AstroVed Menu
AstroVed
search
search
x
cart-added The item has been added to your cart.

மீனம் மே மாத ராசி பலன் 2021 | May Matha Meenam Rasi Palan 2021

dateApril 5, 2021

மீனம் மே மாத பொதுப்பலன் 2021 :

மீன ராசி அன்பர்களே!  முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார் என்பதற்கேற்ப இந்த மாதம் உங்கள் முயற்சிக்கான வெற்றிகளை நீங்கள் காண்பீர்கள். இந்த மாதம் காலமும் உங்களுக்கு சாதகமாக செயல்படும். பொருளாதாரத்தில் நீங்கள் ஏற்றம் காண்பீர்கள். பணவரவு கணிசமாக இருக்கும். காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்பதை உணர்ந்து கையில் பணம் உள்ளபோதே எதிர் கால நலன் கருதி சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.  புதிய வாய்ப்புகள் உங்களை நாடி வரும். எனவே நீங்கள் சரியான நேரத்தில் சரியான முறையில் அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குடும்பத்தில் சில சிறு சிறு பிரச்சினைகள் வந்து மறையும்.  திருமணம் அல்லது குழந்தைப் பேறு போன்ற சுப நிகழ்வுகள் நடக்கும். வீடு. மனை, நிலம் வண்டி, வாகனம் போன்றவற்றுள் ஏதாவது ஒன்றை நீங்கள் வாங்கும் வாய்ப்பு கிட்டும். பொறுத்தார் பூமியாள்வார் என்பதனை கருத்தில் கொண்டு நீங்கள் மிகவும் பொறுமையுடன் செயல்பட வேண்டும். மாணவர்களுக்கு ஆசிரியர் மற்றும் பெற்றோர் வழிகாட்டிகளாக இருப்பார்கள். சிறப்பாகப் படித்து தேர்வுகளில் மதிப்பெண்கள் எடுப்பார்கள். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். என்றாலும் சிறுசிறு உடல் உபாதைகள் வந்து போகும். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.

 
காதல் / குடும்ப உறவு :

கணவன் மனைவி உறவு இனிமையாக இருக்கும். பரஸ்பரம் அன்பும் அரவணைப்பும் இருக்கும்.  மீன ராசி இளம் வயது அன்பர்கள் மனதில் காதல் அரும்பு மலரும்.  உங்கள் வாழ்க்கைத் துணை மூலம் நீங்கள் மகிழ்ச்சியும் இன்பமும் அடைவீர்கள். திருமணத்திற்குக் காத்திருப்பவர்கள் தக்க துணை கிடைக்கப் பெறுவார்கள். கணவன் மனைவி உறவு சீராக இருக்கும். விட்டுக் கொடுத்து அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் குடும்பத்தில் அமைதி நிலவும். 

திருமண உறவில் நல்லிணக்கம் காண : விஷ்ணு பூஜை

நிதிநிலை :

உங்கள் பொருளாதாரத்தில் ஏற்றமான நிலை இருக்கும்.  இந்த மாத கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக உள்ளது. பெரிய அளவிலான செலவு ஒன்றை நீங்கள் எதிர்கொள்ள நேரும். உங்கள் செலவுகளை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். எனவே தேவையற்ற செலவுகளை மேற்கொள்ளாதீர்கள். பட்ஜெட் அமைத்து  அதன்படி செலவை மேற்கொள்ளுங்கள். உறவினர்கள் உங்களிடம் பண உதவி  கேட்டு வருவார்கள். பணம் திரும்ப வருமா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு பிறகு உதவி செய்யுங்கள் 

உங்கள் நிதிலை மேம்பட : அங்காரகன் பூஜை  

வேலை :

குடும்பத்தில் ஏற்படும் தேவையற்ற வாக்குவாதங்கள் மற்றும் சலசலப்பு காரணமாக ஏற்படும் குழப்பம் உங்கள் மனதை பாதிக்கும். வேலையில் கவனம் சிதறும்.  என்றாலும் உங்களின் இந்த அமைதியற்ற மன நிலை  தற்காலிகமானதே. எனவே அமைதியாக செயல்பட்டு சூழ்நிலையை அனுசரித்து நடந்து கொள்வதன்  மூலம் நிலைமையை எளிதாக சமாளிக்க இயலும். பணியில் கவனத்துடன் செயல்படுவீர்கள். 

தொழில் :

தொழில் அல்லது வியாபாரம் செய்யும் மீன ராசி அன்பர்கள் கடமையே கண்ணாகக் கருதி செயல்பட வேண்டும். இரவு பகல் பாராமல் வேலை செய்ய வேண்டும். உங்கள் அயராத உழைப்பு உங்களுக்கு லாபத்தை பெற்றுத் தரும். எனவே சொகுசாக இருப்பது மற்றும் சோம்பலாக இருப்பது போன்றவற்றைக் கை விட்டு உழைப்பே உயர்வு தரும் என்ற எண்ணம்  கொண்டு செயல்பட்டு வாழ்க்கையில் முன்னேறுவதற்கு வழி வகுத்துக் கொள்ளுங்கள். உங்கள் முன்னேற்றத்திற்கு கிடைக்கும் வாய்ப்பினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். 

தொழில் வல்லுனர்கள் :

மீன ராசி தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் திறம்பட செயலாற்றுவார்கள். நீங்கள் ஆக்கப்பூர்வமாக செயலாற்றுவீர்கள். உங்கள் படைப்புத் திறன் வெளிப்படும். உங்களுக்கு அளிக்கப்படும் பணிகளை நீங்கள் ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். உங்கள் பணியிடச் சூழலை நன்கு ஆராய்ந்து அதற்கேற்ப அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் நீங்கள் வெற்றி காண இயலும்.

வேலை மற்றும் தொழிலில் மேம்பட : சுக்கிரன் பூஜை 

ஆரோக்கியம் :

உங்கள் உடல் நலம் சிறப்பாக இருக்கும். உங்களுக்கு பெரிய அளவிலான ஆரோக்கிய பாதிப்புகள் ஏதும் இருக்காது. என்றாலும் தலைவலி, கழுத்துவலி போன்ற சிறு சிறு உபாதைகள் வந்து போகும். எனவே சிறிது கவனமுடன் இருங்கள் 

உங்கள் ஆரோக்கியம் மேம்பட :  சூரியன் பூஜை

மாணவர்கள் :

மீன ராசி மாணவர்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். கல்வியில் சிறந்த முன்னேற்றம் இருக்கும். கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவியர்கள் சிறிது முயற்சியும் கவனமும் மேற்கொள்வதன் மூலம் தேர்வில் வெற்றி பெற இயலும்.  சிறந்த வேலையை  அமைத்துக் கொள்ளும்  வகையில்  கல்லூரித் தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள்.

கல்வியில் மேமேப்ட : குரு பூஜை

சுப தேதிகள் :   10, 11, 12, 13, 14, 15, 16, 21, 23, 24, 25, 26, 27, 28.
அசுப தேதிகள் : 1, 2,3, 4, 5, 6, 7, 8, 9, ,17, 18, 19, 20, 22, 29, 30, 31


banner

Leave a Reply