Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

கன்னி ஜூன் மாத ராசி பலன் 2021 | June Matha Kanni Rasi Palan 2021

May 5, 2021 | Total Views : 576
Zoom In Zoom Out Print

கன்னி ஜூன் மாத பொதுப்பலன் 2021:

கன்னி ராசி அன்பர்களே!  இந்த மாதம் உங்களுக்கு நன்மை தீமை இரண்டும் கலந்த பலன்கள் கிட்டும். அதிக பணிகள் காரணமாக நீங்கள் உத்தியோகம் அல்லது உங்களின் தொழிலிற்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். இதனால் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம், உறவு, போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்க இயலாத நிலை இருக்கும். மேலும் தவிர்க்க முடியாத பயணங்கள் காரணமாக நீங்கள் குடும்ப அங்கத்தினர்களை விட்டுப் பிரிந்திருக்க நேரும். இதனால் குடும்பத்தினர் ஏமாற்றமான மன நிலையை சந்திப்பார்கள். இந்தச் சூழ்நிலை குடும்ப  ஒற்றுமையை பாதிக்கும். நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாகச் செயல்படுவார்கள். நீங்கள் பல புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். உங்கள் பொருளாதார நிலையை நீங்கள் கட்டுக்குள் கொண்டுவர முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.  உங்கள் மனதில் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். ஆரோக்கியமான மனமே ஆரோக்கியமான உடலுக்கு மூல கரணம் என்பதால் உங்கள் மனதை நீங்கள் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். மனதில் ஏற்படும் சோர்வு காரணமாக உங்கள் ஆரோக்கியம் பாதிக்காமல் கவனமாக இருங்கள். பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே உங்கள் மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் அறிவுரைகளை பின்பற்றுவதன் மூலம் மாணவர்கள் சிற்ப்பாகச் செயல்படுவார்கள். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.

காதல் / குடும்பம் :

இளம் வயது  கன்னி ராசி அன்பர்களின்  காதல் வாழ்வில் ஏற்ற இறக்கம் இருக்கும். அதிக பணிகள் காரணமாக குடும்பத்துடன் அதிக  நேரம் உங்களால் செலவு செய்ய இயலாத நிலை இருக்கும். இது உங்கள் வாழ்க்கைத் துணைக்கு ஏமாற்றத்தை அளிக்கும். எனவே நீங்கள் சில குடும்ப பொறுப்புக்களை ஏற்றுக் கொள்வதன் மூலம் அவர்களை மகிழ்ச்சிப்படுத்த இயலும். விட்டுக் கொடுத்தார் கெட்டுப் போவதில்லை என்பதை உணர்ந்து  நீங்கள் விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலம் கணவன் மனைவி  உறவு நல்லுறவாக இருக்கும்.

திருமண உறவில் நல்லிணக்கம் காண : குரு பூஜை 

நிதிநிலை :

கடன் பட்டார் நெஞ்சம் கலங்கினார் போல என்பதற்கிணங்க கடந்த காலத்தில் நீங்கள் பிறரிடம்  வாங்கிய கடன் அல்லது பிறருக்கு கொடுத்த கடன் சம்பந்தமாக இந்த மாதம் சில பிரச்சினைகள் காரணமாக உங்கள் மனம் கலங்கும் வாய்ப்பு உள்ளது.  நீங்கள் செலவுகளை கட்டுக்குள் கொண்டு வர நினைப்பீர்கள். என்றாலும் அதனைக் கடினமாக உணர்வீர்கள். எதிர்பாராத மற்றும் தேவையற்ற செலவுகள் காரணமாக சேமிக்க இயலாத நிலை உணர்வீர்கள். பொறுத்தார் பூமி ஆள்வார் என்பதனைக் கருத்தில் கொண்டு இந்த மாதம் நீங்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டும். 

உங்கள் நிதிநிலை மேம்பட :புதன் பூஜை 

வேலை :

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு  சென்ற மாதத்தைக் காட்டிலும் இந்த மாதம் சிறந்த பலன்கள் கிட்டும். நீங்கள் உற்சாகமான மனநிலையுடன் பணியாற்றுவீர்கள். நீங்கள் மேற்கொள்ளும் பணியில்  உங்கள்  படைப்பாற்றல் மற்றும் திறமை  வெளிப்படும்.  பணியிடத்தில் எதிரிகளை வெல்வீர்கள். உங்கள் தகவல் தொடர்புத் திறனை நீங்கள் மேம்படுத்திக் கொள்வீர்கள். சில சமயங்களில் உங்கள் உற்சாகம் குறையும். என்றாலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். பணியிடச் சூழல் உங்கள் மனதிற்கு அமைதி அளிக்கும். உங்கள் படைப்புத் திறன் மற்றும் கடின உழைப்பிற்கான அங்கீகாரம் பெறுவீர்கள். 

தொழில் :

இந்த மாதம் உங்கள் தொழில் சிறப்பாக இருக்கும். உங்கள் முயற்சிகளில் நீங்கள் வெற்றி காண்பீர்கள். அதே சமயத்தில் சில பிரச்சினைகளையும் நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும். புதிய  முதலீடுகள் மூலம் நீங்கள் சில நஷ்டங்களை சந்திக்க நேரும். எனவே நிபுணர்களின் ஆலோசனைகளை மேற்கொண்டு செயல்படுவது நன்மை அளிக்கும். குறிப்பாக வெளிநாட்டு தொழில் விவகாரங்களில் கவனம் தேவை. படைப்புத் துறை சார்ந்த தொழில் மேற்கொள்பவர்கள் சிறந்த வெற்றிகளைக் காண்பார்கள். தொழில் சம்பந்தமான கடன்கள் எளிதாகக் கிட்டும். புதிய தொழில் ஆரம்பிக்க  இந்த மாதம் உகந்த நேரம் ஆகும். 

தொழில் வல்லுனர்கள் :

நீங்கள் சிறப்புற செயலாற்றுவீர்கள். உங்கள் செயல்திறன் பிறர் பாராட்டும் வகையில் இருக்கும். உங்கள் பணியாற்றும் திறன் பிறருக்கு எடுத்துக்காட்டாக விளங்கும். உங்கள் அனுபவ அறிவைப் பயன்படுத்தி நீங்கள் நீங்கள் மிகவும் பக்குவமான மனதுடன் செயல்படுவீர்கள். நீங்கள் ஊடகத் துறை மற்றும் பொழுதுபோக்குத் துறையில் பணிபுரிவர் என்றால் சிறப்பாகச் செயல்படுவீர்கள்.  நீங்கள் பெயரும் புகழும் பெறுவீர்கள். உங்கள் தன்னம்பிக்கை உங்களை வழி நடத்தும்  என்றாலும் கோபம் மற்றும் பயத்தை நீங்கள் அறவே ஒதுக்கிச் செயல்படவேண்டும்.  

ஆரோக்கியம் :

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். நல்ல  ஆரோக்கியம் இருந்தால் தான் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். அதிக பணிகள் காரணமாக ஏற்படும் சோர்வு உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பதால் பணியில் கவனம் தேவை.  எனவே உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். மனதில் அமைதியை வளர்த்துக் கொள்ளுங்கள். பொறுமையுடன் செயல்படுங்கள். 

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சூரியன் பூஜை 

மாணவர்கள் :

மாணவர்கள் இந்த மாதம் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். தன்னம்பிக்கையுடன் செயல்படுவார்கள். மந்த நிலையில் இருந்து மீள்வார்கள். கல்வி உதவித் தொகை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மாணவர்கள், தங்கள் எண்ணங்கள் நிறைவேறப் பெறுவார்கள். மாணவர்கள் புத்தி கூர்மையுடன் செயல்படுவார்கள். கடின உழைப்பும் அறிவுக் கூர்மையும் கொண்டு தங்கள் லட்சியங்களை அடைவார்கள். 

கல்வியில் மேன்மை பெற : சனி பூஜை 

சுப தேதிகள் : 4, 5, 6, 12, 14, 13, 15, 16, 17, 18, 19, 20, 24, 25, 26, 27.
அசுப தேதிகள் :  1, 2, 3, 7, 8, 9, 10, 11, 21, 22, 23, 28, 29, 30, 31.

banner

Leave a Reply

Submit Comment