Arupadai Veedu Muruga Program 2024: Invoke Muruga at His 6 Powerful Abodes During the 6th Moon Powertime Days JOIN NOW

கடகம் ஜூன் மாத ராசி பலன் 2021 | June Matha Kadagam Rasi Palan 2021

May 5, 2021 | Total Views : 465
Zoom In Zoom Out Print

கடகம் ஜூன் மாத பொதுப்பலன் 2021:

கடக ராசி அன்பர்களே! நாணயத்திற்கு இரண்டு பக்கம் என்பது போல இந்த மாதம் உங்கள் வாழ்வில் இன்பம், துன்பம் என இரண்டும் கலந்த பலன்கள் காணப்படும்.  கணவன் மனைவி உறவு ஒரளவு சுமாராக இருக்கும். கருத்து வேறுபாடு காரணமாக சில சிக்கல்களை நீங்கள்  சந்திக்க நேரும். குடும்ப உறுப்பினர்களுடன் விட்டுக் கொடுத்தும் அனுசரித்தும் நடந்து கொள்ள வேண்டும். குறிப்பாக தந்தையிடம். தந்தையுடனான உறவில் சுமூகமான நிலை இருக்காது. உங்கள் நிதிநிலையைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிளுடனும் நல்லுறவை வளர்த்துக் கொள்ள முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நல்ல மதிப்பைப் பெறுவார்கள். தொழில் செய்பவர்கள் இந்த  மாதம் சிற்பபாகச் செயலாற்றுவார்கள்.  தொழில் மூலம் லாபம் கிட்டும். தொழில் சிறப்பாக நடைபெறும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.

காதல் / குடும்பம் :

மனதில் இருக்கும் மகிழ்ச்சி காரணமாக பேச்சில் இனிமை வெளிப்படும். உங்கள் இனிமையான பேச்சால் உறவுகளுடன் நெருக்கம் அதிகரிக்கும். குறிப்பாக வாழ்க்கைத் துணையிடம். இதனால் உங்கள் வாழ்க்கைத் துணைக்கு உங்கள் மீதான அன்பு அதிகரிக்கும். உங்கள் வசதி வாய்ப்புகள் கூடும். ஆடம்பரமான வசதியான வாழ்க்கை வாழ்வீர்கள். குடும்ப வாழ்க்கையை சிறப்பானதாக ஆக்கிக் கொள்ள  நீங்கள் முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம்  கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை வழி உறவினர்களிடம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். 

திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண : குரு பூஜை 

நிதிநிலை :

இந்த மாதம் ஸ்திரமான நிதிநிலை இருக்க வாய்ப்பில்லை உங்கள் நிதிநிலையில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும்.  திடீர் வரவு செலவு என சில மாற்றங்கள் ஏற்படும். பணியில் பதவி உயர்வு காரணமாக உங்கள் வருமானம் பெருகும் வாய்ப்பு உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்ற செலவுகளை மேற்கொள்ள நேரும். ஆடம்பரப் பொருட்களுக்கான செலவும் அதில் அடங்கும். உங்கள் வங்கி இருப்பு உங்களுக்கு மகிழ்ச்சி தரும் விதத்தில் இருக்கும்.  என்றாலும் நீங்கள் மேலும் அதிக வருமானம் ஈட்ட விரும்புவீர்கள். 

உங்கள் நிதிநிலை மேம்பட :  லக்ஷ்மி குபேர பூஜை 

வேலை :

உத்தியோகத்தில் இருப்பவர்கள் இந்த மாதம் சிறப்பாகச் செயல்படுவார்கள். பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். ஊதிய உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பணியிடத்தில் புதிய நண்பர்களின்  அறிமுகம் மூலம் உங்கள் நட்பு வட்டம் விரியும். பணியிடத்தில் பெரிய மனிதர்கள் மற்றும் முக்கிய மனிதர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைக்கப் பெறுவீர்கள். இந்த மாதம் நீங்கள் ஊதிய உயர்வு பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு இந்த மாதம் வாய்ப்புகள் கிட்டும். ஆனால் உங்கள் பேச்சில் கவனம் தேவை. பிறரைப் பற்றி முழுவதும் புரிந்து கொள்ளாமல் அவர்களைப் பற்றிக் கணிக்காதீர்கள். 

தொழில் :

இந்த மாதம் உங்களுக்கு கூட்டுத் தொழில் சிறப்பாக இருக்கும். என்றாலும் தொழில் சம்பந்தமான ஒப்பந்தங்களை கையொப்பம் இடுவதற்கு முன்பு ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து  செயல்பட வேண்டியது அவசியம். நீங்கள் எதிர்பாராத தொழில் வாய்ப்புகள் உங்களை நாடி வரும். தொழில் மூலம் ஆதாயம் கிடைக்கும். தொழில் குறித்த முடிவுகளை ஒன்றிற்கு இரண்டு முறை யோசித்து எடுக்க வேண்டும்.  . வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் அல்லது வெளிநாட்டு கூட்டுத் தொழில் மூலம் நீங்கள் ஆதாயங்களைக் காண்பீர்கள்.  

தொழில் வல்லுனர்கள் :

கடக ராசி தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் நேர்மையுடன் செயல்படுவார்கள். உங்களின் நேர்மையான முயற்சி உங்களை இலக்கை நோக்கி இட்டுச் செல்லும்.  உங்களுக்கு அளிக்கப்படும்  வேலைகளை புறக்கணிக்காதீர்கள். தொழில் நிமித்தமான பயணங்கள் உங்களுக்கு நன்மையை அளிக்கும். நீங்கள் புதிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள  நேரும். இந்த மாதம் நீங்கள் மகிழ்ச்சியுடன் பணியாற்றுவீர்கள்.  நீங்கள் கடினமாகப் பணியாற்றுவீர்கள். நீங்கள் திறமையுடனும், தலைமைப் பொறுப்புடனும் பணியாற்றுவீர்கள். என்றாலும் உங்கள் கடின உழைப்பிற்கான அங்கீகாரம் பெற நீங்கள் சிறிது  காலம் காத்திருக்க வேண்டும் 

வேலை மற்றும் தொழிலில் மேன்மை பெற : அங்காரகன் பூஜை  

ஆரோக்கியம் :

இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பெரிய அளவிலான ஆரோக்கிய பாதிப்புகள் ஏதும் இருக்காது. உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார். சாத்வீகமான உணவு உண்ணுங்கள். தியானம் மேற்கொள்ளுங்கள்.  

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சூரியன் பூஜை 

மாணவர்கள் : 

கடக ராசி மாணவர்கள் இந்த மாதம் நல்ல முறையில் கல்வி பயில்வார்கள். என்றாலும் கவனச் சிதறல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.  விடா முயற்சி மூலம் நீங்கள் வெற்றி காண்பீர்கள் ஆராய்ச்சித் துறையில்  ஈடுபட்டிருக்கும் மாணவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். குறிப்பாக வெளிநாடு சென்று படிப்பவர்கள் ஆதாயம் காண்பார்கள். பொறியியல், நிர்வாகம் மற்றும் பொருளாதாரம் பயிலும் மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். 

கல்வியில் மேன்மை பெற : குரு பூஜை

சுப தேதிகள் :   4, 5, 6, 7, 8, 13, 15, 16, 14, 17, 18, 19, 20, 21, 22, 23, 29.
அசுப தேதிகள் :  1, 2, 3, 9, 10, 11, 12, 24, 25, 26, 27, 28, 30, 31.

banner

Leave a Reply

Submit Comment