மிதுனம் மே மாத ராசி பலன் 2022 | May Matha Mithunam Rasi Palan 2022

மிதுனம் மே மாத பொதுப்பலன் 2022:
மிதுன ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் வசந்த காலம் என்று கூட கூறலாம். இந்த மாதம் நீங்கள் மிகவும் வளமுடன், மகிழ்ச்சியுடன் திருப்திகரமான வாழ்க்கை வாழ்வீர்கள். உங்களில் ஒரு சிலர் உங்கள் இலக்குகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். உங்கள் நியாயமான விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். சிலர் வெளிநாடு செல்லும் வாய்ப்பும் அங்கு நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி காண்பீர்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை தொழில் அல்லது பணி என அனைத்தும் வெற்றிகரமாக சுமுகமாக நடக்கும். உங்கள் முயற்சிகளுக்கான பலன்களை நீங்கள் பெறுவீர்கள். உங்களுக்கு பாராட்டுக்கள் குவியும். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.
காதல் / குடும்ப உறவு:
நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் நீங்கள் நல்லிணக்க உறவை மேற்கொள்வீர்கள். உங்கள் குடும்ப வாழ்க்கையும் அமைதியாகச் செல்லும். உங்களில் ஒரு சிலருக்கு காதல் மலரும். தூரத்து சொந்தங்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். ஒரு சிலரின் காதல் உறவு திருமண உறவாக மாறும்.
திருமணமான தம்பதிகள் இனிய இல்லறம் காண்பார்கள். திருமண வாழ்வில் பேரானந்தமும் மகிழ்ச்சியும் இருக்கும். வாழ்க்கைத் துனையிடத்தில் அன்னியோன்யம் பெருகும். ஒரு சிலர் வெளியிடங்களுக்குச் சென்று மகிழ்வீர்கள். மொத்தத்தில் உங்கள் திருமண வாழ்வில் அன்பு, ஆதரவு, ஒத்துழைப்பு என அனைத்தையும் நீங்கள் பெறுவீர்கள்
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண : லக்ஷ்மி பூஜை
நிதிநிலை :
இந்த மாதம் உங்கள் நிதிநிலை சிறப்பாக இருக்கும். நல்ல பண வரவும் செல்வமும் பெருகும். உங்கள் சேமிப்பு உயரும். உங்கள் கடின உழைப்பின் மூலம் நீங்கள் சிறந்த முறையில் வருமானம் ஈட்டுவீர்கள். சில சமயங்களில் உங்கள் சாதுரியமான செயல் மூலமும் வருமானம் ஈட்டுவீர்கள். உங்கள் முதலீடுகளின் மூலம் லாபம் பெருகும். உங்கள் கடன்களை நீங்கள் அடைத்து முடிப்பீர்கள். உங்கள் பொருளாதார நிலை சீராக இருக்கும் என்றாலும் சில எதிர்பாராத ஆதாயங்களும் உங்களை வந்து அடையும்.
உங்கள் நிதிநிலை மேம்பட : சந்திரன் பூஜை
உத்தியோகம் :
செல்வாக்கு மிக்க நபர்களுடன் இந்தமாதம் உங்களுக்கு தொடர்பு ஏற்படும். நாளுக்கு நாள் உங்கள் செயல் திறன் கூடும். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். உங்களில் பலருக்கு ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கப் பெறும். மார்கெடிங் மற்றும் டிராவல் தொடர்பான பணியில் இருப்பவர்கள் சிறந்த முறையில் வெற்றி காண்பார்கள். கலைத்துறை, போழுது போக்குத்துறையில் இருப்பவர்களும் ஆதாயமும் லாபமும் பெறுவார்கள். பிரபலம் அடைவார்கள். விளையாட்டுத் துறையில் சிலர் பிரகாசிப்பார்கள். ஒரு சிலருக்கு அரசாங்க உத்தியோகம் கிட்டும்.
உத்தி\யோகத்தில் மேன்மை பெற : பிருகஸ்பதி பூஜை
தொழில்
ட்ராவல்ஸ் மூலம் இந்த மாதம் அதிக லாபம் காண இயலும். இறக்குமதி – ஏற்றுமதி தொழில் மூலம் லாபம் கிட்டும். ஆடை விற்பனை, ஒப்பனை பொருட்கள் நல்ல வளர்ச்சி காணும். மேலும் உணவகம், உணவு மூலமும் அதிக லாபம் காண இயலும். எண்ணெய் , மரச்சாமான்கள், வீடு வாங்கி விற்கும் தொழில் மூலம் நல்ல லாபங்களைக் காண இயலும். தொழில் முனைவோர்கள் குறிப்பிடத்தக்க லாபங்கள் மற்றும் ஆதாயங்களைக் காண இயலும்.
தொழில் வல்லுனர்கள்:
இந்த மாதம் அதிக வாய்ப்புகள் கிட்டும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த மாதம் வேலை கிட்டும். மேலும் வங்கி, ஆசிரியர் தொழிலில் இருப்பவர்கள் நல்ல பெயர் எடுப்பார்கள். தொழிலில் வெற்றி காண்பார்கள். மருத்துவர்கள், பொறியாளர்களும் தங்கள் துறையில் சிறப்பாகச் செயல்படுவார்கள். ஐடி துறையில் இருப்பவர்களுக்கு அதிகப்படியான வேலைகள் இருந்தாலும் சிறப்பாக செயலாற்றி பாராட்டுகளைப் பெறுவார்கள். எழுத்து, தகவல் தொடர்பு மேலாண்மை போன்ற துறைகளில் இருப்பவர்கள் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு பெறுவார்கள்.
ஆரோக்கியம் :
உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். என்றாலும் ஒரு சிலருக்கு ஜுரம் தோல் ஒவ்வாமை போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.; இதயம் மற்றும் ரத்த சம்பந்தமான நோய் இருப்பவர்கள் அதில் இருந்து விடுபடுவீர்கள. உங்கள் ஆரோக்கியம் மேம்பட நீங்கள் உடற்பயிற்சி மேற்கொள்வது மற்றும் தியானம் மேற்கொள்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை சிறப்பாக தக்க வைத்துக் கொள்ள இயலும்.
உங்கள் ஆரோக்கியம் மேம்பட : அங்காரகன் பூஜை
மாணவர்கள்
போட்டித் தேர்வுகளை நீங்கள் சிறப்பாக எழுதுவீர்கள். அரசு சார்ந்த தேர்வுகளை நீங்கள் சிறப்பாக எழுதி வெற்றி பெறுவீர்கள். நேர்முகத் தேர்வுகளையும் நீங்கள் சிறப்பாக எதிர் கொள்வீர்கள். சிறப்பாக படித்து பாராட்டு பெறுவீர்கள். கல்வி சாரா விஷயங்களிலும் நீங்கள் ஈடுபாடு காட்டி சிறப்பாக செயலாற்றி வெற்றி பெறுவீர்கள். மருத்துவம் மற்றும் பொறியியல் மாணவர்கள் சிறப்பாக தேர்வுகளை ஏழுதி வெற்றி பெறுவார்கள்.
கல்வியில் சிறந்து விளங்க : கணபதி பூஜை
சுப நாட்கள் :- 1,4,5,6,10, 21,24,25,27,30,31
அசுப நாட்கள்:- 2,3,13,14,17,19,20
