Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

துலாம் ஜூன் மாத ராசி பலன் 2021 | June Matha Thulam Rasi Palan 2021

May 7, 2021 | Total Views : 533
Zoom In Zoom Out Print

துலாம் ஜூன் மாத பொதுப்பலன் 2021 :

துலாம் ராசி அன்பர்களே!  இது வரவேற்கத்தக்க மாதமாக உங்களுக்கு அமையும். வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் நீங்கள் சில நல்ல  பலன்களைக் காணலாம்.  அதற்கான உங்கள் முயற்சியும் அவசியம். முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்  என்பதற்கிணங்க நீங்கள் முயற்சி செய்தால் வெற்றியும் ஆதாயமும் உங்களை நாடி வரும். குடும்பத்தில் சில பிரச்சினைகளை சந்திக்க நேரும். கணவன் மனைவி உறவில் சில பிரச்சினைகள் தலை தூக்கும். குறிப்பாக  வாழ்க்கைத் துணை உறவுகளிடம் சில  பிரச்சினைகள் தலை தூக்கும். முரண்பட்ட கருத்துக்களே இதற்குக் காரணமாக அமையும். குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் தேடி வரும். பணியிடத்தில் நீங்கள் உற்சாகத்துடனும் ஆக்கப்பூர்வமாகவும் பணியாற்றுவீர்கள். குழந்தைகளுடன் நல்லுறவு இருக்கும். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கல்வி படிக்கும் மாணவர்கள் கடின முயற்சிகளின் மூலம் சிறந்த வெற்றி காண்பார்கள். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.

காதல் / குடும்ப உறவு :

இளம் வயது துலாம் ராசி அன்பர்களுக்கு காதல் கனிந்து வரும் நேரமாக இந்த மாதம் அமையும். திருமணமான தம்பதிகள் வெளியிடங்களுக்கு குறிப்பாக ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவது சிறப்பு. மனம் விட்டு உணர்வு மற்றும் கருத்துக்களை பரிமாறிக் கொள்வதும், இறை பிரார்த்தனையும் நெருக்கம் அதிகரிக்க உதவிகரமாக இருக்கும். குடும்பத்தில் வாக்கு வாதங்களை தவிர்த்தல்  நலம். உங்கள் மக்கட் செல்வங்களுடன்  நல்லுறவு காணப்படும்.  

திருமண உறவில் நல்லிணக்கம் காண : சுக்கிரன் பூஜை 

நிதிநிலை :

இந்த மாதம் உங்கள் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். பணம் பற்றாக்குறை அல்லது பண  நெருக்கடி போன்ற பிரச்சினைகள் இந்த மாதம் உங்களை அணுகாது. தொழில் செய்பவர்கள் தங்களின் தொழில்  மூலம் வருமானம் அதிகரிக்கக் காண்பார்கள். வங்கியில் சேமிப்பும் அதன் விளைவாக பண இருப்பும் அதிகரிக்கும். குழந்தைகள் மற்றும் வாழ்க்கைத் துணைக்காக பணம் செலவு செய்வீர்கள். வாங்கிய கடன்களை எல்லாம் அடைத்து விடுவீர்கள். 

உங்கள் நிதிநிலை மேம்பட : குரு பூஜை 

வேலை :

உத்தியோகத்தில் இருக்கும் துலாம் ராசி அன்பர்கள் இந்த மாதம் சிறந்த பலன்களைக் காண்பார்கள். பணியில் அதிர்ஷ்டம் உங்களை நாடி வரும். நீங்கள் எதிர் பார்த்துக் காத்திருக்கும் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. பணியிடத்தில்  பிறர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பணியிடத்தில் நீங்கள் உற்சாகத்துடனும், ஆக்கப்பூர்வமாகவும் செயல்படுவீர்கள். உங்கள் திறமை வெளிப்படும் வகையில் செயலாற்றி பணியில் பிரகாசிப்பீர்கள்.  உங்கள் செயல்திறன் காரணமாக மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறும் வாய்ப்பு உள்ளது.

தொழில் :

தொழில் செய்யும் துலாம் ராசி அன்பர்களுக்கு தொழிலை விரிவாக்கும் எண்ணம் இருந்தால் அதனை நிறைவேற்றிக் கொள்ள இது மிகவும் ஏற்ற மாதம் ஆகும். புதிய  வாடிக்கையாளர்களை ஏற்படுத்திக் கொள்ளவும் இருக்கும் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொளவும் நீங்கள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அமைதியும் பொறுமையும் உங்களுக்கு கை கொடுக்கும். நிரந்தர  வாடிக்கையாளர்களை பெறுவதில் கவனம் செலுத்துவது உங்கள் எதிர்கால வளர்ச்சிக்கு நல்லது. வாடிக்கையாளர்களின் திருப்திக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.  

தொழில் வல்லுனர்கள் :

துலாம் ராசி தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் தங்கள் திறமை வெளிப்படும் வகையில்  செயல்படுவார்கள். இந்த மாதம் உங்கள் படைப்பாற்றல் திறன் பளிச்சிடும். உங்கள் திறமைகள் பளிச்சிட இது மிகவும் ஏற்ற மாதமாக விளங்கும். மேலும் உங்கள் திறமைக்கு மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். நீங்கள் இந்த மாதம் பிறருக்கு வழிகாட்டியாகத் திகழ்வீர்கள். 

வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம்   காண : சுக்கிரன் பூஜை 

ஆரோக்கியம் :

உங்கள் ஆரோக்கியம் இந்த மாதம் சிறப்பாக இருக்கும். என்றாலும் உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். தியானம் மற்றும் இறை வழிபாடு உங்கள் மனதை அமைதியாக வைத்துக் கொள்ள உதவும். மனதில் பதட்டமில்லாமல் இருங்கள். சத்தான ஆகாரத்தை உட்கொள்ளுங்கள். 

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சனி பூஜை 

மாணவர்கள் :

இந்த மாதம் மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள் என்றாலும் கடின முயற்சியும் அவசியம் தேவை. தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தினை வளர்த்துக் கொள்வார்கள். மாணவர்களின் படைப்பாற்றல் வெளிப்படும் தருணமாக இந்த மாதம் அமையும். கலை, இசை, நாடகம்  என கல்விசாராத் துறைகளிலும் சாதனைகளைப் புரிவார்கள்.   கல்வியில் முன்னேற சிறந்த வாய்ப்புகள் இந்த மாதம் கிட்டும். வெளி நாடு சென்று படிக்க நினைக்கும் மாணவர்கள் இந்த மாதம் தங்கள் எண்ணம் நிறைவேறக் காண்பார்கள். 

கல்வியில் மேன்மை பெற : அங்காரகன் பூஜை 

சுப தேதிகள்:  8, 9, 10, 11, 12, 21, 22, 24, 25, 26, 27, 28, 29, 30.
அசுப தேதிகள்: 1,2,3, 4, 5, 6, 7, 13, 14, 15, 16, 20, 23, 17, 18, 19, 31

banner

Leave a Reply

Submit Comment