Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

மேஷம் ஜூன் மாத ராசி பலன் 2021 | June Matha Mesham Rasi Palan 2021

May 5, 2021 | Total Views : 377
Zoom In Zoom Out Print

மேஷம் ஜூன் மாத பொதுப்பலன் 2021 :

மேஷ ராசி அன்பர்களே! உங்களுக்கு இந்த மாதம் சிறந்த மாதமாக இருக்கும். உங்கள் பேச்சுத்திறன் மேம்படும். அதன் மூலம் நீங்கள் சாதிப்பீர்கள்.  உடன் பிறந்தவர்களுடன் நல்லுறவு மேற்கொள்வீர்கள். நீங்கள் தைரியத்துடன் செயல்படுவீர்கள். உங்கள் தன்னம்பிக்கை வெளிப்படும். என்றாலும் நீங்கள் கவனமுடன் செயல்பட வேண்டியது அவசியம். உங்கள் போட்டியாளர்களை நீங்கள் வெல்வீர்கள். உங்கள் வசதி வாய்ப்புகள் பெருகும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைகளுக்கு  மதிப்பும் மரியாதையும் இருக்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள்  சிறப்பாகப் பணியாற்றுவீர்கள். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவர்கள் மனதை ஒருமுகப்படுத்தி படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். படிப்பில் சிறப்பாக செயல்படுவீர்கள். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.

காதல் / குடும்பம் :

கிரக நிலைகள் சிறப்பாக இருப்பதன் காரணமாக இளம் வயது மேஷ ராசியினரின் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.  திருமணமான தம்பதிகள் இடையே சில கருத்து வேறுபாடுகள் வந்து போகும் என்றாலும் நீங்கள் உறவை மேம்படுத்திக் கொள்வீர்கள்.   உங்கள் வாழ்க்கைத் துணைக்காக நீங்கள் பணம் செலவு செய்வீர்கள்.  நீங்கள் நண்பர்களுடன் சிறந்த நல்லுறவை வளர்த்துக் கொள்வீர்கள்.  உங்கள் அழகும் கவர்ச்சியும் கூடும். நீங்கள் எதிர் பாலினத்தவரைக் கவர்வீர்கள். 

திருமண உறவில் நல்லிணக்கம் காண : சுக்கிரன் பூஜை 

நிதிநிலை :

உங்கள் நிதி நிலை இந்த மாதம் சிறப்பாக இருக்கும். உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளப் போதுமான பணம் உங்களிடம் இருக்கும்.  உங்கள் புத்தியைப் பயன்படுத்தி நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.  ஆடம்பரமான வாழ்க்கை வாழ்வீர்கள். எதிர்பாராத வகையில் செலவுகளை சந்திப்பீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணை மூலம் சில செலவுகளை சந்திப்பீர்கள்.  

உங்கள் நிதிநிலை மேம்பட : குபேரன் பூஜை

வேலை :

இந்த மாதம் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பணி வாழ்க்கை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் தகவல் தொடர்புத் திறனை மேம்படுத்திக் கொள்வார்கள்.  சிறப்பாகப் பணியாற்றி மேலதிகாரிகளின் அங்கீகாரத்தைப் பெறுவார்கள். நீங்கள் கடினமாகவும் படைப்பாற்றலுடனும் பணி புரிவீர்கள்.  பணியின் மூலம் சிறந்த ஆதாயம் பெறுவீர்கள். குடும்பத்தில் ஏற்படும் சில பிரச்சினைகள் காரணமாக ஏற்படும் மனக் குழப்பம் பணியிடத்தில் உங்கள் செயல் திறமையை  பாதிக்கும்.  என்றாலும் எந்தச்  சூழ்நிலை என்றாலும் அதனை திறம்பட சமாளித்து    கவனமுடனும் உற்சாகத்துடனும் பணி புரிவீர்கள். 

தொழில்:

இந்த மாதம் கூட்டுத் தொழில் சிறப்பாக இருக்கும். என்றாலும் நீங்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். தொழில் சம்பந்தமாக எடுக்கும் எந்தவொரு முடிவையும் நீங்கள் நிதானமாக யோசித்து எடுக்க வேண்டும். பணம் சம்பந்தமாக குடும்பத்தில் சில பிரச்சினைகள் எழும். எனவே நீங்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டும். இந்த மாதம் நீங்கள் வெளிநாட்டுத் தொழில் வாய்ப்பைப் பெறுவீர்கள். 

தொழில் வல்லுனர்கள் :

மேஷ ராசி தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் பெயரும் புகழும் பெறுவார்கள். தொழில் நிமித்தமான பயணங்கள் உங்களுக்கு லாபத்தைப் பெற்றுத் தரும். . நீங்கள் தைரியத்துடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும், ஈடுபாட்டுடனும் பணி புரிவீர்கள். கடின உழைப்பின் மூலம் வெற்றி பெறுவீர்கள்.  சிறு சிறு ஏமாற்றங்கள் ஏற்படும். என்றாலும் மனதை தளரவிடாமல் தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள். . 

வேலை மற்றும் தொழிலில் மேம்ன்மை பெற :  குரு பூஜை 

ஆரோக்கியம் :

இந்த மாதம் நீங்கள் சிறந்த ஆரோக்கியத்தைக் காண்பீர்கள்.  அதற்காக ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்டாதீர்கள். கவனம் தேவை. சிறிய உடல் உபாதைகள் என்றாலும் மருத்துவரின் ஆலோசனைகளை ஏற்று மருந்து உட்கொள்ள வேண்டும். தலைவலி, கண்களில் பிரச்சினை போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். 

உங்கள் ஆரோக்கியம் மேம்பட :  சூரியன் பூஜை 

மாணவர்கள் :

மாணவர்கள் இந்த மாதம் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். போட்டித் தேர்வு எழுதுவதற்குத் தயாராகும் மாணவர்கள் சிறந்த பலன்களைக் காண்பார்கள். மாணவர்கள் தைரியமாகவும் விடாமுயற்சியுடனும் செயல்படுவார்கள். சிறப்பாகக் கல்வி பயின்று தங்கள் அறிவை வளர்த்துக் கொள்வார்கள்.  வெளிநாடு சென்று படிக்க நினைக்கும் மாணவர்கள் தங்கள் முயற்சியில் இந்த மாதம் வெற்றி காண்பது கடினம். இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும். கல்வி  உதவித் தொகை பெறுவதில் சில சிரமங்கள் இருக்கும். எனவே நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். 

கல்வியில் மேன்மை பெற : ஹனுமான் பூஜை

சுப தேதிகள்:   2, 3, 4, 7, 8, 9, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 23, 27.
அசுப தேதிகள் :   1, 5, 6, 10, 11, 12, 21, 22, 24, 25, 26, 28, 29, 30, 31.

banner

Leave a Reply

Submit Comment