AstroVed Menu
AstroVed
search
search

தனுசு ஜூன் மாத ராசி பலன் 2021 | June Matha Dhanusu Rasi Palan 2021

dateMay 7, 2021

தனுசு ஜூன் மாத பொதுப்பலன் 2021:

தனுசு ராசி அன்பர்களே! சென்ற மாதத்துடன் ஒப்பிடும் போது இந்த மாதம் உங்களுக்கு சில முன்னேற்றகரமான நிலை இருக்கும். என்றாலும் சில பிரச்சினைகள் மற்றும் தாமதங்களை  நீங்கள் சந்திக்க நேரும். நீங்கள் சிறிது கவனமுடன் நடந்து கொண்டால் இந்த மாதம் உங்களுக்கு சிறப்பாகவே இருக்கும். குடும்ப உறவுகளில் சுமுக நிலை இருக்கும். என்றாலும் உங்கள் வாழ்க்கைத் துணை உறவுகளுடன்  கருத்து வேறுபாடுகள் காரணமாக சண்டை சச்சரவுகள் வந்து விலகும். சுமுகமாகப் பேசிப் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள இயலும் கனி இருப்பக் காய் கவர்ந்தற்று என்பது போல இனிய சொற்கள் இருக்கும் போது கடுமையான சொற்களை பிரயோகிக்காதீர்கள். நீங்கள் வார்த்தைகளில் கவனம் செலுத்தினாலேயே பாதி பிரச்சினைகள் காணாமல் போய்விடும். உங்கள் பொருளாதாரத்தில் ஏற்றமான நிலை இருக்கும்.  கணிசமான பண வரவைக் காண்பீர்கள். என்றாலும் அதில் நீங்கள் சில தாமதங்களை சந்திக்க நேரும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பாகச் செயல்படுவார்கள். பணி நிமித்தமாக நீங்கள் வெளியிடங்களுக்குப் பயணம் செல்ல நேரும். அதன் மூலம் சிறந்த ஆதாயங்களையும் நீங்கள் பெறுவீர்கள். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவர்கள் கவனம் செலுத்திப் படிப்பதன் மூலம் சிறப்பாக செயலாற்ற முடியும். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.

காதல் / குடும்பம் :

இளம் வயது தனுசு ராசி அன்பர்களின் மனதில்  காதல் அரும்பு மலரும்.  உங்கள் காதல் வாழ்க்கை இன்பமாக இருக்கும். திருமணமான தம்பதிகள்  உறவில் ஒற்றுமை இருக்கும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தும் அனுசரித்தும் வாழ்க்கை நடத்துவார்கள். இருவரும் தங்கள்  கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வார்கள். கணவன் மனைவி இருவரும் இணைந்து புனித ஸ்தலங்களுக்கு யாத்திரை சென்று வருவீர்கள். 

திருமண உறவில் நல்லிணக்கம் காண : அங்காரகன் பூஜை 

நிதிநிலை :  

இந்த மாதம் நீங்கள்  பணத்தை சம்பாதிக்க கடின முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நீங்கள் பணத்தை சிறப்பாகக்  கையாள்வீர்கள். யாத்திரை செல்ல, ஆபரணங்கள் வாங்க பணத்தை செலவு செய்வீர்கள். வீடு, வண்டி, வாகனம் வாங்குவீர்கள்.  வாழ்க்கைத் துணை உறவினர்களிடம் பண விஷயத்தில் கவனமாக இருங்கள். 

உங்கள் நிதிநிலை மேம்பட :சுக்கிரன் பூஜை 

வேலை:

உத்தியோகத்தில் இருக்கும் தனுசு ராசி அன்பர்கள் இந்த மாதம் முன்னேற்றமான நிலை காண்பார்கள். பணியிடத்தில்  சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளுடன் நல்லுறவு காணப்படும். பணியிடத்தில் நீங்கள் எடுத்த காரியங்களில் வெற்றி காண்பீர்கள். பணியிடச் சூழல் மகிழ்ச்சி தரும் வகையில் இருக்கும். என்றாலும் நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு முன்னேற்றம் காணப்படாது. நீங்கள் எதிர் பார்த்துக் காத்திருக்கும் பதவி உயர்வு கிடைப்பதில்  சில சிக்கல்களும்  தாமதங்களும் காணப்படும். உங்கள் சாதுரியமான பேச்சால்  நீங்கள்  சாதிப்பீர்கள். பணியிடத்தில் உங்கள் வளர்ச்சி கண்டு பிறர் பொறாமைப்படவும் வாய்ப்பு உள்ளது 

தொழில் :

தொழில் செய்பவர்கள் இந்த மாதம் சிறந்த பலன்களைக் காண்பார்கள். அதிலும் குறிப்பாக கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு மிகச் சிறந்த பலன்கள் கிட்டும். உங்கள் கூட்டாளிகள் உங்கள் கருத்துக்களை ஏற்றுக் கொள்வார்கள். புதிய கூட்டாளிகளை நீங்கள் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.  உங்கள் குடும்ப உறுப்பினர்கள் உங்கள் தொழிலில் உதவி புரிவார்கள்.உங்கள் தொழில் அல்லது வியாபாரத்தில் இந்த மாதம் திடீர் ஆதாயம் அல்லது திடீர் நஷ்டம்  ஏற்பட வாய்ப்புள்ளது. எனவ  தொழில் குறித்த முக்கிய முடிவுகள் எதையும் இந்த மாதம் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. தொழிலில் நீங்கள் கவனமுடன் செயல்பட  வேண்டிய மாதம் இது.  

தொழில் வல்லுனர்கள் :

இந்த மாதம் உங்கள் மனதில் உற்சாகம் குறைந்து காணப்படும். தொழில் புரியும் இடத்தில் நடக்கும் சில நிகழ்வுகள் உங்களுக்கு மன வருத்தம் அளிக்கக் கூடும். நீங்கள் உற்சாகம் இழந்து காணப்படுவீர்கள். பணியிடச் சூழல் உங்களுக்கு மன வருத்தம் அளிக்கும் வகையில் இருக்கும். எனவே நீங்கள் திறம்பட செயலாற்றி உங்கள் இலக்கை அடைய இயலாது. எனவே மனதை ஒருமுகப்படுத்தி பணியாற்றுங்கள். பிரச்சனைகளை உடனுக்குடன் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள்.  

வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் காண :  சூரியன் பூஜை 

ஆரோக்கியம் :

உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிறு சிறு உடல் உபாதைகள் தலை தூக்கும். இளம்  வெயில் குளியல் உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். உடற்பயிற்சி மற்றும் தியானம் மேற்கொள்ளுங்கள்.  

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : விஷ்ணு பூஜை 

மாணவர்கள் :

மாணவர்கள் கவனம் சிதறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். உங்களின் முயற்சிகளுக்கு ஆசிரியர்களின் அங்கீகாரத்தைப் பெறுவீர்கள். பெற்றோர், ஆசிரியர் மற்றும் பெரியவர்களின் ஆலோசனை கேட்டு அதன்படி நடந்து கொள்ளுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிகாட்டுவார்கள். அதன் மூலம் நீங்கள் வெற்றி காண்பீர்கள். 

கல்வியில் மேன்மை பெற : அங்காரகன் பூஜை 

சுப தேதிகள் :  1, 2, 3, 4, 5, 7, 6, 16, 17, 18, 19, 26, 27, 28, 29, 30, 31.
அசுப தேதிகள் :  8, 9, 10, 11, 12, 13, 14, 15, 20, 21, 22, 23, 24, 25.


banner

Leave a Reply