Arupadai Veedu Muruga Program 2024: Invoke Muruga at His 6 Powerful Abodes During the 6th Moon Powertime Days JOIN NOW
Search

மச்சம் பலன்கள் | Macha Palangal In Tamil

January 22, 2021 | Total Views : 3,213
Zoom In Zoom Out Print

மச்சங்களும் அதன் பலன்களும்:

நமது பாரத தேசத்தில் சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள் என்பது  தொன்று தொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. எந்தச் செயலைச் செய்தாலும் அதை இப்படித்தான் செய்ய வேண்டும் என்று வழிமுறைகளை வகுத்து வைத்திருக்கிறார்கள் நமது முன்னோர்கள். ஆயகலைகளில் ஜோதிட சாஸ்திரம் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தில் பல கிளைகள் உள்ளன. அதன் ஒரு கிளையாக விளங்குவது தான் சாமுத்ரிகா  லட்சன  சாஸ்திரம். அவற்றுள் ஒன்று தான்  உடலில் இருக்கும் மச்சங்களை  வைத்துப் பலன் சொல்லும் மச்ச சாஸ்திரம்.. அதாவது நமது உடல் பாகங்களில்  உள்ள மச்சங்களை அடிப்படையாக வைத்து பலன்களை சொல்வது. உங்கள் ராசி மற்றும் நட்சத்திரம் பற்றி அறிய எங்கள் இலவச ராசி கால்குலேட்டர் பயன்படுத்துங்கள்.

ஒருவருக்கு திடீரென்று அதிர்ஷ்டமோ, வீடு, சொத்து, பதவி உயர்வு, அழகான மனைவி என்று அமைந்துவிட்டால், உடனே “அவனுக்கென்னப்பா அவன் மச்சக்காரன்டா” என்று சொல்வதுண்டு. அந்தளவுக்கு நம் உடலில் தோன்றும் மச்சங்கள் நமது வாழ்க்கையோடு ஒன்றிப் போகிறது. இந்த மச்சங்கள் நமது உடம்போடு மரணம் வரை மறையாமல் இருக்கிறது. உடலின் எந்த பாகத்தில், எந்த அளவில் மச்சம் இருந்தால் என்ன பலன்கள் என்பதை இந்தக் கட்டுரையில் நாம் காண்போம்.

நெற்றியில் மச்சம்:

நெற்றியில் மச்சம் அமைவது ஞானத்துக்கான அம்சமாக கருதப்படுகிறது. இது ஒரு விசேஷமான நிலை. விரும்பிய வாழ்க்கை அமையும். அதோடு தம்பதியரிடையே வாழ்நாள் முழுவதும் அன்பு இழையோடும். சிலருக்கு வலது நெற்றியில் மச்சம் இருக்கும். அப்படியிருந்தால் முதுமை காலத்தில் நிறைய பணம் தேடி வரும். அதோடு உலகம் சுற்றும் வாலிபனாக வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கின்ற யோகம் வரும் என்கிறார்கள். இடது பக்கம் நெற்றியில் மச்சம் இருந்தால் அனைத்து செல்வங்களும் இருக்கும். ஆனால் மகா கருமியாக வாழ்வார்கள். அதாவது யாருக்கும் பத்து பைசா கூட தரமாட்டார்கள். ஆணுக்கு வலது புற நெற்றியில் மச்சம் இருந்தால் செல்வங்கள் வந்து சேரும் யோகம் உண்டு. அதுவே பெண்ணுக்கு வலது புற நெற்றியில் இருந்தால் தைரியலட்சுமியாகத் திகழ்வார்கள்.

புருவங்களில் மச்சம்:

புருவங்களுக்கு மத்தியில் மச்சம் அமைவது அழகோ அழகு தான். இப்படி அமையப்பெற்றவர்கள் செல்வச் செழிப்போடு 100 வயது வரை வாழும் யோகத்தைப் பெற்றவர்கள். திருமணம் ஆன பின்பு நிறைய அதிர்ஷ்டங்கள் தேடி வந்து சேரும். நெற்றிப் பொட்டின் வலது பக்கத்தில் மச்சம் இருந்தால் திடீர் அதிஷ்டங்கள் வரும். அதுவே இடது பக்கத்தில் மச்சம் அமைந்திருந்தால் வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். வீண் செலவுகள் செய்பவராகவும் திகழ்வார்கள்.

கண்களில் மச்சம்:

இரண்டு கண்களில் வலது பக்க கண் இமைகளில் மச்சம் காணப்பட்டால் சினிமா ஸ்டாரைப் போல பிரபலமாகும் வாய்ப்புள்ளது. பெரிய செல்வந்தர்களாகவும் இருப்பார்கள். இடது கண்ணில் மச்சம் உடையவர்கள் பிறருக்கு கட்டுப்படாதவர்கள். சுதந்திரப் பறவையாக வாழ்வார்கள். பொதுவாக பெண்களுக்கு எந்த கண்ணில் மச்சம் இருந்தாலும் அவர்கள் அதிக துன்பங்களை வாழ்வில் எதிர்கொள்ள நேரிடும்.

மூக்கில் மச்சம்:

மூக்கில் மச்சம் இருப்பவர்கள் வாழ்க்கையில் பல பயணங்களை மேற்கொள்வார்கள். எதற்கெடுத்தாலும் எரிந்து விழுகின்ற முன்கோபிகளாக இருப்பார்கள். குடும்பத்தாரிடம் ஒருவித கெடுபிடியோடு நடந்து கொள்வார்கள். பெண்களுக்கு மூக்கின் நுனியில் மச்சம் இருந்தால் சேவை மனப்பான்மை கொண்டவர்களாக திகழ்வார்கள்.

உதடுகளில் மச்சம்:

உதடுகளில் மச்சம் இருந்தால் சரஸ்வதி தேவியின் கடாட்சம் கிடைக்கும் என்பார்கள். மிகப்பெரிய செல்வந்தர்களாக இருப்பார்கள். பணம் வந்து குவியும். கல்வியில் மிகப்பெரிய உயரத்தை அடைவார்கள். எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் இன்பமாக வாழ வேண்டும் என்று எண்ணுவார்கள். கட்டடக்கலை, ஓவியக்கலை, சிற்பக்கலை இவற்றில் ஏதாவது ஒன்றில் பெரிய புகழை எட்டுவார்கள். ஆண்களுக்கு மேல் மற்றும் கீழ் உதடுகளில் மச்சம் இருந்தால் காதல் மன்னனாகத் திகழ்வார்கள். எதிலும் ஒரு அலட்சியத்தோடு நடந்து கொள்வார்கள். அதுவே பெண்களுக்கு மேல் மற்றும் கீழ் உதடுகளில் மச்சம் இருந்தால் உயர்ந்த குணங்களைக் கொண்டவர்களாகவும், ஒழுக்கச்சீலர்களாகவும் வாழ்வார்கள்.

முகவாயில் மச்சம்:

முகவாயில் மச்சம் அமைவது நல்ல அம்சமாக கருதப்படுகிறது. ஜோதிடம், வைத்தியம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவார்கள். குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமையும். ஆரோக்கியத்தில் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படும்.

கன்னத்தில் மச்சம்:

வலது பக்க கன்னத்தில் மச்சம் இருந்தால் செல்வச் செழிப்போடு இருப்பார்கள். அதுவே இடது கன்னமாக இருந்தால் துன்பங்களை அனுபவிக்க வேண்டியது வரும். ஆண்களுக்கு வலது கன்னத்தில் மச்சம் அமைந்திருந்தால் மற்றவர்களை வசீகரிக்கும் தோற்றத்துடன் இருப்பார்கள்.  இரக்க சுபவாம் கொண்டவர்களாகத் திகழ்வார்கள். இடது கன்னத்தில் அமைந்திருந்தால் வாழ்வில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும். பெண்களுக்கு வலது கன்னத்தில் மச்சம் இருப்பின் எப்போதும் ஒருவித படபடப்போடு காணப்படுவர். ஏற்ற இறக்கங்கள் கொண்ட வாழ்க்கை அமையும்.

செவிகளில் மச்சம்:

ஆண்களுக்கு வலது பக்க செவியில் மச்சம் அமைந்திருந்தால் சிறந்த பலன்களைத் தரும். பெண்களுக்கு சுமாரான பலன்களையே தரும். குடும்பத்தினரிடம் அதிகம் பாசம் வைத்திருப்பார்கள்.  தொழில்களில் சிறந்து விளங்குவர். அதுவே இடது பக்கம் இருந்தால் நல்ல பலன்கள் கிடைப்பதில்லை. பெண்களுக்கு சிறந்த பலன்களை தரும். எந்த பணியைக் கொடுத்தாலும் விடாமுயற்சியுடன் செயல்பட்டு வெற்றி காண்பார்கள்.

நாக்கில் மச்சம்:

அறிஞர்கள், மேதைகள், ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள், மகான்கள் ஆகியோருக்குத் தான் நாக்கில் மச்சம் அமைந்திருக்கும். இவர்களிடம் தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். குழந்தை மனதைக் கொண்டவர்களாக இருப்பார்கள். யாரையும் எளிதில் நம்பிவிடுவார்கள்.

கழுத்தில் மச்சம்:

ஆண்களுக்கு கழுத்தின் வலது புறத்தில் மச்சம் இருந்தால் ஆடம்பரமான வாழ்க்கை அமையும். செல்வங்கள் வந்து சேரும். பெண்களுக்கு கழுத்தில் மச்சம் இருந்தால் திடகாத்திரமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பார்கள். துணிச்சல்காரர்களாக இருப்பார்கள். எப்போதும் மகிழ்ச்சியாக காணப்படுவார்கள்.

முதுகில் மச்சம்:

முதுகின் வலப்புறத்தில் மச்சம் அமைந்திருந்தால் பெரிய லட்சியவாதியாக வாழ்வார்கள். சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். வலப்புற முதுகில் மச்சம் உள்ள பெண்கள் வேலைக்கு சென்று சம்பாதிப்பார்கள். முதுகின் இடப்புறம் மச்சம் இருந்தால் இளவயதில் மந்தமாக இருப்பார்கள். கல்வியில் இடையூறுகள் ஏற்படக்கூடும்.

மார்பில் மச்சம்:

மார்பில் மச்சம் உடையவர்கள் இளமையில் துன்பங்களையும், பிற்காலத்தில் நல்ல சுகத்தையும் காண்பார்கள். எதையும் வெளிப்படையாக பேசும் தன்மை கொண்டவர்கள். எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் தாங்கிக் கொண்டு, அதை மற்றவர்களிடம் காட்டிக் கொள்ளமாட்டார்கள். சிற்பம், சிலை, மர வேலைகளை சிறப்பாக செய்வார்கள். இவர்களை நம்பி எந்த ரகசியத்தையும் சொல்லலாம். ஏனென்றால் அதை மிகுந்த எச்சரிக்கையோடு கட்டிக் காப்பார்கள்.

இடுப்பில் மச்சம்:

வலது பக்க இடுப்பில் மச்சம் அமைந்தவர்கள் நேர்மை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.  தங்களிடம் பழகுபவர்களிடம் அளவு கடந்த அன்பைப் பொழிவார்கள். மற்றவர்கள் அன்புக்கு அடிமையாகிவிடுவார்கள். இடது பக்க இடுப்பில் மச்சம் அமைந்திருந்தால் மன உறுதி கொண்டவராகவும், கடின உழைப்பாளிகளாகவும் இருப்பார்கள். பிறந்த இடத்தை விட்டு, வெளியூர்களுக்கு சென்று வாழ்வை அமைத்துக் கொண்டால், வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்களைக் காணலாம். பொறுமையாக செயல்படாவிட்டால் காரியங்கள் கைகூடுவது கடினமாகிவிடும்.

தொப்புளில் மச்சம்:

தொப்புளில் மச்சம் உடையவர்கள் அசாதாரணமான குணத்தைக் கொண்டவர்கள். இவர்களது செயல்களில் புதுமையும், புரட்சியும் இருக்கும். சம்பந்தமே இல்லாத விஷயங்களில் தலையிட்டு போராடிக் கொண்டிருப்பார்கள். திருமண வாழ்வில் சிறு சிறு சலப்புகளும், சங்கடங்களும் ஏற்படும். தொப்புளுக்கு கீழே மச்சம் இருந்தால் வாழ்க்கையில் அமைதி இருக்காது. பொருள் நஷ்டங்கள் உருவாகும். தொப்புளிற்குள்ளாக அமைந்திருந்தால் ஆடரம்பரமான வாழ்க்கை அமையும்.

தொடைகளில் மச்சம்:

ஆண்களுக்கு தொடைகளில் மச்சம் இந்தால் சிறந்த பலன்களைத் தரும். பெண்களுக்கு சுமாரான பலன்களையே தரும். வலது தொடையில் மச்சம் அமையப்பெற்ற ஆண்கள் தைரியசாலிகளாக இருப்பார்கள். சத்தியத்துக்கு கட்டுப்பட்டவர்களாக இருப்பார்கள். இன்பம், துன்பம் எதுவென்றாலும் சமமாக பாவிப்பார்கள். பிறரது எண்ணங்களை கண்டறியும் ஆற்றல் படைத்தவர்கள். கல்வி, பயிற்சிகளில் ஆர்வம் இருக்காது. எப்பேற்பட்ட விரோதியாக இருந்தாலும் நேருக்கு நேர் உரையாடினால் சரணடைந்து விடுவார்கள். 

உள்ளங்கையில் மச்சம்:

ஆண்களுக்கு வலது கையில் மச்சம் அமைந்திருந்தால், அது மிகவும் உயர்வான அம்சமாக கருதப்படுகிறது.  வலது உள்ளங்கையில் மச்சம் இருந்தால் சகல சாஸ்திரங்களிலும் வல்லவர்களாக விளங்குவார்கள். குறிப்பாக, கணித சாஸ்திரம், நீதி, பொறியியல் போன்றவற்றில் ஆழ்ந்த அறிவைப் பெற்றிருப்பார்கள். சிறுகி சிறுக முன்னேறி உயர்ந்த நிலையை அடைவார்கள்.

கை விரல்களில் மச்சம்:

ஆண்களுக்கும், பெண்களுக்கும் கை விரல்களில் அமைகின்ற மச்சங்களினால் ஒரே மாதிரியான நிகழ்வுகள் ஏற்படக் கூடும். கட்டை விரலில் அமைந்திருந்தால் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஆள்காட்டி விரலில் மச்சம் இருந்தால் தலைமைப் பண்பு கொண்டவர்களாகவும், ஆட்சி, அதிகாரம் செய்யும் அம்சம் பெற்றவர்களாக இருப்பார்கள். தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும் விளங்குவார்கள். நடு விரலில் மச்சம் இருப்பின் கலையார்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

மோதிர விரலில் மச்சம்:

மோதிர விரலில் மச்சம் இருப்பவர்கள் அழகான தோற்றத்தை பெற்றிருப்பார்கள். புத்திசாலிகளாகவும், எந்த எதிர்ப்புகளையும் முறியடிக்கும் திறமை படைத்தவர்களாகவும் இருப்பார்கள். சுண்டு விரலில் மச்சம் இருந்தால் சரஸ்வதியின் அருளைப் பெற்றவர்கள் என்கிறது சாஸ்திர விதி. எதிலும் முன்னெச்சரிக்கையோடு செயல்படுவார்கள். கல்வித்துறையில் உயர்வு கிடைக்கும். அரசியலில் பேச்சாளராகவும், புகழ் பெற்ற வழக்கறிஞராகவும் திகழ்வர். இடது கை சுண்டு விரலில் மச்சம் இருந்தால் பிடிவாத குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

banner

Leave a Reply

Submit Comment