெரிய வேண்டுமா என்ன ? கையில் பணம் புரள்கிறது என்று அலட்சியமாக இருந்து விடாதீர்கள்.  பண விஷயங்களில் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளவேண்டும். உங்கள் பொருளாதார வளர்ச்சியை நீங்கள் உங்கள் குடும்ப அங்கத்தினர்களிடம் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்வீர்கள்.  அவர்களின் சந்தோஷமும் இரட்டிப்பாகும்.

உங்கள் நிதிநிலை மேம்பட : அங்காரகன் பூஜை 

வேலை :

நீங்கள் எந்தத் துறையில் உத்தியோகம் பார்க்கிறீர்கள் என்றாலும் இந்த மாதம் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் கிட்டும். பணியிடத்தில் நீங்கள் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உங்கள் இலக்கை அடையும் வரை நீங்கள் விடா முயற்சியுடன் போராடுவீர்கள். வேலைச் சுமை அதிகமாக இருக்கும். சில தடைகளையும் தாண்டி வெற்றி  பெற வேண்டிய சூழல்  இருக்கும் எனவே தன்னம்பிக்கை மற்றும் தைரியத்துடன்  கவனமாகச்  செயல்படுங்கள். 

வியாபாரம் :

ஆழம் பார்க்காமல் காலை விடுவது நல்லதல்ல என்ற வாசகத்தை கவனத்தில் வைத்துக் கொண்டு நீங்கள்  தொழில் குறித்த முடிவுகளை கவனமாகவும்  புத்திசாலித்தனத்துடனும்   எடுப்பீர்கள். நல்லது எது கெட்டது எது  என ஆராயாமல்  எந்தவொரு முடிவையும் எடுக்க மாட்டீர்கள். இந்த மாதம் நீங்கள்  வாடிக்கையாளர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரும்.  என்றாலும் இது தற்காலிகமான சிறு பிரச்சினை தான். மொத்தத்தில் இந்த மாதம் நீங்கள் தன்னம்பிக்கை மற்றும் தைரியத்துடன் செயல்படுவீர்கள்.

தொழில் வல்லுனர்கள் :

இந்த மாதம் நீங்கள் சோதனைகளை எல்லாம் சாதனைப் படிகளாக மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும். மாற்றம் ஒன்றே மாறாதது , எனவே மன மகிழ்ச்சியுடன்  மாற்றங்களை எதிர்கொள்ளத் தயாராக இருங்கள்.  உங்கள் திறமை மற்றும் தகுதியை வெளிப்படுத்தி நன்கு செயலாற்றி நீங்கள் நல்ல பெயர் மற்றும் நன்மதிப்பு பெறுவீர்கள்.  பணி நிமித்தமான பயணங்களை நீங்கள் மேற்கொள்ள நேரும். அதன் மூலம் நீங்கள் சாதகமான பலன்களைப் பெற இயலும். நீங்கள் நேரத்தைச் சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் சிறந்த பலன்களைக் காண்பீர்கள். 

வேலை மற்றும் தொழிலில் மேன்மை பெற :  சூரியன் பூஜை 

ஆரோக்கியம் :

உங்கள் ஆரோக்கியத்தில் சில பிரச்சினைகளை இந்த மாதம் நீங்கள் சந்திப்பீர்கள். என்றாலும் தகுந்த மருத்துவ சிகிச்சை மூலம் சரியாகிவிடும். எனவே நீங்கள் கவலை கொள்ளும் அளவிற்கு பெரிய அளவிலான உடல் பாதிப்புகள் ஏதும் இருக்க வாய்ப்பில்லை.  என்றாலும் சிறிய அளவிலான பாதிப்ப்பு என்றாலும் அலட்சியம் வேண்டாம். சரிவிகித உணவு உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது. துரித உணவுகளை தவிர்க்கவும். அதிக சர்க்கரை,உப்பு மற்றும் எண்ணெய் தவிர்க்கவும். 

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : விஷ்ணு பூஜை 

மாணவர்கள் :

மாணவர்களுக்கு இது சிறந்த பலன் தரும் மாதமாக இருக்கும். சிறப்பாக செயல்படுவதற்கு படிப்பில் கவனம் மிகவும் அவசியம். எனவே  அமைதியான இடத்தில் அமர்ந்து படியுங்கள். நேர்மையான வழியில் நடந்து கொள்ளுங்கள். குறுக்கு வழிகளை நாடாதீர்கள். தவறுகள் வாழ்வில் சகஜம் தான். நாம் செய்யும் ஒவ்வொரு தவறுகளும் நமக்கு படிப்பினையை கற்றுத் தரும். தவறுகளில் இருந்தும் பாடங்களை கற்றுக் கொள்ளுங்கள். கடின உழைப்பினை மேற்கொண்டு உங்கள் லட்சியத்தை நோக்கி முன்னேறுங்கள். வணிகவியல் மற்றும் விஞ்ஞானம் படிக்கும் மாணவர்கள் இந்த மாதம் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். 

கல்வியில் மேன்மை பெற : அங்காரகன் பூஜை 

சுப தேதிகள் :  1, 2, 3, 9, 10, 11, 15, 16, 17, 18, 19, 26, 27, 28, 29, 30, 31.
அசுப தேதிகள் :  4, 5, 7, 6, 8, 12, 13, 14, 20, 21, 22, 23, 24, 25.


banner

Leave a Reply