ரிஷபம் மே மாத ராசி பலன் 2022 | May Matha Rishabam Rasi Palan 2022

ரிஷபம் மே மாத பொதுப்பலன் 2022:
இந்தமாதம் ரிஷப ராசி அன்பர்களுக்கு மிகச் சிறந்த மாதமாக இருக்கும். மகிழ்ச்சி வெற்றி அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். உங்கள் பிரார்த்தனைகள் கை கூடும். பணியிடத்தில் அனுகூலமான சூழல் இருக்கும். வளமான வாய்ப்புகள் உங்களை நாடி வரும். நீங்கள் தொழில் நிமித்தமான பயணங்களை மேற்கொள்ள நேரும். மேலும் அந்தப் பயணங்களின் மூலம் நீங்கள் ஆதாயங்களைப் பெறுவீர்கள். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருப்பதினால் வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். உங்கள் வாழ்வு சுமுகமாகச் செல்லும். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.
காதல் / குடும்ப உறவு:
இந்த மாதம் நீங்கள் உங்கள் வாழ்க்கையின் முக்கிய நபரை சந்திப்பீர்கள். உங்கள் மனதில் காதல் மலரும். இந்த மாதம் காதலைப் பொறுத்த வரை இனிமையான மாதமாக இருக்கும். திருமணமான தம்பதிகள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் ஆதரவாக இருப்பார்கள். அக்கறையும் கவனிப்பும் அன்னியோன்யத்தை அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் நீங்கள் அக்கறை செலுத்த வேண்டியிருக்கும். குடும்பத்தில் கொண்டாட்டங்கள் இருக்கும். சிலருக்கு குழந்தைப் பேறு கிட்டும். குடும்பச் சூழல் இணக்கமாகவும் சுமுகமாகவும் இருக்கும்.
திருமண உறவில் நல்லிணக்கம் காண : லக்ஷ்மி பூஜை
நிதிநிலை:
இந்த மாதம் உங்கள் கையில் பணம் தாராளமாகப் புழங்கும். நீங்கள் வளமாக வாழ்வீர்கள். உங்கள் வருமானம் பெருகும். வங்கி இருப்பு அதிகரிக்கும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிட்டும். உங்கள் முதலீடுகளின் மூலம் நீங்கள் லாபம் காண்பீர்கள். இந்த மாதம் நீங்கள் ஆடம்பர செலவுகளை தவிர்க்க வேண்டும்.
உங்கள் நிதிநிலை மேம்பட : பிருகஸ்பதி மற்றும் புதன் பூஜை
உத்தியோகம் :
உத்தியோகத்தைப் பொறுத்த வரை சுமுகமான நிலை இருக்கும். பணிச்சுமை அவ்வளவாக இருக்க வாய்ப்பில்லை. அன்றைய பணிகளை அன்றே முடிப்பீர்கள். மேலும் ஒரு சிலருக்கு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிட்டும். மேலும் உங்கள் உழைப்பிற்கான அங்கீகாரம் கிட்டும். நீங்கள் எதிரபாராத ஆதாயங்களைப் பெறுவீர்கள். உங்கள் முயற்சிகள் மூலம் லாபம் பெறுவீர்கள். நீங்கள் பிரச்சினைகளை சமாளித்து முன்னேறுவீர்கள். உங்கள் அந்தஸ்து உயரும். உங்களில் ஒரு சிலர் அரசாங்க வேலை வாய்ப்பினைப் பெறுவீர்கள்.
உத்தியோத்தில் மேன்மை பெற : சனி பூஜை
வியாபாரம் :
போக்குவரத்து, உணவு சார்ந்த துறையில் இருப்பவர்கள் இந்த மாதம் சிறப்பாகச் செயாலாற்றுவார்கள். உணவகங்களின் மூலம் நல்ல லாபம் கிட்டும். திரை அரங்கம், மால், நடத்துபவர்கள் இந்த மாதம் அதிக வருமானம் ஈட்டுவார்கள். வீடு வாங்கி விற்கும் தொழில் செய்பவர்கள் கட்டிடம் போன்றவற்றில் தொழில் செய்பவர்கள் சிறந்த லாபம் காண்பார்கள்.
தொழிலில் மேன்மை பெற : அங்காரகன் பூஜை
தொழில் வல்லுனர்கள்
மருத்துவர் மற்றும் பொறியாளர்களுக்கு இது மிகவும் நல்ல மாதமாக இருக்கும். சிறப்பான மாதம் ஆகும். சட்ட அல்லது காவல் துறையில் இருப்பவர்கள் தங்கள் தொழிலில் சில சலுகைகளைப் பெறலாம். ஐ டிதுறையில் பணி புரிபவர்கள் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு பெறுவார்கள். கலைத்துறை மற்றும் பொழுது போக்குத் துறையைச் சார்ந்தவர்கள் அங்கீகாரமும் பாராட்டும் பெறுவார்கள். ஒரு சிலர் தங்கள் துறையில் சிறந்த முன்னேற்றம் காண்பார்கள். வங்கி கணக்கியல் மற்றும் பொதுத் துறையில் இருப்பவர்களுக்கு இது மிகவும் சிறப்பான மாதம் ஆகும்.
ஆரோக்கியம் :
உங்கள் ஆரோக்கியம் இந்த மாதம் சிறப்பாக இருக்கும். என்றாலும் சிறு சிறு உபாதைகளை நீங்கள் சந்திக்க நேரும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதன் மூலம் நீங்கள் அவற்றில் இருந்து தப்பிக்கலாம். நோய்கள் வந்தாலும் விரைவில் குணமாகி விடும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது நல்லது உடற்பயிற்சி மற்றும் மனதை அமைதியாக வைத்திருப்பதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் நல்ல முறையில் தக்க வைத்துக் கொள்ள உதவும்.
உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சுக்கிரன் பூஜை
மாணவர்கள்:
ரிஷப ராசி மாணவ மாணவியர்கள் இந்த மாதம் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். ஆராய்ச்சி அல்லது உயர் கல்வி படிக்கும் மாணவர்களும் சிறந்து விளங்குவார்கள். பொறியியல் மற்றும் மருத்துவ மாணவ மாணவியர்கள் தங்கள் துறையில் பிரகாசிப்பார்கள். போட்டித் தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வுகளை மாணவர்கள் எளிதாக எழுதி தேர்ச்சி பெறுவார்கள். மாணவ மாணவியர்களின் விருப்பங்கள் யாவும் இந்த மாதம் நிறைவேறும். ஒரு சிலர் வெளி நாடு சென்று படிப்பார்கள். ஓரு சிலருக்கு கல்வி உதவித் தொகை கிட்டும்.
கல்வியில் சிறந்து விளங்க ; கணபதி பூஜை
சுப நாட்கள் :- 7, 11,12,15, 16,17,24,25,28,29,31
அசுப நாட்கள் :- 1, 4,5 8,9 19,20,22,30
