Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

சிம்மம் ஜூன் மாத ராசி பலன் 2021 | June Matha Simmam Rasi Palan 2021

May 5, 2021 | Total Views : 652
Zoom In Zoom Out Print

சிம்மம் ஜூன் மாத பொதுப்பலன் 2021:

சிம்ம ராசி அன்பர்களே!  உலகில் உள்ள அனைத்திற்கும் இரு பக்கங்கள் இருக்கின்றது என்பதை நாம் அறிந்திருந்தாலும் அதை நீங்கள் உணரும் வகையில் உங்களுக்கு  இந்த மாதம் இன்பம் துன்பம் இரண்டும் கலந்த பலன்கள் கிடைக்கும். பணப்பற்றாக்குறை காரணமாக கடன் வாங்க நேரும். உங்கள் ஆரோக்கியத்தில் சில குறைபாடுகள் இருக்கும். இதனால் மன வருத்தங்கள் ஏற்படும். என்றாலும் இந்தச் சூழலை  நீங்கள் எளிதாக சமாளித்து வெல்வீர்கள். நாட்கள் செல்லச்  உங்கள் பொருளாதாரத்தில் ஏற்றம் காண்பீர்கள் குடும்ப உறவு முறைகளும் சுமுகமாக இருக்கும். வெளியிடங்களுக்கு அதிக பயணங்களை நீங்கள் மேற்கொள்ள நேரும். இதனால் எளிதில் உடல் சோர்வு மற்றும் அசதிக்கு ஆளாவீர்கள். இதன் காரணமாக சிறிது கோபமும் பதட்டமும் அதிகரிக்கும் என்றாலும் உங்கள் உறசாகத்திற்கும்  குறைவிருக்காது. கோபம் மற்றும் பதட்டத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள  தியானம் மேற்கொள்ளுங்கள். மாணவர்கள் இந்த மாதம் ஆக்கப்பூர்வமாகச் செயலாற்றுவார்கள். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.

காதல் / குடும்பம் :

இந்த மாதம் நீங்கள் அன்பிற்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். இளம் வயது சிம்ம ராசி அன்பர்கள் தங்களுக்கேற்ற துணையை நண்பர்கள் அல்லது பயணங்கள் மூலம் பெறுவார்கள். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். பரஸ்பரம் கருத்துக்களை பரிமாறிக் கொள்வதன் மூலம் புரிதல் அதிகரிக்கும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பதும், பேசும் வார்த்தைகளில்  கவனம் செலுத்துவதும் பிரச்சினைகள் வராமல் காக்கும். 

திருமண உறவில் நல்லிணக்கம் காண : லக்ஷ்மி பூஜை 

நிதிநிலை :

நிதிநிலையைப் பொறுத்தவரை இந்த மாதம் உங்களுக்கு அனுகூலமான பலன்களைத் தரும் மாதமாகத் தான் இருக்கும். பண நெருக்கடி அதிகம் இருக்காது.  கையில் பணம் புழங்கும். என்றாலும் எதிர்கால நலன் கருதி  பட்ஜெட் அமைத்து உங்கள் செலவுகளை மேற்கொள்ளுங்கள். குடும்பத்திற்காகவும், பயணங்களுக்காகவும் நீங்கள் பணத்தை செலவு செய்வீர்கள். பயணங்கள் மூலம் நீங்கள்  ஆதாயம் பெறுவீர்கள். 

உங்கள் நிதிநிலை மேம்பட : குபேரன் பூஜை 

வேலை :

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இந்த மாதம்  வெற்றி கிட்டும் மாதமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமையைப் பயன்படுத்தி நீங்கள் சிறப்பாகப் பணியாற்றுவீர்கள். உங்கள் திறமை மற்றும் முயற்சிக்கான அங்கீகாரத்தை மேலதிகாரிகளிடம் இருந்து பெறுவீர்கள். இதனால் பணியில் முன்னேற்றமும் வளர்ச்சியும் இருக்கும். உங்கள் வளர்ச்சியைக் கண்டு பணியிடத்தில் சிலர் பொறாமைப் படுவார்கள். சக பணியாளர்களுடன் சில கருத்து வேறுபாடுகளும் அதன் காரணமாக மோதல்கள் ஏற்படும். உத்தியோகம் நிமித்தமாக நீங்கள் வெளிநாடு செல்ல நேரலாம். பொறுமையுடன் செயல்பட்டால் நீங்கள் பெயரும் புகழும் பெறுவீர்கள்.

தொழில் :

தொழில் செய்யும் சிம்ம ராசி அன்பர்கள் இந்த மாதம்  சிறப்பாகச் செயல்படுவார்கள். கூட்டுத் தொழில் இந்த மாதம் சிறப்பாக இருக்கும். வாடிக்கையாளர்களை அதிக அளவில் பெறுவீர்கள். இதற்கு முன்பு நீங்கள் மேற்கொண்ட கடின உழைப்பு மற்றும் முயற்சிகளுக்கான சிறந்த பலனை இப்பொழுது  காண்பீர்கள். தொழில் சம்பந்தமான பயணங்கள் உங்களுக்கு ஆதாயங்களைப் பெற்றுத் தரும்.  உங்கள் கடினமான மற்றும் அறிவுப்பூர்வமான உழைப்பிற்கு பாராட்டு பெறுவீர்கள். பொறுத்தார் பூமி ஆள்வார் என்பதை கருத்தில் கொண்டு நீங்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டும். வாடிக்கையாளர்களின் நலன் மற்றும் திருப்திக்கு முக்கியத்துவம் அளியுங்கள். 

தொழில் வல்லுனர்கள் :

சிம்ம ராசி தொழில் வல்லுனர்களுக்கு இந்த மாதம் செல்வாக்கு பெருகும். மதிப்பு உயரும். உங்கள் அதிகார தோரணையும் கடின உழைப்பும் உங்களுக்கு பாராட்டை பெற்றுத் தரும். சாதுரியமாகச் செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.  உணர்ச்சிப் பூர்வமாக செயல்படாமல் அறிவுப் பூர்வமாகச் செயல்படுவதன் மூலம் நீங்கள் இந்த மாதம் தொழிலில் பிரகாசிக்க முடியும்.  

வேலை மற்றும் தொழிலில் மேன்மை பெற :  சூரியன் பூஜை 

ஆரோக்கியம் :

நீங்கள் சிறந்த ஆரோக்கியத்தை அனுபவிப்பீர்கள் என்றாலும் மனதில் ஏற்படும் பதட்டம் காரணமாக ரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. தலைவலி ஏற்படும்  வாய்ப்பு உள்ளது. தியானம் மேற்கொள்ளுங்கள். உடற் பயிற்சி செய்யுங்கள். சாத்வீக உணவை உண்ணுங்கள். அஜீரணக் கோளாறு ஏற்படும் எனபதால் உணவில் கவனம் தேவை. 

உங்கள் ஆரோக்கியம் மேம்பட :  சூரியன் பூஜை 

மாணவர்கள் :

மாணவர்களுக்கு ஓரளவு அனுகூலமான பலன்கள் கிடைக்கும் மாதமாக இந்த மாதம் இருக்கும். மனதை ஒருமுகப்படுத்தி கல்வியில் கவனம் செலுத்துவார்கள். கவனிப்புத் திறன் கூடும். என்றாலும் உடல் ஆரோக்கியக் குறைவு காரணமாக சில தடைகளை சந்திக்க நேரும். ஆசிரியர்களுடன் நல்லுறவு இருக்கும். அவர்கள் உங்களை உற்சாகப்படுத்துவார்கள். வெளிநாடு சென்று கல்வி பயில நினைக்கும் மாணவர்கள் இந்த மாதம் முயற்சிகளை மேற்கொள்ளலாம். 

கல்வியில் மேன்மை பெற : குரு பூஜை 

சுப தேதிகள் :  5, 6, 7, 8, 9, 10, 11, 12, 18, 20, 23, 26, 29, 30, 31
அசுப தேதிகள்: 1, 2, 3, 4, 13, 14, 15, 19, 16, 17, 21, 22, 24, 25, 27, 28.

banner

Leave a Reply

Submit Comment