Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

சிம்மம் மே மாத ராசி பலன் 2021 | May Matha Simmam Rasi Palan 2021

April 2, 2021 | Total Views : 741
Zoom In Zoom Out Print

சிம்மம் மே மாத பொதுப்பலன் 2021:

சிம்ம ராசி அன்பர்களே! இந்த மாதம் நீங்கள் சில அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். குறிப்பாக உங்கள் நிதிநிலையில்  அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள் என்றாலும் கடந்த காலத்தில் நீங்கள் பெற்ற கடனை அடைப்பதில் சில  சிரமங்களை நீங்கள் சந்திப்பீர்கள். திட்டமிட்டு செலவுகளை மேற்கொள்வதன் மூலம் நிலைமையை நீங்கள் சமாளிக்க இயலும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்ள வேண்டும். தொழில் செய்பவர்கள் இந்த மாதம் சாதகமான பலன்களைப் பெற சிறிது  கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.  புதிய  தொழில் முயற்சிகளை இந்த மாதம் மேற்கொள்வது உசிதமல்ல.  சிம்ம ராசி மாணவர்கள் இந்த மாதம் சிறப்பாகக்  கல்வி பயில்வார்கள்.  என்றாலும் அவர்களின் முயற்சியும் மிகவும் தேவை.  உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.

காதல் / குடும்பம் :

இளம் வயது சிம்ம ராசி அன்பர்களுக்கு மனதில் காதல் மலரும். உங்கள் மனதில் இருக்கும் சஞ்சலம் காரணமாக  உறவில்  சில பிரச்சினைகள் ஏற்படும். வீட்டில் இருக்கும் பெரியவர்களின்  ஆலோசனை உங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும். கணவன் மனைவி உறவில் ஒற்றுமை இருக்க கருத்துவேறுபாடுகளைக் களைந்து மனமொருமித்துச்செயல்பட வேண்டும். 

திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண : சுக்கிரன் பூஜை 

நிதிநிலை :

இந்த மாதம் நீங்கள் அதிக வருமானம் ஈட்டுவீர்கள். உங்கள் கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். அதே சமயத்தில் ஏற்கனவே பெற்ற கடனை அடைக்க வேண்டிய நெருக்கடியும்  இருக்கும். இதன் காரணமாக பதட்டமான சூழ்நிலை இருக்கும். திட்டமிட்டு பணத்தை செலவு செய்ய வேண்டும். உங்கள் தனிப்பட்ட செலவுகளை குறைத்துக் கொள்ள  வேண்டியது அவசியம். 

உங்கள் நிதிநிலை மேம்பட : லக்ஷ்மி பூஜை 

வேலை :

இந்த மாதம் உங்களுக்கு ஆக்கப் பூர்வமாக செயல்படுவது கடினமாக இருக்கும். எதிலும் ஒரு மந்த நிலை இருக்கும். பொறுமை மிகவும் அவசியம். உங்களுக்கு அளிக்கப்படும் பணிகளை ஒவ்வொன்றாக முடியுங்கள். பணியிடத்தில் வெளிப்படையாகப் பேசுங்கள். பெரிய பொறுப்புக்களை ஏற்பதற்கு இந்த மாதம் உகந்த நேரம் அல்ல. நீங்கள் மார்கெட்டிங் துறையில் இருந்தால் பயணங்களை மேற்கொண்டு உங்கள் வியாபாரத் திறனை நிரூபிக்க இயலும். 

தொழில் :

இந்த மாதம் நீங்கள் தொழில் மூலம் ஆதாயங்களைக் காண்பீர்கள். அதே சமயத்தில்  சில சவாலான தருணங்களையும் நீங்கள் சந்திக்க நேரும். இந்த மாதம் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டிய கட்டாயம் இருக்கும்.  எனவே உங்கள் நேரம் மற்றும் முயற்சியை இன்னும் அதிகமாக்கி செயல்பட்டால் அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவீர்கள். புதிய ஆட்களை நியமிப்பதன் மூலம் உங்கள் பணிகளை விரைவில் செவ்வனே முடிக்க இயலும். 

தொழில் வல்லுனர்கள் :

சிம்ம ராசி தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் சிறப்பாக இருக்கக் காண்பார்கள். உங்கள் எண்ணங்கள் யாவற்றையும் செயல்படுத்துவீர்கள். நீங்கள் புதிய பொறுப்பு ஒன்றை மேற்கொண்டு அதனை செவ்வனே செய்து முடிப்பீர்கள். நீங்கள் சிறந்த முறையில் தலைமைப் பொறுப்பு வகிப்பீர்கள். சக பணியாளர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். 

 உங்கள் வேலை மற்றும் தொழில் மேம்பட : சூரியன் பூஜை  

ஆரோக்கியம் :

இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் ஓரளவு சீராக இருக்கும். காய்ச்சல், சளி, இருமல் போன்ற பாதிப்புகள் வந்து போகும். முறையான ஒய்வு மூலம் உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் தக்க வைத்துக் கொள்ள முடியும். மற்றபடி பெரிய அளவிலான ஆரோக்கிய பாதிப்புகள் ஏதும் இருக்காது. 

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சூரியன் பூஜை 

மாணவர்கள் :

இந்த மாதம் மாணவர்கள் மனதை ஓருமுகப்படுத்த வேண்டும். விளையாட்டு மற்றும் பிற கல்வி சாரா விஷயங்களில் அதிக நாட்டம் காரணமாக படிப்பில் தடை மற்றும் தாமதம் ஏற்படும். எனவே கவனமுடன் படித்து முன்னேற வேண்டும். பொழுது போக்கும் நேரத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். தங்கள் படிப்பில் முழு கவனம் மற்றும் நேரத்தை செலுத்த வேண்டும். 

கல்வியில் மேன்மை பெற : அங்காரகன் பூஜை 
 
சுப தேதிகள் :   1, 2, 3, 4, 5, 13, 14, 15, 20, 23, 26, 27, 28, 29, 30, 31
அசுப தேதிகள் :  6, 7, 8, 9, 10, 11, 12, 18, 19, 16, 17, 21, 22, 24, 25, 

banner

Leave a Reply

Submit Comment