Arupadai Veedu Muruga Program 2024: Invoke Muruga at His 6 Powerful Abodes During the 6th Moon Powertime Days JOIN NOW

கும்பம் மே மாத ராசி பலன் 2021 | May Matha Kumbam Rasi Palan 2021

April 5, 2021 | Total Views : 760
Zoom In Zoom Out Print

கும்பம் மே மாத பொதுப்பலன் 2021 :

கும்ப ராசி அன்பர்களே ! துணிவே துணை என்பதை நீங்கள் கருத்தில் கொண்டு செயல்படுவீர்கள். இன்பமோ, துன்பமோ, இரண்டில் ஒன்று பார்த்துவிடலாம் என்று துணிந்து உங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்வீர்கள். சவால்களை சந்திக்க நீங்கள் தயாராக இருப்பீர்கள். எனவே நீங்கள் இந்த மாதம் வழக்கத்தை விட அதிகமாக செயலாற்றுவீர்கள்.  பண விஷயத்திலும் சில நெருக்கடியான சூழ்நிலைகளை நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும். இதனால் உங்கள் முன்னேற்றத்தில் மந்தமான நிலை இருக்கும். செலவுகள் அதிகமாக இருக்கும். என்றாலும் உங்கள் சேமிப்பு கை கொடுக்கும்.  பண விஷயத்தில் கவனமுடனும் கட்டுப்பாட்டுடனும் இருங்கள். பணம் சம்பந்தமான முக்கிய முடிவுகளை இந்த மாதம் எடுக்காதீர்கள். குறிப்பாக முக்கிய முதலீடுகள் எதையும் இந்த மாதம் மேற்கொள்ளாதீர்கள். நீங்கள் சொந்தத் தொழில் அல்லது வியாபாரம் செய்பவராக இருந்தால் உங்கள் நடவடிக்கைகளில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.  சில அசௌகரியங்களை நீங்கள் சந்திக்க நேர்ந்தாலும் சமாளித்து முன்னேறுவீர்கள். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள்  இருக்கும். அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் மட்டுமே குடும்பத்தில் அமைதி நிலவும். மாணவர்கள் கவனம் சிதற வாய்ப்புள்ளதால் மனதை ஒருமுகப்படுத்தி  படிக்க முயல வேண்டும். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.

காதல் / குடும்ப உறவு :

கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் காரணமாக சில வாக்குவாதங்கள் எழும். நிதானமாக செயல் பட வேண்டிய மாதம் இது.  உணர்ச்சிப் பூர்வமாக செயல்படுவதை விட அறிவுப் பூர்வமாக செயல்பட முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். இந்த மாதம் எழும் சவாலான சூழ்நிலை தற்காலிகமானது என்பதால் தைரியமாக இருங்கள். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். 

திருமண உறவில் நல்லிணக்கம் காண :சுக்கிரன் பூஜை 

நிதிநிலை :

இந்த மாதம் திடீர் செலவுகள் ஏற்படும். உங்கள் செலவிற்கு சேமிப்பு கை கொடுக்கும் என்றாலும் எதிர்கால நலன் கருதி உங்கள் செலவுகளை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். பட்ஜெட் அமைத்து உங்கள் செலவுகளை மேற்கொள்ளுங்கள். இந்த மாதம் நீங்கள் ஆன்மீகக் காரியங்களுக்காக செலவு செய்வீர்கள். 
 
உங்கள் நிதிநிலை மேம்பட :  சூரியன் பூஜை

வேலை :

இந்த மாதம் நீங்கள் கண்ணும் கருத்துமாகச் செயல்பட வேண்டும். கவனம் சிதறாமல் பணியாற்ற வேண்டும். திட்டமிட்டுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.  சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிளுடன் சுமுகமான உறவை மேற்கொள்ளுங்கள். கடின உழைப்பின் மூலம் நீங்கள் உத்தியோகத்தில் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் காண்பீர்கள். 

தொழில் :

நீங்கள் தொழில் அல்லது வியாபாரம் செய்பவர் என்றால் உங்கள் தொழிலில் சிறிது மந்த நிலை இருக்கும். வெளிநாட்டுத் தொடர்புடைய தொழில் செய்பவர்கள் இந்த மாதம் லாபம் காண்பார்கள். கூட்டுத் தொழில் மேற்கொள்ள நினைப்பவர்கள் கவனமுடன் கூட்டாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் சுயமாக சிந்தித்து செயல்படுவதன் மூலம் வெற்றி வாய்ப்புகள் உங்களை நாடி வரும். 

தொழில் வல்லுனர்கள்:

இந்த மாதம் நீங்கள் சுதந்திரமாக செயல்பட விரும்புவீர்கள். கட்டுப்பாடுகளை அறவே வெறுப்பீர்கள். பணியிடத்தில் கூறப்படும் விதிமுறைகள் கூட உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். எனவே நீங்கள் இந்த மாதம் மிகவும் பொறுமையுடன் செயல்பட வேண்டும். உங்கள் பலம் மற்றும் பலவீனத்தை நீங்கள் நன்கு அறிந்து செயல்படுங்கள். உங்கள் கருத்துக்களை மேலதிகாரரிகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். புதிய வாய்ப்புகள் உங்களை நாடி வரும் வாய்ப்பு உள்ளது. 

வேலை மற்றும் தொழிலில் மேன்மை பெற : சுக்கிரன் பூஜை 

ஆரோக்கியம் :

இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். சளி இருமல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். என்றாலும் இது சிறிய அளவிலான உபாதை என்பதால் மருந்து உட்கொண்டவுடன் சரியாகிவிடும். பெரிய அளவிலான ஆரோக்கியக் குறைபாடுகள் ஏதும் இருக்க வாய்ப்பில்லை உங்களுக்கு சர்க்கரை வியாதி இருந்தால் மருத்துவரின் ஆலோசனைகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். உங்கள் ஆரோக்கியத்திற்கு புறம்பான உணவு வகைகளை சாப்பிடாதீர்கள். 

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : அங்காரக பூஜை 

மாணவர்கள் :

இந்த மாத ஆரம்பத்தில் மாணவர்கள் மனதில் பதட்டம் ஏற்படும். இதனால்  படிப்பில் கவனம் குறைய வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் காணப்படும் அசாதரணமான சூழ்நிலை காரணமாக மனச் சோர்வு ஏற்படும்.  உளவியல் ஆலோசகரின் உதவியை நாடி அவரின் ஆலோசனைகளை நீங்கள் பின்பற்றினால் கல்வியில் கவனம் கூடும். 

கல்வியில் மேன்மை பெற :  குரு பூஜை 

சுப தேதிகள் : 7, 6, 8, 9, 10, 11, 21, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31.
அசுப தேதிகள் :  1, 2, 3, 4, 5, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 22

banner

Leave a Reply

Submit Comment