AstroVed Menu
AstroVed
search
search

கடகம் மே மாத ராசி பலன் 2022 | May Matha Kadagam Rasi Palan 2022

dateApril 7, 2022

கடகம் மே மாத பொதுப் பலன் 2022:

இந்த மாதம் கடக ராசி அன்பர்களுக்கு முன்னேற்றகரமான மாதமாக இருக்கும். நிலுவையில் இருக்கும் பணிகள் அனைத்தையும் இந்த மாதம் நீங்கள் முடித்து விடும் வாய்ப்பு உள்ளது. உங்களில் சிலர் கடன் தொகை அடைத்து விடுவீர்கள். நீங்கள் சிறப்பாக திட்டமிட்டு செயலாற்றுவீர்கள். உங்கள் கடின உழைப்பிற்கான பலனை இந்த மாதம்  நீங்கள் பெறுவீர்கள். இந்த மாதம் உங்களுக்கு அதிர்ஷ்டகரமான மாதமாகவும் இருக்கும்.  அதன் மூலம் உங்கள் இலக்குகளை நீங்கள் அடைவீர்கள். வெளி நாட்டில் கல்வி பயில நினைப்பவர்கள் தங்கள் ஆசைகளை இந்த மாதம் நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்ப்பு உள்ளது. உங்களின் விருப்பங்கள் இந்த மாதம் நிறைவேறும். மொத்தத்தில் இந்த மாதம் உங்களுக்கு மகிழ்சிகரமான மாதமாக இருக்கும். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.

காதல் / குடும்ப உறவு :

குடும்ப உறுப்பினர்களுடனான உறவு மகிழ்ச்சியாகவும் இணக்கமாகவும் இருக்கும். புதிய நண்பர்களை நீங்கள் இந்த மாதம் உருவாக்கிக் கொள்வீர்கள். அதன்  மூலம் நீங்கள் ஆதாயமும் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கை பரபரப்பாக இருக்கும்.  திருமண வாழ்வில் திருப்திகரமான நிலை நிலவும். 
இளம் வயதினர் மனதில் காதல் அரும்பு மலரும். இந்த மாதம் இனிமையான மாதமாக இருக்கும். காதலர்களுக்கு பெற்றோரின் ஆதரவு கிட்டும். திருமணமானவர்கள் மகிழ்ச்சிகரமான வாழ்க்கை வாழ்வார்கள். உறவில் ஒற்றுமையும் நல்லிணக்கமும் இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணை மூலம் நீங்கள் அதிர்ஷ்டம் காண்பீர்கள். உங்களில் சிலர் வெளியிடங்களுக்கு உல்லாசப் பயணங்களை மேற்கொள்வீர்கள். 

திருமண உறவில் நல்லிணக்கம் காண : லக்ஷ்மி பூஜை 

நிதிநிலை :

இந்த மாதம் உங்கள் கையில் பணம் சரளமாகப் புழங்கும். பணப்பற்றாக்குறை இருக்க வாய்ப்பில்லை. உங்கள் பொருளாதார நிலை இந்த மாதம் மிகவும் சிறப்பாக இருக்கும். நீங்கள் புது வீடு, வாகனம் அல்லது சொத்துக்களை வாங்கும் காலக்கட்டமாக இந்த மாதம் இருக்கும். உங்கள் வருமானம் இந்த மாதம் உயரும். நீங்கள் பணம் சேமிப்பீர்கள் உங்கள் வங்கி இருப்பும் பெருகும். உங்கள் செலவுகள் யாவும் கட்டுக்குள் இருக்கும்.  பிறர் மூலமும் நீங்கள் பொருளாதார உதவிகளைப் பெறுவீர்கள். ஒன்றுக்கு மேற்பட்ட வகையில் வருமானம் ஈட்டுவீர்கள். இந்த மாதம் அரசு வகையில் பொருளாதார ஆதாயம் பெறுவீர்கள். 

உங்கள் நிதிநிலை மேம்பட : சூரியன் பூஜை 

உத்தியோகம் : 

இந்த மாதம் உத்தியோகத்தில் நீங்கள் சிறந்த முன்னேற்றம் காண்பீர்கள். பணியிடத்தில் உங்கள் அந்தஸ்தும் செல்வாக்கும் உயரும்.  உங்கள் துறையில் நீங்கள் சிறப்பாகச் செயல்படுவீர்கள். நீங்கள் நீண்ட நாட்களாகக் காத்திருந்த பதவி உயர்வு மற்றும்  ஊதிய உயர்வு பெறுவீர்கள். பொதுத் துறையைச் சார்ந்தவர்கள் சிறந்த முன்னேற்றம் காண்பார்கள். விளம்பரம், வங்கித் துறையில் இருப்பவர்கள் பதவி உயர்வு பெறுவார்கள். உங்கள் வருமானம் உயரும். ஒன்றிற்கு மேற்பட்ட வகையில் வருமானம் ஈட்டுவீர்கள். மேலும் எதிர் பாராத வகையில் ஆதாயங்கள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி அடைவீர்கள். சக பணியாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். 

வேலை மற்றும் தொழிலில் மேம்பட : அங்காரகன் பூஜை 

வியாபாரம்:

கடக ராசி அன்பர்களின் தொழில் இந்த மாதம் சிறப்பாக நடக்கும். குறிப்பாக போக்குவரத்து மற்றும் எண்ணெய் சார்ந்த துறையில் தொழில் செய்பவர்கள் தொழில் சிறப்பாக நடக்கும். உணவு, உணவகங்கள், போக்குவரத்து நிறுவனங்கள் மூலம் இந்த மாதம் அதிக லாபங்களை நீங்கள் காண இயலும். மேலும். ஒப்பனைப் பொருட்கள், மரச்சாமான்கள், பளிங்கு கற்கள், ஆடை ஆபரணத் தொழிலில் செழித்து ஓங்கும். மேலும் ஆலோசனை துறையில் இருப்பவர்கள் சிறந்த லாபம் காண்பார்கள். சுய தொழில் மூலம் இந்த மாதம் செல்வம் சேரும். தங்கம் சார்ந்த துறையினர் இந்த மாதம் கொழுத்த லாபம் காண்பார்கள். 

தொழிலில் மேன்மை காண : சனி பூஜை 

தொழில் வல்லுநர்:

நீங்கள் மருத்துவர் அல்லது பொறியாளர் எனில் இந்த மாதம் உங்களுக்கான மாதம் என்று கூறலாம். நீங்கள் சிறப்பாகச் செயலாற்றி நல்லமுன்னேற்றம் காண்பீர்கள். நிர்வாகம் மற்றும்மேலான்மைத் துறையினர் நல்ல வருமானம் ஈட்டுவீர்கள். அதே போல ஊடகம் மற்றும் பொழுத்து போக்குத் துறையினர் முன்னேற்றம் மட்டுமின்றி திடீர் புகழ் உங்களை வந்து சேரும். விளையாட்டுத் துறையினர் சாதனைகளைப் படைத்து சரித்திரம் படைப்பார்கள் என்று கூறலாம். 

ஆரோக்கியம் :

இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீங்கள் ஆற்றலுடன் காணப்படுவீர்கள். உங்களில் ஒரு சிலருக்கு சளி, ஜுரம் போன்ற சிறு சிறு உபாதைகள் மற்றும் தோல் சம்பந்தமான பிரச்சினைகளும் வந்து போகும். மருத்துவ செலவுகள் இருக்கும். என்றாலும் மருத்துவ செலவுகள் உங்கள் கைகளை கடிக்கும் விதத்தில் இருக்க வாய்ப்பில்லை. குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் உங்களுக்கு சிறிது பதட்டத்தை அளிக்கும். 

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : அங்காரகன் பூஜை 

மாணவர்கள்:

மாணவர்கள் இந்த மாதம் சிறப்பாகப் படித்து தேர்வுகளையும் சிறப்பாக எழுதி முடிப்பார்கள். உங்களில் சிலர் மேற்கல்வி படிப்பதற்கு வெளி நாடு செல்லும் வாய்ப்பும் உள்ளது. ஓர் சிலர் கல்விக்கான உதவித் தொகை பெறுவார்கள். நேர்முகத் தேர்வு, நுழைவுத் தேர்வு உங்களுக்கு வெற்றியை பெற்றுத் தரும். உங்கள் அபார வெற்றி பிறரை ஆச்சரியப்பட வைக்கும். இந்த மாதம் நீங்கள் கவனமாகப் படித்து முன்னேற்றம் பெறுவீர்கள். 
கல்வியில் சிறந்து விளங்க : கணபதி பூஜை  

சுப நாட்கள் :- 3,4,5,14,15,18,19,24,27,30,31
அசுப நாட்கள் :- 7,8,10,11,20,22,25,29  


banner

Leave a Reply