Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

மிதுனம் ஜூன் மாத ராசி பலன் 2021 | June Matha Mithunam Rasi Palan 2021

May 5, 2021 | Total Views : 660
Zoom In Zoom Out Print

மிதுனம் ஜூன் மாத பொதுப்பலன் 2021 :

மிதுன ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்களுக்கு வரவேற்கத் தக்க மாதமாக இருக்கும். உங்களிடம் தெளிவு இருக்கும். நீங்கள் இந்த மாதம் புத்திசாலித்தனமாகவும், அறிவுக் கூர்மையுடனும் செயல்படுவீர்கள். மிகச் சிறந்த மாறுதல்களைக் காண்பீர்கள். ஆனால் உங்களுக்குள் ஒளிந்திருக்கும் கோபம் மற்றும் நான் என்னும் அகந்தை உங்கள் பேச்சில் வெளிப்படாமல் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் குதூகலம் இருக்கும்.  குடும்ப உறுப்பினர்களுடன் நல்லுறவு மேம்படும்.  அவர்களுடன்  உறவாடும் போது உங்கள் தன்னம்பிக்கை, இரக்க குணம் மற்றும் பேச்சில் இனிமை வெளிப்படும். குடும்பத்தில் அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் உத்தியோகம் / தொழில் வாழ்க்கை இரண்டிலும் சிறந்த மாற்றங்களைக்  காண்பீர்கள். உங்கள் தன்னம்பிக்கை காரணமாக நீங்கள் துணிவுடன் செயல்பட்டு உங்கள் கனவுகள் மற்றும் லட்சியங்களை அடைவீர்கள்.இந்த மாதம் அதிர்ஷ்டம் உங்களை நாடி வரும்.  பல நன்மைகள் இந்த மாதம் நடக்கும். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவர்கள் மனதை ஓருமுகப் படுத்தி கவனம் செலுத்திப் படிப்பதன் மூலம் கல்வியில் சிறந்த முறையில் வெற்றி காண்பார்கள். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.

காதல் / குடும்பம் :

உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நீங்கள் மனம் விட்டுப் பேசுவீர்கள். உங்கள் கருத்துக்களை அவருடன் பகிர்ந்து கொள்வீர்கள்.உங்கள் பேச்சில் தன்னம்பிக்கை வெளிப்படும். மேலும்  உங்கள் தன்னம்பிக்கை நிறைந்த பேச்சு உங்கள் வாழ்க்கைத்துணையின் கவனத்தை ஈர்க்கும்.  உங்கள் கனவுகள் யாவும் நிறைவேறும்.  உங்கள் வாழ்க்கைத் துணையின் தேவைகளை நீங்கள் நிறைவேற்றுவீர்கள்.  இளம் வயது மிதுன ராசி அன்பர்கள் தங்களுக்கேற்ற துணையைக் கண்டு கொள்வார்கள். சிலர் மனதில் காதல் அரும்பு மலரும். 

திருமண உறவில் நல்லிணக்கம் காண : சுக்கிரன் பூஜை 

நிதிநிலை :

இந்த மாதம் நிதிநிலை வளர்ச்சி நீங்கள் ஆச்சரியப்படும் வகையில் இருக்கும். நீங்கள் எதிர்பாராத திடீர் ஆதாயங்கள் உங்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைக்கும். உங்கள் தந்தை வழி  மூலம் நீங்கள் பணவரவைப் பெறுவீர்கள். அதே சமயத்தில் சில பொருளாதாரப் பிரச்சினைகளையும்  நீங்கள் சந்திப்பீர்கள். பண வரவு திடீரென அதிகரிக்கும். என்றாலும் வழக்கம் போல கடின முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். வீட்டில் இருக்கும் பெரியவர்களின் ஆலோசனை பணத்தை சரியான முறையில் செலவு செய்யவும் சேமிக்கவும் உதவிகரமாக இருக்கும்.  தேவையற்ற செலவுகளை மேற்கொள்ளாதீர்கள். ஆலயங்களுக்கு நன்கொடை அளிப்பதன் மூலம் உங்கள் அதிர்ஷ்டம் மேலும் பெருகும். 

உங்கள் நிதிநிலை மேம்பட : குரு பூஜை  

வேலை :

பணியிடத்தில் உங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். சிறப்பாகப் பணியாற்றி பணியில் பிரகாசிப்பீர்கள். பணியிடச் சூழல்  உங்கள் மனதிற்கு அமைதி தரும் வகையில் அனுகூலமாக இருக்கும். உங்கள் செயல்திறனை மேம்படுத்துவதில் நீங்கள் கவனம் செலுத்துவீர்கள். உங்கள் தகுதி மற்றும் திறமைக்கு மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். உங்களின் தைரியமான பேச்சி பிறரின் பாராட்டைப் பெறும் என்றாலும் கவனமாகப் பேச வேண்டியது  அவசியம். பணியிடத்தில் திடீர் நிகழ்வுகளை சந்திப்பீர்கள். சில நிகழ்வுகள் அதிர்ச்சி  அளிக்கும். சில நிகழ்வுகள்   மகிழ்ச்சியை அளிக்கும். என்றாலும் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். பணியில் நீங்கள் சில புதிய பொறுப்புக்களை ஏற்றுக் கொள்வீர்கள். 

தொழில் :

நீங்கள் வெளிநாட்டுடன் தொடர்பு கொண்டு தொழில் செய்கிறீர்கள் என்றால்  இந்த மாதம் உங்களுக்கு சிறந்த பலன்கள் கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து புதிய வாடிக்கையாளர்கள் பலரும் உங்களை தொடர்பு கொள்வார்கள். புதிய தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். வீட்டில் இருக்கும் மூத்தவர்களின் ஆதரவு உங்களுக்கு இருக்கும். நீங்கள் எதிர்பாராத திசையில் இருந்து தொழில் வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். உங்களுக்கு பல வாய்ப்புகள் தேடி வரும் என்றாலும் அவற்றுள் சிறந்ததை தேர்ந்தெடுக்க ஒன்றிற்கு இரண்டு முறை யோசித்து அது குறித்த முடிவுகளை எடுப்பது உங்களுக்கு நன்மை பயக்கும். 

தொழில் வல்லுனர்கள் :

இந்த மாதம் அதிக பணிகள் காணப்படும். இதனால் மனதில் பதட்டமும் குழப்பமும் நீங்கள் சந்திக்க நேரும். பணிகள் மலை போலக் குவியும் காரணத்தால் நீங்கள் மனதை ஒருமுகப்படுத்தி திட்டமிட்டு   கவனமாகப் பணியாற்ற வேண்டும். திட்டமிட்டு பணியாற்றுவதன் மூலம் பணிகளை குறித்த நேரத்தில் முடித்து உங்கள் கடின முயற்சிக்கான அங்கீகாரம் பெற இயலும். எனவே ஒரே நேரத்தில் அதிக பணிகளை ஏற்றுக் கொள்வதை தவிருங்கள். உங்கள் தகுதிக்கு மீறி பணிகளை மேற்கொள்ளாதீர்கள். தொழிலைப் பொறுத்தவரை இது சிறந்த மாதம் என்றாலும் அதிகப் பணிகள் காரணமாக மனதில் பதட்டம் ஏற்படும். எனவே நீங்கள் கவனமாகப் பணியாற்ற வேண்டும். உங்கள் பேச்சிலும் கவனம் தேவை. இந்த மாதம் உங்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. 

வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் காண : புதன் பூஜை 

ஆரோக்கியம் :

உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் முயன்றால் சீராக வைத்துக் கொள்ள இயலும். பிறருடன் கருத்து வேறுபாடு ஏற்படும் நிலை வந்தால் விலகி விடுங்கள். இதன் மூலம் தலைவலி, பதட்டம் போன்ற ஆரோக்கிய குறைபாடுகளை  தவிர்க்க இயலும்.  உங்கள் ஆரோக்கியத்திற்காக நீங்கள் சில எதிர்பாராத செலவுகளைக் கூட செய்ய நேரலாம். அதிக மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். சாத்வீக உணவை உண்ணுங்கள். தியானம் மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.  

உங்கள் ஆரோக்கியம் மேம்பட: ருத்ரன் பூஜை 

மாணவர்கள் :

மாணவர்கள் இந்த மாதம் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். மாணவர்களின் மனதில் தன்னம்பிக்கை பெருகும். கவனச் சிதறல் ஏதுமின்றி படிப்பில் கவனம் செலுத்துவார்கள். தன்னம்பிக்கை மற்றும் ஞாபக சக்தி அதிகரிக்கும். வெளிநாடு சென்று கல்வி பயில நினைக்கும் மாணவர்கள்  அதில் வெற்றி காண்பார்கள். ஆராய்ச்சிக் கல்வி படிக்க  நினைக்கும் மாணவர்கள் சிறந்த பலன்களைக் காண்பார்கள். 

கல்வியில் மேன்மை பெற : சனி பூஜை

சுப தேதிகள் :  7, 8, 9, 10, 13, 14, 15, 19, 21, 22, 23, 24, 29, 30, 31.
அசுப தேதிகள் :  1, 2, 3, 4, 5, 6, 12, 16, 17, 18, 20, 25, 26, 27, 28.

banner

Leave a Reply

Submit Comment