AstroVed Menu
AstroVed
search
search

கன்னி மே மாத ராசி பலன் 2021 | May Matha Kanni Rasi Palan 2021

dateApril 2, 2021

கன்னி மே மாத பொதுப்பலன் 2021:

கன்னி ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்கள் விருப்பத்திற்கு மாறாக சில விஷயங்கள் நடக்கும். உங்களுக்கு எதிராக சிலர் செயல்படுவார்கள். இப்படி சில அனுகூலமற்ற பலன்களை நீங்கள் இந்த மாதம் சந்திக்க நேரும். எனவே பொறுமை மிகவும் அவசியம். உங்கள் மனதில் சஞ்சலம் இருக்கும். குடும்பத்தில் அமைதியற்ற நிலை இருக்கும். நீங்கள் திருமணமாகாதவர் என்றால் உங்கள் திருமணத்தை இன்னும் சிறிது காலத்திற்கு தள்ளிப் போடுங்கள். பணியிடத்திலும் நீங்கள் சில இடர்பாடுகளை சந்திக்க நேரும்.  போட்டி பொறாமை அதிகமாக இருக்கும். உங்கள் முயற்சியின் பலனை எளிதாக வேறு ஒருவர் தட்டிச் செல்லும் வாய்ப்பு உள்ளது. நீங்கள் மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டிய மாதம் இது. உங்கள் திறமை வெளிப்படும் வகையில் செயல்பட்டால் நீங்கள் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள் பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் உங்கள் மனதில் எழும். நீங்கள் தொழில் செய்பவர் என்றால் உங்கள் தொழிலை மற்றொரு இடத்திலும் நடத்துவதன் மூலம் தொழில் விரிவாக்கம் செய்வீர்கள். தொழில் மூலம் அதிக லாபம் சம்பாதிப்பீர்கள்.  மாணவர்களுக்கு இந்த மாதம் நெருக்கடியான நேரமாக இருக்கும். கடின முயற்சிகளை மேற்கொண்டால் தான் நீங்கள் சிறப்பாகக் கல்வி பயில இயலும். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.

காதல் / குடும்ப உறவு :

திருமணமான தம்பதிகள் இடையே கருத்து வேறுபாடுகள் எழும். இதனால் மனக் கசப்பு எழ வாய்ப்புள்ளது. எனவே விட்டுக் கொடுத்து, அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அமைதியை நிலை நாட்ட முடியும். திருமணத்திற்குக் காத்திருப்பவர்களுக்கு பெற்றோரின் வற்புறுத்தல் இருக்கும். உங்கள் கருத்தை அமைதியான முறையில் எடுத்துச் சொல்லுங்கள். உங்கள் திருமணத்தை சிறிது காலத்திற்குத் தள்ளிப் போடுங்கள்

திருமண உறவில் நல்லிணக்கம் காண : அங்காரகன் பூஜை 

நிதிநிலை :

இந்த மாதம் நீங்கள் கணிசமாக வருமானத்தை ஈட்டுவீர்கள்.  பிறருக்கு உதவி புரிய வேண்டும் என்ற தொண்டுள்ளத்துடன் பணத்தைக் கொண்டு பிறருக்கு உபகாரம் செய்வீர்கள். உங்கள் வருமானத்தை மேலும் பெருக்கிக் கொள்ள நீங்கள் புதிய தொழில்  தொடங்குவீர்கள்.  அதன் மூலம் சிறந்த லாபமும் காண்பீர்கள். பண முதலீடுகளை மேற்கொள்வதற்கு முன் நன்றாக சிந்தித்து செயல்படுங்கள். இந்த மாதம் நீங்கள் அதிக வரி கட்ட வேண்டிய சூழல் இருக்கும். 

உங்கள் நிதிநிலை மேம்பட : குரு பூஜை 

வேலை :

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பாகச் செயல்பட்டு முன்னேற்றமும் வளரச்சியும்  காண்பீர்கள். உங்கள் வளர்ச்சி கண்டு பொறாமைப் படுபவர்கள் உங்கள் முயற்சிகளை அபகரிக்கப் பார்ப்பார்கள். கவனம் தேவை. நீங்கள் சுறுசுறுப்புடனும், உற்சாகத்துடனும் கடின உழைப்பை மேற்கொள்வீர்கள். உங்கள் செயல் திறன்  மூலம் பதவி உயர்வு, பணியிட மாற்றம் போன்றவற்றைப் பெறுவீர்கள். ஆனால் நீங்கள் நன்மை தீமைகளை ஆராய்ந்து அதற்கேற்ப பணியிட மாற்ற முடிவுகளை எடுப்பது  நல்லது. ஒன்றிற்கு இரண்டு முறை யோசித்து எந்தவொரு முடிவையும் எடுங்கள். 

தொழில் :

உங்கள் புதிய தொழில் முயற்சி மூலம் நீங்கள் ஆதாயமும் முன்னேற்றமும் பெறுவீர்கள். புது இடத்தில் நடத்தும் தொழில் மூலம் உங்கள் தொழிலின் விரிவாக்கத்தை மேற்கொள்வீர்கள். இதன் மூலம் நீங்கள் பல புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள் என்றாலும் உங்கள் பொறுப்புகள் அதிகமாகும்.

தொழில் வல்லுனர்கள் :

தொழில் என்றால் நிச்சயமாக போட்டிகள் இருக்கத் தான் செய்யும். என்றாலும் இந்த மாதம் போட்டிகள் குறித்த கவலை உங்கள் மனதை பாதிக்கும்.  உங்கள் கடின முயற்சிகளில் பிறர் குளிர் காய்வார்கள். அவர்கள் உங்கள் உழைப்பத் தட்டிப் பறித்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. எனவே கவனமாகச் செயல்படுங்கள்.

வேலை அல்லது தொழிலில் மேம்பட : புதன் பூஜை 

ஆரோக்கியம் :.

இந்த மாதம் நீங்கள் சிறந்த ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள் என்றாலும் உங்கள் குடும்ப அங்கத்தினர்கள் ஆரோக்கியம் குறித்த கவலை உங்களை வாட்டும். அவர்கள் மருத்துவம் குறித்த செலவு மற்றும் பிற விஷயங்கள் உங்கள் மனதில் பதட்டத்தை ஏற்படுத்தும்.  எனவே உங்கள் ஆரோக்கியத்திலும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டுயிருக்கும். சரியான  ஓய்வும்,  முறையான  உடற்பயிற்சியும் மிகவும் அவசியம். 

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சூரியன் பூஜை 

மாணவர்கள் :

இந்த மாதம் கன்னி ராசி மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மனதை ஒருமுகப்படுத்துவதில் சிரமம் காண்பார்கள். எனவே சில சவாலான தருணங்களை அவர்கள் சந்திக்க நேரும்.  கவனச் சிதறல் காரணமாக படிப்பில் அக்கறை குறையும். ஆசிரியர் மற்றும் நண்பர்களின் ஆதரவை நாடி உங்களை உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள். கன்னி ராசியினரின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பற்றிய கவலையில் மூழ்குவார்கள்.

கல்வியில் சிறந்து விளங்க : சனி பூஜை 
 
சுப நாட்கள் :  7, 8, 9, 10, 11, 15, 16, 17, 18, 19, 20, 28, 29, 30, 31.
அசுப நாட்கள் : 1, 2, 3, 4, 5, 6, 12, 13, 14, 21, 22, 23, 24, 25, 26, 27.

Leave a Reply