Arupadai Veedu Muruga Program 2024: Invoke Muruga at His 6 Powerful Abodes During the 6th Moon Powertime Days JOIN NOW

மகரம் ஜூன் மாத ராசி பலன் 2021 | June Matha Magaram Rasi Palan 2021

May 7, 2021 | Total Views : 527
Zoom In Zoom Out Print

மகரம் ஜூன் மாத பொதுப்பலன் 2021 :  

மகர ராசி அன்பர்களே! இந்த மாதம் நீங்கள் சிறந்த பலன்களை எதிர்பார்க்கலாம் என்றாலும் சில விஷயங்களில் மந்த நிலை காரணமாக உங்கள் முன்னேற்றம் தடைபடும். எனவே  முன்னேறுவதற்கான வாய்ப்பு   கிடைக்கும் போது அதனை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். குடும்ப வாழ்க்கை ஓரளவு சிறப்பாக இருக்கும். நீங்கள் எதிர் பாராத வகையில் செலவுகளை சந்திப்பீர்கள். எனவே பண விஷயங்களில் கட்டுப்பாடு அவசியம். பணியிடத்தில் நீங்கள் சில பிரச்சினைகளை சந்திக்க நேரும். நீங்கள் கடினமாக உழைப்பீர்கள். சக பணியாளர்கள் உங்களை போட்டியாளராகக் கருதுவார்கள்.  என்றாலும் உங்கள் கடின உழைப்பின் மூலம் நீங்கள் அவர்களை வெல்வீர்கள். மனப் பதட்டம் காரணமாக உடல் நிலை பாதிக்க வாய்ப்புண்டு என்பதால் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.  மாணவர்கள் சிறந்த முறையில் தேர்ச்சி பெற கவனம் செலுத்திப் படிக்க வேண்டும். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.

காதல் / குடும்பம் :

இளம் வயது மகர ராசி அன்பர்கள் தங்கள் காதல் வாழ்க்கையில் பல சவால்களை சந்திக்க நேரும். திருமணமான தம்பதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் காரணமாக சில குழப்பங்கள் ஏற்படும். பரஸ்பரம் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதும் விட்டுக் கொடுத்து செல்வதும் நன்மை பயக்கும்.  சூழ்நிலையை அனுசரித்து வருவதை ஏற்றுக் கொண்டு வாழ கற்றுக் கொள்ள வேண்டும். நீங்கள் கடின வார்த்தைகளை பிரயோகிக்க வாய்ப்பு உள்ளது. இது குடும்ப உறுப்பினர்களின் மனதில் ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தும்.  எனவே உங்கள் வார்த்தைகளில் கவனம் தேவை. 

திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண : சுக்கிரன் பூஜை 

நிதிநிலை :

பண விஷயத்தில் நீங்கள் சில நெருக்கடியான தருணங்களை சந்திக்க நேரும். திடீர் செலவுகள் காரணமாக பண நெருக்கடியை சந்திக்க நேரும். உங்கள் வாழ்க்கைத் துணை குடும்பத்தார் மூலம் நீங்கள் பண விஷயங்களில் சில பிரச்சினைகளை சந்திக்க நேரும். வருமானத்தில் இருக்கும் ஏற்ற இறக்க நிலை காரணமாக மனதில் பதட்டம் ஏற்படும். பணப் புழக்கம் சாதாரணமாக இருக்கும். இந்த மாதம் பிறரிடம் கடன் வாங்காதீர்கள். செலவுகளை கவனமுடன் மேற்கொள்ளுங்கள். 

உங்கள் நிதிநிலை மேம்பட : அங்காரகன் பூஜை 

வேலை :

உத்தியோகத்தில் இருக்கும் மகர ராசி அன்பர்கள் இந்த மாதம் நன்மை, தீமை இரண்டும் கலந்த பலன்களை அனுபவிப்பார்கள். உங்கள் முன்னேற்றத்தில் சில தடைகளையும், தாமதங்களையும் நீங்கள் சந்திக்க நேரும். எனவே பொறுமை மிகவும் அவசியம்.  சக பணியாளர்களுடன் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள். தவறான புரிந்துணர்விற்கு இது வழி வகுக்கும். பணியிடத்தில் போட்டிகள் காணப்படும். உங்களுக்கு எதிராக சிலர் செயல்படுவார்கள். கவனமாகச் செயல்பட்டால் நீங்கள் எளிதில் அவர்களை வெற்றி கொள்வீர்கள்.  உங்கள் மேலதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். 

தொழில் :

இந்த மாதம் கூட்டுத்தொழில் சிறப்பாக இருக்கும். என்றாலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். தொழில் குறித்த முடிவுகளில் பொறுமை தேவை. கூட்டாளியுடன்  சில தேவையற்ற கருத்து வேறுபாடு மற்றும் தவறான  புரிந்துணர்வு இருக்கும்.  உங்கள் வார்த்தைகளில் கவனம் தேவை.  நீங்கள் புதிதாக கூட்டுத் தொழில் செய்வதற்கான முயற்சிகளை இந்த மாதம் மேற்கொண்டால் உங்களுக்கு அது அனுகூலமாக இருக்கும். புதிய முதலீடுகள் எதையும் இந்த மாதம் மேற்கொள்ளாதீர்கள்.  

தொழில் வல்லுனர்கள் :

மகர ராசி தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் எந்தவொரு செயலையும் ஆராய்ந்து மேற்கொள்வீர்கள். உங்கள் ஆராய்ச்சித் திறனுக்கான பாராட்டை  உங்கள் மேலதிகாரிகளிடம் இருந்து பெறுவீர்கள். அங்கீகாரத்தையும் பெறுவீர்கள்.  அதன் மூலம் ஊதிய உயர்வு பதவி உயர்வு போன்றவை கிட்டும். என்றாலும் இதில் சில தாமதங்கள் ஏற்படும். உங்கள் ஆராய்ச்சி மனப்பான்மை உங்கள் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். 

வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் காண : சனி பூஜை 

ஆரோக்கியம் :

உங்கள் ஆரோக்கியம் இந்த மாதம் சுமாராக இருக்கும். தலைவலி போன்ற சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். மனதில் ஏற்படும் அதிக பதட்டம் காரணமாக உங்கள் ஆரோக்கியம் பாதிக்கும். எனவே உடற்பயிற்சி மற்றும் தியானம் மேற்கொள்ளுங்கள். சத்தான ஆகாரம் உட்கொள்ளுங்கள். இறை வழிபாடு உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : குரு பூஜை 

மாணவர்கள் :

மாணவர்களுக்கு இது சிறந்த மாதம் என்றாலும் அவர்கள் முயற்சியும் மிகவும் அவசியம். விரும்பும் பாடத்தில் சேர்க்கை பெறவும், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறவும் கடினமாக உழைத்து படிக்க வேண்டும். சில சமயங்களில் மாணவர்களின் தன்னம்பிக்கை குறைய வாய்ப்பு உண்டு. எனவே உங்கள் மனதில் தளர்வும் சோர்வும் வராமல் காத்துக் கொள்ளுங்கள். உங்களை உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள். ஆசிரியர், பெற்றோர், மற்றும் சக மாணவர்களின் ஆதரவு உங்களுக்கு கை கொடுக்கும். 

கல்வியில் முன்னேற்றம் காண : அங்காரகன் பூஜை 

சுப தேதிகள்:  1, 2, 3, 4, 7, 10, 11, 13, 17, 18, 23, 24, 25, 21, 28, 29, 30.
அசுப தேதிகள் :  5, 6, 8, 9, 12, 14, 15, 16, 19, 20, 22, 26, 27, 31.

banner

Leave a Reply

Submit Comment