AstroVed's End of Season Sale: Up to 50% OFF on our Packages, Fire Labs, Monthly Powertimes, Mantra Writing & Sacred Products Order Now

ரிஷபம் ஜூன் மாத ராசி பலன் 2020 | June Matha Rishabam Rasi Palan 2020

May 18, 2020 | Total Views : 960
Zoom In Zoom Out Print

ரிஷபம் ஜூன் மாத பொதுப்பலன்கள்:

ரிஷப ராசி அன்பர்களே! பேச்சிலும் சரி, செயலிலும் சரி, இந்த மாதம் நீங்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில், இவற்றால் மற்றவர்கள் உங்களுக்கு எதிரிகளாக மாறக் கூடும். எனவே, எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. இருப்பினும், நீங்கள் அனைத்து எதிர்ப்புகளையும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். தன வரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்தின் ஆதரவும், உங்களுக்குப் பல வகையிலும் கிடைக்கும். தொழில் துறையில் மிதமான பலன்களை எதிர்பார்க்கலாம். உங்கள் புகழ் மற்றும் கெளரவம் சிறப்பாக இருக்கும். உங்களது நீண்ட நாள் ஆசைகளும், இப்பொழுது நிறைவேறும் வாய்ப்புள்ளது. எனினும், உடல் நல பாதிப்புகள் வந்து நீங்கலாம். இருப்பினும், குழந்தைகள் நன்றாகப் படிப்பதால், நீங்கள் ஆனந்தம் அடைவீர்கள். உங்கள் இந்த மாத வாழ்க்கை பயணத்தை திட்டமிட நீங்கள் இந்த மாத ராசி பலனைக் காண இங்கே கிளிக் செய்யவும்

ரிஷபம் ஜூன் மாத காதல் மற்றும் திருமண வாழ்க்கை:

இந்தக் கால கட்டத்தில், துணையுடன் அன்பான உறவு நிலவும். இது நல்ல முறையிலும் தொடரும். வாழ்க்கைத் துணையுடன் உறவும், சாதாரணமாக இருக்கும். எனினும், குடும்பப் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் நீங்கள் பொறுமையைக் கடைபிடிக்க வேண்டியது அவசியம். 

ரிஷபம் ஜூன் மாத நிதி நிலை:

பொருளாதார நிலை, உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அமையும். மகிழ்ச்சி தருவதாகவும் இருக்கும். உங்கள் வருமானமும், உங்களது அனைத்துப் பொறுப்புகளையும் நிறைவேற்றுவதற்குப் போதுமானதாக இருக்கும். 

ரிஷபம் ஜூன் மாத வேலை:

உங்கள் கடின உழைப்பு, உங்களுக்குத் திருப்தியான மனநிலையை அளிக்கும். உங்கள் பணிகள், உரிய அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும். எனினும், உங்களது சில நடவடிக்கைகளினால், அலுவலகத்தில், எதிரிகளைத் தேடிக் கொள்ளும் வாய்ப்புள்ளது. எனவே, எச்சரிக்கை தேவை. 

ரிஷபம் ஜூன் மாத தொழில்:

வியாபாரத்தைப் பொறுத்த வரையில், இது உங்களுக்கு சாதாரண காலம் எனலாம். எனவே, இப்பொழுது நீங்கள், எல்லா விஷயங்களிலும் சுமாரான பலன்களையே எதிர்பார்க்கலாம். 

ரிஷபம் ஜூன் மாத தொழில் வல்லுநர்கள்:

வேலையில் தாமதங்கள் ஏற்படலாம். எனினும் இவற்றைக் கண்டு, ரிஷப ராசி தொழில் வல்லுநர்களான நீங்கள், நம்பிக்கை இழந்து விட வேண்டாம். பொதுவாக இப்பொழுது உங்கள் நடவடிக்கைகள் சிறப்பாகவே இருக்கும். எனவே, உங்கள் முயற்சிகளைத் தயக்கமின்றித் தொடருங்கள். இதன் மூலம் எதிர்பார்த்த பலன்களை நீங்கள் பெறலாம். 

ரிஷபம் ஜூன் மாத ஆரோக்கியம்:

இந்த மாதம், உடல் நலத்தில் அக்கறை தேவை. உடலுக்குத் தகுந்த ஒய்வு கொடுப்பதன் மூலம், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். தவறாமல் தியானம் செய்வதும், உடல் நலத்தைக் காப்பதில் உதவிகரமாக  இருக்கும். இவை உங்களுக்கு நன்மை பயக்கும்.

ரிஷபம் ஜூன் மாத மாணவர்கள்:

கல்வியைப் பொறுத்தவரை, இது, நல்ல முன்னேற்றமான மாதமாக இருக்கும். இப்பொழுது நீங்கள், அறிவாற்றலுடன் செயல்படுவீர்கள். உங்கள் கடின முயற்சி காரணமாக, படிப்பில் நல்ல நிலையை அடைவீர்கள். இந்த நேரத்தில், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் அறிவுரைகளைக் கேட்டு நடப்பது நல்லது.

சுப தினங்கள் :  1,2,9,10,11,14,15,16,28,29 
அசுப தினங்கள் : 3,4,7,8,17,18,30

பரிகாரம்

ஸ்ரீ லக்ஷ்மீ நரசிம்மர் மற்றும் குல தெய்வ வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.

சுக்கிரன், சனி, குரு, ராகு, கேதுவுக்கு பூஜை, ஹோமம் செய்து வழிபடுதல்.

முதியோர்களுக்கு உணவு, மருத்துவ உதவி செய்தல். பாம்பு புற்றுக்குப் பால் வார்த்தல்.

banner

Leave a Reply

Submit Comment