AstroVed Menu
AstroVed
search
search

கடகம் மே மாத ராசி பலன் 2021 | May Matha Kadagam Rasi Palan 2021

dateApril 2, 2021

கடகம் மே மாத பொதுப்பலன் 2021:

கடக ராசி அன்பர்களே!  உங்கள் மனதில் புத்துணர்வு அதிகரிக்கும் மாதமாக இந்த மாதம் இருக்கும். குடும்பத்தில் சுமுகமான உறவு காணப்படும். குடும்ப உறுப்பினர்களின் அன்பையும் ஆதரவையும் நீங்கள் பெறுவீர்கள். கணவன் மனைவி உறவில் ஒற்றுமை  சிறப்பாக இருக்கும். இருவரும் பரஸ்பரம் அன்புடன் இருப்பீர்கள். திருமணத்திற்குக் காத்திருப்பவர்களுக்கு திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. இந்த மாதம் நீங்கள் பணம் ஈட்டுவதற்கு அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எதிர்கால நலன் கருதி பணத்தை  சேமிக்க வேண்டும். இந்த மாதத்தின் இடைப் பகுதியில் பணப் புழக்கம் குறையும்.  தொழில் மற்றும் வியாபாரத்தில் சவாலான சூழ்நிலையை நீங்கள் சந்திக்க நேரும். பழைய வாடிக்கையாளர்கள் உங்களை நாடி வருவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடின உழைப்பினை  மேற்கொள்ள வேண்டியிருக்கும். பணியில் சீரான வளர்ச்சி கிட்டும். மாணவர்கள் மனதில் கவனக் குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றாலும் மனதை ஒருமுகப்படுத்தி படிப்பதன் மூலம் கல்வியில் சிறந்து விளங்க முடியும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை மூட்டு வலி போன்ற பிரச்சினைகள் காணப்படும். உடல் அசௌகரியம் சிறிய அளவில் என்றாலும் உடனே மருத்துவரை கலந்து ஆலோசிப்பது நல்லது.மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.

காதல் / திருமண உறவு :

இளம் வயது கடக ராசி அன்பர்கள் மனதில் இந்த மாதம் காதல் அரும்பு மலரும். சிலரின் காதலை குடும்ப உறுப்பினர்கள் அங்கீகரிப்பார்கள். சிலரது காதல் உறவு திருமண உறவாக மாறும்.  திருமணமான தம்பதிகள் இடையே உறவு சிறப்பாக இருக்கும் என்றாலும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வதன் மூலம் நல்லுறவை தக்க வைத்துக் கொள்ள முடியும். உங்கள் வாழ்க்கைத் துணையை மகிழ்ச்சிப் படுத்த நீங்கள் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். திருமண

வாழ்வில் நல்லிணக்கம் காண : குரு பூஜை 

நிதிநிலை :

உங்கள் வருமானத்தை உயரத்திக் கொள்ள  நீங்கள் அதிக முயற்சிகளை  மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த மாத நடுவில் இருந்து உங்கள் பணப்புழக்கம் சிறிது சிறிதாக உயரும். என்றாலும் உள்ளதைக் கொண்டு நீங்கள் திருப்தி அடைய வேண்டும். இந்த மாதம் நீங்கள் ஆடம்பர செலவுகளை மேற்கொள்வீர்கள். ஆனால் உங்கள் சக்தியை மீறி செலவு செய்யாமல் காத்துக் கொள்ளுங்கள். 

உங்கள் நிதிநிலை மேம்பட : லக்ஷ்மி குபேர பூஜை

வேலை :

உத்தியோகத்தில் இருப்பவர்கள்,  உங்களின் புதுமையான கருத்துக்களை மேலதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ள நினைப்பீர்கள். இந்த வகையில் நீங்கள் பல புதிய சவால்களை சந்திக்க நேரும். எனவே ஒன்றிற்கு  இரண்டு முறை உங்கள் கருத்துக்களை ஆராய்ந்து பார்த்து அதன் பிறகு அதனை வெளிப்படுத்துவது பற்றிய முடிவை எடுங்கள். இந்த மாத நடுவில் நீங்கள் பணி நிமித்தமாக குறைந்த தூர பிரயாணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். அந்தப் பயணங்கள் மூலம் நீங்கள் ஆதாயமும் மேலதிகாரிகளிடம் பாராட்டும் பெறுவீர்கள். 

தொழில் :

வியாபாரம் அல்லது தொழில் செய்பவர்கள், பொருட்களின் தரத்திற்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். இதனால் வாடிக்கையாளர்களின் பாராட்டைப் பெறுவார்கள். இந்த மாத நடுவில் பழைய வாடிக்கையாளர் ஒருவர் மூலம் நீங்கள் ஒரு முக்கியமான தொழில் வாய்ப்பினைப் பெறுவீர்கள். என்றாலும் வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தி சிறந்த பலன்களைக் காண நீங்கள் கடினமாக உழைக்கக வேண்டியிருக்கும். குறித்த நேரத்தில் சேவைகளை அளிக்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏற்றுமதி இறக்குமதி  வியாபாரம் இந்த மாதம் நன்கு செழிக்கும். 

தொழில் வல்லுனர்கள் :

தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் சிறப்பாகப் பணியாற்றுவார்கள். தொழிலில் சில இடையூறுகள் வந்து போகும். புது ஆட்களை நியமித்து வேலை வாங்குவீர்கள். அவர்கள் சுறுசுறுப்பாகச் செயல்படுவார்கள். என்றாலும் சிறந்த பலன்களைக் காண, குறிப்பாக வெளி நாடு செல்ல வேண்டும் என்று கனவு காண்பவர்கள்,  அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். 

வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் காண : அங்காரகன் பூஜை 

ஆரோக்கியம் :

உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெரிய அளவிலான ஆரோக்கியப் பிரச்சினைகள் ஏதும் இருக்காது. ஆரோக்கியக் குறைபாடுகள் சிறிய அளவில் மட்டும் தான் இருக்கும் என்பதால் நீங்கள் ஆற்றலுடன் செயல்படுவீர்கள். மத்திம வயது மற்றும்  முதிய வயதில் இருப்பவர்களுக்கு மூட்டு வலி போன்றவை ஏற்படும். தசைப் பிடிப்பு, எலும்பு முறிவு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. 

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சூரியன் பூஜை 

மாணவர்கள் :

மாணவர்கள் கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். குடும்ப சலசலப்புகள் உங்கள் கவனத்தை திசை திருப்பும் என்பதால் மனதில் அமைதியை வளர்த்துக் கொள்ளுங்கள். அமைதியான இடத்தில் அமர்ந்து பாடங்களைப் படியுங்கள். மேற்படிப்பில் சேர விரும்புபவர்கள் தாங்கள் நினைக்கும் கல்லூரியில் விரும்பும் பாடங்கள் கிடைக்கப் பெறுவார்கள். 

கல்வி மேம்பட : குரு பூஜை 

சுபதேதிகள் :   1,2,3, 9, 10, 14, 17, 18, 19, 20, 21, 22, 23, 29, 30, 31.
அசுப தேதிகள் :  4, 5, 6, 7, 8, 11, 12, 13, 15, 16, 24, 25, 26, 27, 28.


banner

Leave a Reply