AstroVed Menu
AstroVed
search
search
x
cart-added The item has been added to your cart.

மகரம் மே மாத ராசி பலன் 2021 | May Matha Magaram Rasi Palan 2021

dateApril 5, 2021

மகரம் மே மாத பொதுப்பலன் 2021:

இந்த மாதம் கிரக நிலைகள் சிறப்பாக உள்ள காரணத்தால் நீங்கள் அனுகூலமான பலன்களைப் பெற இயலும். உங்கள் வாழ்க்கைப் பாதையில் முன்னேற்றம் இருக்கும். நீங்கள் பொறுமையுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். நல்ல நண்பர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.  புதிய நண்பர்களும் கிடைக்கப் பெறுவார்கள்.  உங்கள் நட்பு வட்டாரம் விரிவடையும். தொழிலில் நல்ல முயற்சிகளை மேற்கொண்டு  லாபம் காண தகுந்த சந்தர்ப்பம் இந்த மாதத்தில் கிட்டும். உத்தியோத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்விற்கான வாய்ப்பு உண்டு. வேறு வேலை மாற்றத்திற்கு முயற்சிப்பவர்கள், தகங்கள் முயற்சிகளை இன்னும் சிறிது காலத்திற்குத் தள்ளிப் போட வேண்டும். கடின முயற்சிகளின் மூலம் நீங்கள் சிறப்பான பலன்களைக் காண இயலும். கடினமாக உழைத்தால் இந்த மாதம் லாபங்களைக் காணலாம் உத்தியோக மாற்றம்  பற்றிய எண்ணம் இருந்தால் இந்த மாதம் அதனைக் கைவிடவும்.  திருமணமானவர்கள் சிறிது கவனமுடன் நடந்து கொள்ள வேண்டும்.  சில சிறுசிறு சலசலப்புகள் குடும்பத்தில் வந்து போகும்.  என்றாலும் அன்பும் அரவணைப்பும் கிட்டும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.

காதல் / குடும்பம் :

உறவுநிலைகள் மனதிற்கு மகிழ்ச்சியும் இனிமையும் அளிக்கும் விதத்தில் இருக்க வாய்ப்பில்லை இந்த மாதம் மந்தமான  நிலை இருக்கும். மாத ஆரம்பத்தில் குடும்ப உறவில் சுவாரசியம் இருக்காது. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல குடும்ப உறவுகள் மேன்மை அடையும். உறவிற்கு அர்த்தம் காண்பீர்கள். உங்கள் முயற்சிகளின் மூலம்  மகிழ்ச்சிகரமான நல்லுறவு குடும்பத்தில் ஏற்படக் காண்பீர்கள். 

திருமண உறவில் நல்லிணக்கம் காண : சுக்கிரன் பூஜை 

நிதிநிலை :

இந்த மாத நிதிநிலை  உங்களுக்கு சாதகமான மாதமாக இருக்க வாய்ப்பில்லை.  பிரச்சினைகள் ஒன்றன் பின் ஒன்றாக வருவதற்கான கிரக நிலைகள் உள்ளது. ஒரு பிரச்சினையில் இருந்து மீண்டால் அடுத்த பிரச்சினை தலை தூக்கும். எனவே பிரச்சினைகளைக் கண்டு ஓடி ஒளியாதீர்கள். மனதில் துணிச்சலுடன் எதிர்கொண்டால் நீங்கள் சமாளித்து முன்னேறலாம். முக்கியமாக எந்தவொரு முடிவையும் அவசரமாக எடுக்காதீர்கள். 

உங்கள் நிதிநிலை மேம்பட : அங்காரகன் பூஜை     

வேலை :

இந்த மாத ஆரம்ப காலம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சாதகமான பலனைத் தரும் வகையில் இல்லை என்றே கூற வேண்டும்.  உங்கள் உழைப்புக்கேற்ற அங்கீகாரமும் பாராட்டும் மேலதிகாரிகளிடமிருந்து  கிடைப்பதில்லை என்ற வருத்தம் உங்களுக்கு இருக்கும். என்றாலும் நீங்கள் பொறுமையுடன் உங்கள் திறமையை நிரூபித்து கடின முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். இது உங்கள் எதிர்கால வளர்ச்சிக்கு உதவும்.  இந்த மாத பிற்பகுதியில் உங்கள் உத்தியோகம் சம்பந்தமான ஆதாயமும் நிலைத்தன்மையும் நீங்கள் காண்பீர்கள். 

தொழில் :

மகர ராசி அன்பர்களுக்கு இயல்பிலேயே தலைமைப் பண்பும் திறமையும் இருக்கும். உங்கள் திறமை இந்த மாதம் நன்கு வெளிப்படும்.  கவனம் சிதறாமல் உங்கள் முயற்சிகளை மேற்கொண்டால் தொழிலில் நீங்கள் வெற்றி அடைய இயலும். இந்த வெற்றி உங்களுக்கு நீண்ட காலப் பயன் தரும் வெற்றியாக அமையும். இந்த மாதம் நீங்கள் நேரம் மற்றும் பணத்தை சிறப்பாக நிர்வாகம் செய்வீர்கள். அதன் மூலம் பெயரும் புகழும் பெறுவீர்கள். 

தொழில் வல்லுனர்கள் :

நீங்கள் இந்த மாதம் யதார்த்தமாகச் செயல்படுவீர்கள். வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் அதனை நீங்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வீர்கள். உங்கள் நிர்வாகத் திறன் மற்றும் கடின உழைப்பு உங்களுக்கு அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும். மேலதிகாரிகள் மூலம் தொழிலில் சில நெருக்கடியான சூழ்நிலைகளை சந்திப்பீர்கள். 

வேலை மற்றும் தொழிலில் மேன்மை அடைய : சனி பூஜை 

ஆரோக்கியம் :

இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். என்றாலும் சின்னஞ்சிறு உபாதைகள் வந்து போகும். பெரிய அளவிலான ஆரோக்கிய பாதிப்புகள் ஏதும் உங்களை அணுகாது. சாத்வீக உணவு உங்கள் ஆரோக்கியத்தைக் காக்கும். மனதை பதட்டம் ஏதும் இன்றி அமைதியாக வைத்துக் கொள்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தைக் காத்துக் கொள்ள இயலும். 

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : குரு பூஜை 

மாணவர்கள் :

இந்த மாதம் உங்களுக்கு கிரக நிலைகள் சாதகமனாதாக உள்ளது. ஆசிரியர் நடத்தும் பாடங்களை அப்போதைக்கப்போதே  படித்து முடித்து விடுங்கள். பரீட்சைக்கு முன்பு மட்டும் படித்தால் போதாது. மனதை ஒருமுகப்படுத்தி கவனம் சிதறாமல் படிப்பதன் மூலம் சிறந்த முறையில் தேர்வுகளை எழுதி வெற்றி பெற இயலும். 

கல்வியில் மேன்மை அடைய : அங்காரகன் பூஜை 

சுப நாட்கள் : 5, 6, 8, 9, 12, 14, 15, 16, 19, 20, 22, 21, 28, 29, 30.
அசுப நாட்கள் :  1, 2, 3, 4, 7, 10, 11, 13, 17, 18, 23, 24, 25, 26, 27, 31.


banner

Leave a Reply