Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

விருச்சிகம் ஜூன் மாத ராசி பலன் 2021 | June Matha Viruchigam Rasi Palan 2021

May 7, 2021 | Total Views : 694
Zoom In Zoom Out Print

விருச்சிகம் ஜூன் மாத பொதுப்பலன் 2021:

விருச்சிக ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்களுக்கு வரவேற்கத்தக்க மாதமாக இருக்கும். மகிழ்ச்சியான செய்திகள் உங்களை நாடி வரும்.  குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து உறவாடுவதன் மூலம்  உறவில் புரிதல் ஏற்படும். அமைதி நிலவும். உடன்பிறப்புக்களுடனான உறவில்  சில சவால்களை நீங்கள் சந்திக்க நேரும். விருந்தினர் வருகையால் வீடு களை கட்டும். பெரியவர்களின் ஆலோசனை குடும்பப் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும். பேசிய வார்த்தைகளுக்கு நீங்கள் அடிமை என்பதை கருத்தில் கொண்டு கவனமுடன் பேசுங்கள். பணியிடச் சூழல் சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் நல்ல செய்திகளை நீங்கள் எதிர்பார்க்கலாம்.  தொழில் செய்பவர்களுக்கு இந்த மாதம் சிறந்த பலன்கள் கிடைக்கும். சிறு சிறு பிரச்சினைகளைத் தவிர உங்கள் ஆரோக்கியத்தில் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏதும் இருக்காது. மாணவர்கள் இந்த மாதம் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.

காதல் / குடும்பம் :

அதிக பணிகள் காரணமாக உங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கு நேரம் ஒதுக்க இயலாது. இதனால் குடும்ப உறுப்பினர்களின்,  குறிப்பாக உங்கள் வாழ்க்கைத் துணையின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். குடும்பத்தில் இதனால் சில பிரச்சினைகள் எழ வாய்ப்பு உள்ளது. எனவே குடும்பத்திற்கு முக்கியத்துவம் அளியுங்கள். 

திருமண உறவில் நல்லிணக்கம் காண : அங்காரகன் பூஜை

நிதிநிலை :

இந்த மாதம் பண வரவு தாராளமாக இருக்கும். எனவே பணப்புழக்கம் சீராக இருக்கும். வெளிநாட்டில் இருந்து ஏதாவது ஒரு வகையில் பண வரவு இருக்கும். உத்தியோகத்தில் கிடைக்கும் பொன்னான வாய்ப்பு மூலம் நீங்கள் இந்த மாதம் சிறந்த வருமானம் காணும் வாய்ப்பினைப் பெறுவீர்கள். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் தீரும். உங்கள் செலவுகளில் கவனம் தேவை. எதிர்கால நலன் கருதி சேமிப்பை மேற்கொள்ளுங்கள்.  

உங்கள் நிதிநிலை மேம்பட : குபேரன் பூஜை 

வேலை :

உத்தியோகத்தில் இருக்கும் விருச்சிக ராசி அன்பர்கள்  இந்த மாதம் சிறந்த பலன்களைக் காண்பார்கள். நீங்கள் இந்த மாதம் தன்னம்பிக்கையுடனும் துணிவுடனும் பணியாற்றுவீர்கள். உங்கள் தலைமைப் பண்பிற்கு பாராட்டு பெறுவீர்கள். உங்கள் சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகள் உங்கள் பேச்சைத் தவறாகப் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பு உள்ளது. இதனால் தேவையற்ற பேச்சுக்களைத் தவிர்த்து விடுங்கள். கவனமுடன் நடந்து கொள்ளுங்கள். 

தொழில் :

ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் இந்த மாதம் அதில் சிறந்த லாபம் காண்பார்கள். இந்த மாதம் தொழிலில் அசாதாரண லாபம் கிட்டும் என்றாலும் காலம் கனிந்து வரும் வரை காத்திருக்க வேண்டும். நீங்கள் விரும்பும் வகையில் உங்கள் தொழிலை அமைத்துக் கொள்வீர்கள்.  புதிய முறையில் அதனை மேற்கொள்வீர்கள்.  

தொழில் வல்லுனர்கள் :

உங்கள் திறமைகள் வெளிப்படும் வகையில் இந்த மாதம் நீங்கள் செயல்படுவீர்கள். உங்கள் பொறுப்புக்களை நீங்கள் சரிவர மேற்கொள்வீர்கள். உங்கள் தலைமைப் பண்பு, ஆராய்ச்சித் திறன் மற்றும் நிர்வாகத் திறன் என அனைத்தும் பளிச்சிடும். நீங்கள் கண்ணும் கருத்துமாக பணிகளை மேற்கொண்டு பாராட்டு மற்றும்  பதவி உயர்வு பெறுவீர்கள். 

வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் காண :  சூரியன் பூஜை 

ஆரோக்கியம் :

இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றாலும் நீங்கள் சிறிது கவனம் செலுத்த வேண்டும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்த்து விடுவது நல்லது. வாக்கு வாதங்களில் ஈடுபடாதீர்கள். இதனால் ரத்த அழுத்தம், தலைவலி போன்றவற்றைத் தவிர்க்க இயலும்.  சிறு உடல் உபாதைகள் என்றாலும் மருத்துவரின் ஆலோசனையை நாடுங்கள். தியானம் மேற்கொள்வது நல்லது. 

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சனி பூஜை 

மாணவர்கள் :

மாணவர்களுக்கு சென்ற மாதத்தை விட இந்த மாதம் சிறப்பாக இருக்கும். மாணவர்கள்  மனதில் தன்னம்பிக்கை பெருகும். துணிவுடன் செயலாற்றுவார்கள்  கவனம் சிதறாமல் படிக்க முயற்சி மேற்கொண்டால் வெற்றி நிச்சயம். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டுதலை பின்பற்றுவது நல்லது. தியானம் மனதை ஒருமுகப்படுத்த உதவும். 

கல்வியில் மேன்மை பெற : அங்காரகன் பூஜை 

சுப தேதிகள் : 1, 2, 3, 4, 5, 6, 7, 8,17, 18, 23, 25, 26, 27, 28, 29, 
அசுப தேதிகள்: 9, 10, 11, 12, 13 14, 15, 16, 20, 19, 21, 22, 24, 30, 31.

banner

Leave a Reply

Submit Comment