Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

துலாம் மே மாத ராசி பலன் 2021 | May Matha Thulam Rasi Palan 2021

April 5, 2021 | Total Views : 531
Zoom In Zoom Out Print

துலாம் மே மாத பொதுப்பலன் 2021 :

இந்த மாதம் மகிழ்ச்சியான செய்தி உங்கள் மனதை மகிழ்விக்கும். குடும்பத்தில் குதூகலம் இருக்கும். காதலிப்பவர்கள் மனதில் உற்சாகம்  இருக்கும். கணவன் மனைவி  உறவு இனிமையாக இருக்கும். . குழந்தைகளுடன் நல்லுறவு பராமரிப்பீர்கள்.  திருமணமானவர் என்றால் உங்கள் வாழ்க்கைத் துணை மற்றும் குழந்தைகளின் அன்பை நீங்கள் பெறுவீர்கள். உத்தியோகத்திலும் நீங்கள்  வெற்றி பெறுவீர்கள். உங்கள் கடின உழைப்பிற்கான அங்கீகாரத்தை உங்கள் மேலதிகாரிகளிடம் இருந்து பெறுவீர்கள். உங்கள் பேச்சுத் திறமை பெருகும். அதன் மூலம் நீங்கள் புகழ் அடைவீர்கள்.  நீங்கள் திருமணத்திற்குக் காத்திருப்பவர் என்றால் தக்க துணை கிடைக்கப் பெறுவீர்கள். பல்வேறு வழிகளில் உங்களுக்கு பணம் வந்து சேரும். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக  இருக்கும். இந்த மாதம் நீங்கள் பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் தொழில் சார்ந்த கனவுகள் நனவாக உங்கள் குடும்ப உறுப்பினர்கள் உதவுவார்கள். தொழில் மூலம் வளர்ச்சியும் மரியாதையும் கிட்டும். வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். உங்கள் வசதிகள் பெருகும். ஆடம்பரமாக வாழ்வீர்கள். உங்கள் குடும்பத்தினரை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள  முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.

காதல் / குடும்பம் :

இளம் வயது துலா  ராசி அன்பர்கள் சிலர் காதல் வயப்படும் வாய்ப்பு உள்ளது. ஆனால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் துணையைக் கவரும் முயற்சிகளை நீங்கள் மேற்கொள்வீர்கள். சிலரது காதல் உறவு திருமண பந்தமாக மாறும் வாய்ப்பு உள்ளது. திருமணமானவர்கள் வாழ்க்கை சீராகச் செல்லும். 

திருமண உறவில் நல்லிணக்கம் காண : அங்காரகன் பூஜை 

நிதிநிலை :

இந்த மாத ஆரம்பத்தில் அதிக செலவுகள் காரணமாக  சில பொருளாதார சிக்கல்களை சந்திப்பீர்கள்.  என்றாலும் பணப் பற்றாக்குறை இருக்க வாய்ப்பில்லை. இந்த நிலைமை மாத மத்தியில் படிப்படியாக சீராகிவிடும். உங்கள் வருமானம் உயரும் வாய்ப்பு உள்ளது. எனவே பணத்தை சேமிக்க முயற்சி மேற்கொள்ளுங்கள். 

உங்கள் நிதிநிலை மேம்பட : குரு பூஜை 

வேலை :

உத்தியோகத்தில் நீங்கள் பல புதிய சவால்களை சந்திக்க நேரும். இந்த மாத  ஆரம்பத்தில் விடா முயற்சி மற்றும் கடின உழைப்பின் மூலம் நீங்கள் வெற்றி காண்பீர்கள். தவறுகள் நேர வாய்ப்புள்ளது  என்றாலும் உங்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் திறமைகளை மேம்படுத்துவதன் மூலம் நீங்கள் சிற்பபாகச் செயலாற்றுவீர்கள்.  உங்களுக்கு அளிக்கப்படும் பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க முயலுங்கள். 

தொழில் :

உங்கள் முழு கவனத்தையும் செலுத்தி செயல்பட்டால் தொழிலில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். உங்கள் பணியாளர்களை நீங்கள் சிறந்த முறையில் வேலை வாங்குவீர்கள். தலைமைப் பொறுப்பை சிறந்த வகையில் நிர்வகிப்பீர்கள். குழுவாகச் செயல்பட்டால் நிச்சயம் வெற்றி காண்பீர்கள். நேரம் மற்றும் பணத்தை மதித்து நடந்து கொள்ளுங்கள். கடினமாக உழைப்பதன் மூலம் உங்கள் இலக்கை நீங்கள் எட்டுவீர்கள். 

தொழில் வல்லுனர்கள் :

தொழிலில் ஏற்படும் தடைகளை நீங்கள் எளிதாகக் களைவீர்கள். சவாலான சூழ்நிலையில் கூட நீங்கள் அமைதியை இழக்கமால் செயல்படுவீர்கள். நீங்கள் தோல்வியை தவிர்த்து வெற்றியைத் தழுவுவீர்கள். உங்கள் வேலையில் நீங்கள் சில தவறுகளை செய்ய நேரும். எனவே  நீங்கள் கவனமுடன் செயல்படுங்கள். 

வேலை மற்றும் தொழிலில் மேம்பட : சுக்கிரன் பூஜை 

ஆரோக்கியம் :

இந்த மாதம் உங்களுக்கு பெரிய அளவிலான ஆரோக்கிய பாதிப்புகள் ஏதும் இருக்காது.  என்றாலும் உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். சிறிய உடல் பாதிப்புகள் ஏற்பட்டாலும்  மருத்துவரின் ஆலோசனைகளை மேற்கொள்வது நல்லது. யோகா தியானம் போன்றவற்றை மேற்கொள்ளுங்கள். சரிவிகித உணவு உங்கள் ஆரோக்கியத்தைக் காக்கும்.  

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சனி பூஜை 

மாணவர்கள் :

இந்த மாத ஆரம்பத்தில் மாணவர்கள் கவனச் சிதறலுக்கு ஆட்படுவார்கள். இதனால் படிப்பில் கவனம் குறையும் வாய்ப்பு உள்ளது. என்றாலும் கட்டுப்பாட்டுடன் செயல்பட்டால். கவனமுடன் படிக்க இயலும். எனவே பொழுது போக்கும் நேரத்தைக் குறைத்துக் கொண்டு படிப்பில் கவனம் செலுத்துங்கள். அன்றன்றைய பாடங்களை அன்றே முடித்துவிடுங்கள். வீட்டுப் பாடங்களை உடனுக்குடன் முடிக்க முயலுங்கள்.  இந்த மாதம் விஞ்ஞான பாடத்தை நீங்கள் நன்கு படிப்பீர்கள்

கல்வியில் மேன்மை பெற : அங்காரகன் பூஜை
 
சுப தேதிகள் :  8, 9, 13, 14, 15, 16, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31.
அசுப தேதிகள் : 1,2,3, 4, 5, 6, 7, 10, 11, 12, 17, 18, 19, 20, 21, 22.

banner

Leave a Reply

Submit Comment