Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

ரிஷபம் ஜூன் மாத ராசி பலன் 2021 | June Matha Rishabam Rasi Palan 2021

May 5, 2021 | Total Views : 654
Zoom In Zoom Out Print

ரிஷபம் ஜூன் மாத பொதுப்பலன் 2021:

ரிஷப ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்களுக்கு சிறப்பாக இருக்கக் காண்பீர்கள். உங்கள் தன்னம்பிக்கை இந்த மாதம் அதிகரிக்கும். நீங்கள் தைரியமாகச் செயல்படுவீர்கள். இந்த மாத நடுப் பகுதிக்குப் பிறகு  குடும்பம், ஆரோக்கியம், உத்தியோகம் போன்ற வாழ்க்கையின் பெரும்பான்மையான அம்சங்களில் நீங்கள் சிறந்த பலன்களைக் காண்பீர்கள். உங்கள் நிதிநிலை மேம்படக் காண்பீர்கள். குடும்ப உறவில் மேன்மை காண்பீர்கள். என்றாலும் நீங்கள் உங்கள் பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற பேச்சுக்கள் காரணமாக கருத்து வேறுபாடுகள் ஏற்படும். இதனால் உங்கள் மன அமைதி  குலையும். எனவே கவனம் தேவை.  உங்கள் தகவல் தொடர்புத் திறனை நீங்கள் மேம்படுத்திக் கொள்வீர்கள். வெளிநாட்டு வேலை வாய்ப்பு தேடுபவர்களுக்கு இந்த மாதம் அவர்கள் எண்ணங்கள் நிறைவேறும். நீங்கள் இந்த மாதம் ஆன்மீக நாட்டம் அதிகம் கொள்வீர்கள். உங்கள் மனம் மகிழும் வகையில் இந்த  மாதம்  சிறந்த பலன்களை அளிக்கும். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றாலும் ஆரோக்கியத்தை சிறந்த முறையில் தக்க வைத்துக் கொள்ள நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள் மனதை ஒருமுகப்படுத்தி படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.

காதல்/குடும்பம் :

திருமணமான தம்பதிகள் இடையே ஒற்றுமை இருக்கும். சுமுகமான நல்லுறவு நிலவும். குடும்ப உறுப்பினர்களுடன் நெருக்கம் அதிகரிக்கும்.  உங்கள் வார்த்தைகளில் கவனம் தேவை. பிறர் மனம் புண்படும் வகையில் பேசாதீர்கள்.  அதிக பணிகள் நீங்கள் செய்ய வேண்டியிருந்தாலும் அதற்கு இடையில் நீங்கள் குடும்பத்திற்கும் குடும்பத் தேவைகளுக்கும்   முக்கியத்துவம் அளிக்க வேண்டும். உடன் பிறப்புக்களுடனான   உறவும் சுமுகமாக இருக்கும். 

 திருமண உறவில் நல்லிணக்கம் காண : சுக்கிரன் பூஜை  

நிதிநிலை :

இந்த மாதம் நிதிநிலையில் மேன்மை காணப்படும் என்றாலும் உங்கள் பொருளாதார நிலையில் ஏற்றம் இருக்கும். படிப்படியாக பணவரவு கணிசமாக அதிகரிக்கும். உங்கள் முதலீடுகளின் மூலம் நீங்கள் லாபம் காண்பீர்கள். கூட்டுத் தொழில் செய்ய எண்ணுபவர்கள் புதிய கூட்டாளிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உங்கள் பேச்சுத் திறமை மூலம் நீங்கள் அதிக  பணம் ஈட்டுவீர்கள். கடந்த காலங்களில் வாங்கிய கடன்களை அடைத்து  முடிப்பீர்கள். புதிய முதலீடுகள் எதையும் இப்பொழுது மேற்கொள்ள வேண்டாம். அப்படி மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டால் குடும்ப அங்கத்தினர்களிடம் கலந்து ஆலோசித்து முடிவு எடுங்கள். 

வேலை :

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இந்த மாதம் சுபம், அசுபம் என இரண்டும் கலந்த கலப்புப் பலன்கள் கிட்டும். உத்தியோகத்தில் முன்னேற்றம் எதிர்நோக்கிக் காத்திருப்பவர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கும் என்றாலும்  சிறிது கால தாமதம் ஆகும்.  வெளிநாட்ட்டில்  இருந்து கொண்டு வேலை பார்ப்பவர்களுக்கு இந்த மாதம் பண வரவு அதிகமாக இருக்கும். அலுவலகப் பணிகள்  நிமித்தமான பயணங்கள் உங்களுக்கு ஆதாயங்களைப் பெற்றுத் தரும். என்றாலும் அதிலும் சில தாமதங்கள் ஏற்படும். பணியிடத்தில் மேலதிகாரிகளுடன் இணக்கமாக நடந்து கொள்ள வேண்டியது அவசியம். நீங்கள் பொறுப்புடன் நடந்து கொள்வீர்கள். இந்த மாதம் நீங்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டும்.  

தொழில் :

தொழில் செய்யும் ரிஷப  ராசி அன்பர்கள் தொழிலில் லாபம் காண்பதற்கு முக்கியத்துவம் அளிப்பதை விட வாடிக்கையாளர்களுடன் நல்லுறவு வளர்த்துக் கொள்ள முக்கியத்துவம்  அளிக்க வேண்டும்.  கூட்டுத் தொழில் மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு இந்த மாதம் ஏற்ற மாதமாக இருக்கும். தொழிலில் நம்பிக்கை மிகவும் முக்கியம். புதிய தொழில் மேற்கொள்ளும் போது மிகவும் கவனம் அவசியம். 

தொழில் வல்லுனர்கள் :

ரிஷப ராசி தொழில் வல்லுனர்களுக்கு மிகச் சிறப்பான எதிர்காலம் காத்துக் கொண்டு இருக்கின்றது.  அதிலும் குறிப்பாக நீங்கள் படைப்புத் துறையில் இருக்கிறீர்கள் எனில். உங்கள் செயல்திறன்  கண்டு மேலதிகாரிகள் மற்றும் சக பணியாளர்கள் வியந்து போவீர்கள். நீங்கள் எதிர் பாராத திடீர் அதிர்ஷ்டம் உங்களை நாடி வரும். நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு தொழில் முன்னேற்றம் காண்பீர்கள். பொறுமையும் நம்பிக்கையும் மிகவும் அவசியம். குறித்த நேரத்தில் பணிகளை முடித்து அளிக்க முயலுங்கள்.  

உங்கள் வேலை மற்றும் தொழிலில் மேம்பட : புதன் பூஜை  

ஆரோக்கியம் :

இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.  சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய இயலும். ஆரோக்கியமான உடலுக்கு ஆரோக்கியமான மனம் அவசியம். மனதில் பதட்டம் கொள்ளாமல் இருங்கள். தியானம் மேற்கொள்ளுங்கள். முறையான உடற்பயிற்சி மற்றும் சத்தான உணவு உங்கள் ஆரோக்கியத்தை சிறந்த முறையில் தக்க வைத்துக் கொள்ள உதவும். கழுத்து வலி,  முதுகு வலி ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். சாத்வீக உணவை உண்ணுங்கள். கோபத்தைத் தவிருங்கள். 

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சூரியன் பூஜை    

மாணவர்கள் :

ரிஷப ராசி  மாணவர்கள் இந்த மாதம் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். இந்த மாதம் மனதை ஒருமுகப்படுத்தி படிப்பில் கவனம் செலுத்த இயலும். உங்கள் கடின உழைப்பின் மூலம் உங்களின் இலக்கை எட்டுவீர்கள். உங்கள் அறிவுத் திறன் பளிச்சிடும் வகையில் இந்த மாதம் நீங்கள் செயல்படுவீர்கள். ஆசிரியர்களை மரியாதையுடன் நடத்துங்கள். மாணவர்கள் இன்னும் அதிக முயற்சி எடுத்தால் சிறந்த முறையில் வெற்றி  பெற இயலும்.  

கல்வியில் மேன்மை பெற :  குரு பூஜை 

சுப தேதிகள்: 7, 14, 15, 17, 18, 19, 20, 21, 22, 23, 26, 27, 28, 31.
அசுப தேதிகள்: 1, 2,3, 4, 5, 6, 8, 9, 10, 11, 12, 13, 16, 24, 25, 29, 30.

banner

Leave a Reply

Submit Comment