AstroVed Menu
AstroVed
search
search
x
cart-added The item has been added to your cart.

மேஷம் ஜூன் மாத ராசி பலன் 2020 | June Matha Mesham Rasi Palan 2020

dateMay 18, 2020

மேஷம் ஜூன் மாத பொதுப்பலன்கள்:

மேஷ ராசி அன்பர்களே! உங்களிடம் தன்னம்பிக்கையும், தைரியமும் நிறைந்து காணப்படும் மாதமாக இது அமையும். குடும்பத்தில் நல்ல சந்தோஷம் நிலவும். பணவரவும் மிகச் சிறப்பாக இருக்கும். செய்தொழிலில் நல்ல லாபங்கள் கிடைக்கும். குறிப்பாக, அரசாங்கம் சம்பந்தப்பட்ட காரியங்கள் கைகூடும். பொதுவாக, உங்கள் ஜீவனம் நன்றாக நடைபெறும். எனினும், சில நேரங்களில், உங்களில் சிலருக்கு, சிறிது மனக் குழப்பங்கள் ஏற்படலாம். தகவல் தொடர்பினால் சில பிரச்சினைகள் உருவாகவும் வாய்ப்புள்ளது. தொழில் துறையில் சிலருக்கு  இட மாற்றங்களும் ஏற்படலாம். வேலையில் கவனம் தேவை. நீங்கள் இப்பொழுது பக்தி மார்க்கத்தில் ஈடுபடும் வாய்ப்புள்ளது. சிலர் ஆன்மீகப் பயணங்களும் செல்லக் கூடும்.  உங்கள் இந்த மாத வாழ்க்கை பயணத்தை திட்டமிட நீங்கள் இந்த மாத ராசி பலனைக் காண இங்கே கிளிக் செய்யவும்.

மேஷம் ஜூன் மாத காதல் மற்றும் திருமண வாழ்க்கை 

காதலுக்கு இது நல்ல நேரம் எனலாம். குடும்ப வாழ்க்கையில், கணவன், மனைவிக்குள் அன்பும், பாசமும் நிறைந்து காணப்படும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல புரிதல் ஏற்பட்டு, தம்பதிகள் இணக்கமான வாழ்க்கையையும் அனுபவிப்பீர்கள். எனினும், திருமணம் தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை.  

மேஷம் ஜூன் மாத நிதி நிலை

உங்கள் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வாழ்க்கைத் துணையின் மூலமாகவும் தனவரவு ஏற்படும் வாய்ப்புள்ளது. குறிப்பாக, வண்டி, வாசனை திரவியங்கள், அழகு சாதனப் பொருட்கள் போன்ற தொழில்கள் மூலமாக, நீங்கள் அதிக லாபம் பெறலாம். 

மேஷம் ஜூன் மாத வேலை

பணி நிலவரம் வழக்கமாக இருக்கும். எனினும், வேலையில் நீங்கள், சிறந்த முன்னேற்றத்தை எதிர்பாக்கலாம். உங்கள் நேர்மையும், அர்ப்பணிப்பு உணர்வும் மேலதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறும். சிலர், வேலை தொடர்பான குறுகிய காலப் பயணங்களை மேற்கொள்ள வேண்டி வரும்.  

மேஷம் ஜூன் மாத தொழில் 

பொதுவாக, இந்த மாதத்தில், உங்கள் தொழில் சிறப்பாக நடைபெறும். எனினும், இடைஇடையே, சிறு பிரச்சனைகள் வந்து விலகும் வாய்ப்புள்ளது. வயது முதிர்ந்தவர்களுக்கு சனிக் கிழமைகளில் அன்னதானம் கொடுப்பது, உங்கள் நிதி நிலையை மேம்படுத்தும்.  

மேஷம் ஜூன் மாத தொழில் வல்லுநர்கள் 

மேஷ ராசி தொழில் வல்லுநர்களுக்கு, இது முன்னேற்றம் தரும் காலமாக இருக்கும். உங்கள் திறமையால், தொழில் ரீதியான அனைத்துப் பணிகளையும், நீங்கள் திறம்பட செய்து முடிப்பீர்கள். வேலையில் நீங்கள் காட்டும் கவனமும், அர்ப்பணிப்பு உணர்வும், பாராட்டுதல்களைப் பெற்றுத் தரும். 

மேஷம் ஜூன் மாத ஆரோக்கியம் 

உங்களுக்கு ஏற்கனவே நோய் பாதிப்பு ஏதாவது இருந்தாலும், இந்த மாதம் உடல் நலம் பெறும் வாய்ப்புள்ளது. பச்சைக் காய்கறிகள், பழங்கள் மற்றும் உங்கள் உடலுக்கு ஏற்ற சத்தான உணவுகள் போன்றவற்றை அதிகம் உட்கொள்ளுங்கள். இவை உங்களுக்கு, நல்ல உற்சாகத்தையும், ஆரோக்கியத்தையும் அளிக்கும். 

மேஷம் ஜூன் மாத மாணவர்கள் 

இந்த மாதம் மாணவர்களுக்கு படிப்பில் அதிக கவனம் தேவை. தாங்கள் படிப்பதை சிலர் மறந்து விடக்கூடும். உங்கள் உடல் நிலையிலும் எச்சரிக்கை தேவை. எனினும், இந்தக் காலகட்டத்தில், பொதுவாக உங்கள் படிப்பு சீரான போக்கில் செல்லும். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் அறிவுரைகளைக் கேட்டு நடப்பது நன்மை தரும்.

சுப தினங்கள் :  7,8,12,13,26,27
அசுப தினங்கள் : 1,2,5,6,14,15,16,28,29

பரிகாரம்
சிவபெருமான் மற்றும் கால பைரவர் வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
சுக்கிரன், சனி, குரு, ராகு, கேதுவுக்கு ஹோமம், பூஜை செய்து வழிபடுதல்.
பறவைகள் மற்றும் நாய்களுக்கு உணவும், நீரும் அளித்தல். பாம்புப் புற்றுக்குப் பால் வார்த்தல்.
 


banner

Leave a Reply