AstroVed Menu
AstroVed
search
search

மிதுனம் ஜூன் மாத ராசி பலன் 2020 | June Matha Mithunam Rasi Palan 2020

dateMay 18, 2020

மிதுனம் ஜூன் மாத பொதுப்பலன்கள் :

மிதுன ராசி அன்பர்களே! இந்த மாதம், உங்கள் தொழிலிலும் சரி, நீங்கள் மேற்கொள்ளும் செயல்களிலும் சரி, ஒரு தெளிவற்ற நிலை நிலவக் கூடும். பலவித குழப்பங்கள் ஏற்படக் கூடும். எனவே, உங்கள் உடல் நிலையிலும், மன நிலையிலும் அக்கறை தேவை. எந்த முடிவெடுப்பதற்கு முன்னும், நன்கு சிந்தித்துச் செயல்படுவது நல்லது. பணம் தொடர்பான விவகாரங்களில் பிறரிடம் மனகசப்பு ஏற்படலாம். செலவுகளும் அதிகரிக்கக் கூடும். குறிப்பாக இவை, குழந்தைகளினால் ஏற்படக்கூடும். நீங்கள் பலவீனத்தால் பாதிக்கப்படலாம். எனவே, உங்கள் உடல் நலனிலும் சிறப்பு கவனமும், கட்டுப்பாடும் தேவைப்படலாம். எதிரிகளாலும் தொல்லை ஏற்படக் கூடும். இருப்பினும், இவற்றை எல்லாம் நீங்கள் திறமையாகவே சமாளிப்பீர்கள். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களின் தவறான அபிப்ராயங்கள், உங்கள் முயற்சியால் விலகும். உங்கள் இந்த மாத வாழ்க்கை பயணத்தை திட்டமிட நீங்கள் இந்த மாத ராசி பலனைக் காண இங்கே கிளிக் செய்யவும்.

மிதுனம் ஜூன் மாத காதல் மற்றும் திருமண வாழ்க்கை 

காதலைப் பொறுத்தவரை இது சுமாரான காலம் எனலாம். இருப்பினும், சிலரது வாழ்க்கையில், புதிய காதல் உறவுகள் மலரும் வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கையில், உங்கள் வாழ்க்கைத் துணையோடு உறவுகளில்  பாதிப்பு ஏற்படலாம். எனினும், உங்கள் சமூகத் தொடர்புகள் சிறப்பாக இருக்கும்.  சிலர், சிறு பயணங்களை மேற்கொள்ளலாம். . 

மிதுனம் ஜூன் மாத நிதி நிலை 

பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உங்கள் பணத் தேவைகள் அனைத்தும் நல்ல முறையில் நிறைவேறும். நண்பர்களுடனான பொழுது போக்குகளுக்குப் பணம் செலவழிப்பீர்கள். தேவைக்கேற்ப, சில உறவினர்களுக்கு நீங்கள் நிதியுதவியும் வழங்கக் கூடும். 

மிதுனம் ஜூன் மாத வேலை 

பணித் துறையில் இது சாதாரண காலமாக இருக்கும். எனினும், வேலையில் நீங்கள் சில முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். புதிய தொழில் நுட்பங்களால் நல்ல அனுபவத்தைப் பெறும் வாய்ப்பும் உள்ளது.  

மிதுனம் ஜூன் மாத தொழில் 

மிதுன ராசி தொழில் முனைவோர், சில பணிகளைத் தாங்களே முன் நின்று பொறுப்பு ஏற்று நடத்தினால் மட்டுமே, தொழிலில் இப்பொழுது முன்னேற்றம் காண முடியும். இந்தக் காலகட்டத்தில், சில நடவடிக்கைகளையும் நீங்கள் ஒத்திப்போட வேண்டியிருக்கலாம். தொழில் ஒப்பந்தங்கள் மூலம், நல்ல பலன்களைக் காண்பதும் கடினமாக இருக்கலாம். எனவே, பொறுமை தேவை.

மிதுனம் ஜூன் மாத தொழில் வல்லுநர்

இந்த மாதம், பொதுவாக உங்கள் நடவடிக்கைகள் சிறப்பாக இருக்கும். எனினும், வேலையில் சில தாமதங்கள் ஏற்படலாம். ஆனால், அவற்றைக் கண்டு நீங்கள் நம்பிக்கை இழந்து விடாமல், உங்கள் முயற்சிகளைத் தொடருங்கள். இதன் மூலம், எதிர்பார்த்த பலன்களை நீங்கள் பெற இயலும். 

மிதுனம் ஜூன் மாத ஆரோக்கியம் 

இந்த மாதம் உங்கள் உடல் நலனில் அக்கறை தேவை. வாதம் சம்பந்தப்பட்ட நோய்களால் நீங்கள் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளதால், உங்கள் ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்ட வேண்டாம்.  

மிதுனம் ஜூன் மாத மாணவர்கள் 

மாணவர்கள், படிப்பதற்கும், சிறந்த கல்வி அனுபவத்தைப் பெறுவதற்கும் இது சரியான நேரம். உங்களது திறந்த மனம், உங்கள் தனிப்பட்ட திறமைகளையும், நற்பெயரையும் மேம்படுத்த உதவும். உங்கள் கல்வித் திறனால் பெற்றோர்களும் மகிழ்ச்சியடைவார்கள்.

சுப தினங்கள் :  3,4,12,13,17,18,30
அசுப தினங்கள் :    5,6,9,10,11,19,20,21 

பரிகாரம்

ஸ்ரீ நரசிம்மர் மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேயர் வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
புதன், சனி, குரு, ராகு, கேதுவுக்கு பூஜை, ஹோமம் செய்து வழிபடுதல்.
ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுதல், முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி செய்தல், அன்னதானம் அளித்தல்.


banner

Leave a Reply