Arupadai Veedu Muruga Program 2024: Invoke Muruga at His 6 Powerful Abodes During the 6th Moon Powertime Days JOIN NOW

கும்பம் ஜூன் மாத ராசி பலன் 2021 | June Matha Kumbam Rasi Palan 2021

May 7, 2021 | Total Views : 680
Zoom In Zoom Out Print

கும்பம் ஜூன் மாத பொதுப்பலன் 2021:

கும்ப ராசி அன்பர்களே! இந்த மாதம் நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உங்கள் தன்னம்பிக்கை மூலம் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள்.   இனிப்பான செய்திகளை நீங்கள் எதிர்பார்க்கலாம். குடும்பம், குழந்தை, தொழில் என  எல்லாவற்றிலும் சுப நிகழ்வுகளும் சுப செய்திகளையும் நீங்கள் எதிர் பார்க்கலாம்.  நீங்கள் எதிரிகளைக் கூட நண்பர்களாக ஆக்கிக் கொள்வீர்கள். உங்கள் பணியில் சில தாமதங்களை நீங்கள் எதிர்கொள்வீர்கள். பணியிடத்தில் போட்டிகள் காணப்படும். அவற்றை எளிதில் சமாளித்து முன்னேறுவீர்கள். நீங்கள் தனிமையை நாடுவீர்கள். உங்கள் மனதில் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவு உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். மொத்தத்தில் இந்த மாதம் உங்களுக்கு எல்லா வகையிலும் நல்ல பலன் தரும் மாதமாக இருக்கும். குறிப்பாக   பொருளாதார ரீதியாக சிறந்த பலன் தரும் மாதமாக இந்த மாதம் இருக்கும். என்றாலும் நீங்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டியது அவசியம். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவர்கள் ஊக்கத்துடன் செயல்பட வேண்டும். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.

காதல் / குடும்பம் :

கும்ப ராசி இளவயது காதலர்களிடையே அன்பு அதிகரிக்கும். திருமணத்திற்குக் காத்திருப்பவர்களுக்கு, திருமணம் நிச்சயமாகும். திருமணமான தம்பதிகள்  நேரம் ஒதுக்கி பரஸ்பரம் அன்பை பரிமாறிக் கொள்வீர்கள். அக்கம் பக்கத்தினருடன் நல்லுறவு காணப்படும். நீங்கள் இனிமையான வார்த்தைகளைப் பேசுவீர்கள். தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கை இரண்டையும் ஒன்றுடன் ஒன்று கலக்காமல்  சமநிலை வகுத்துக்  கொள்ளுங்கள். 

திருமண உறவில் நல்லிணக்கம் காண : சுக்கிரன் பூஜை 

நிதிநிலை :

உங்கள் நிதிநிலை சீராக இருக்கும். அதிக பணத்தை ஈட்டுவீர்கள். அதன் காரணமாக கையில் பணப்ப்புழக்கம் அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்ததை விட உங்கள் நிதிநிலை சிறப்பாக இருக்கும். அது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். இதற்கு முன்பு நீங்கள் வாங்கிய கடனை இந்த மாதம் அடைப்பீர்கள். உங்கள் விருப்பங்களை பூர்த்தி செய்து கொள்வீர்கள். உங்கள் லட்சியங்களை அடைவீர்கள். முதலீடுகள் குறித்து நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.  முதலீடு குறித்த முடிவுகளை எடுப்பதற்கு முன்பு  உங்கள் வாழ்க்கைத் துணையுடன் ஆலோசியுங்கள்.  

உங்கள் நிதிநிலை மேம்பட : சூரியன் பூஜை 

வேலை :

பணியிடத்தில் நீங்கள் தைரியத்துடனும் உற்சாகத்துடனும் , நல்ல பேச்சுத் திறனுடனும் செயல்பட்டு உங்கள் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துவீர்கள். உங்களின் இந்த முயற்சிகளுக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.  பணியிடத்தில் சில போட்டிகளை நீங்கள் சந்திப்பீர்கள் என்றாலும் அதனை எளிதில் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் சில தடைகள் மற்றும் தாமதங்களை சந்தித்த பின் முன்னேற்றம் காண்பீர்கள்.  பணி நிமித்தமான பயணங்கள் தேவையற்ற அலைச்சல்களாக இருக்கும். உங்களுக்கு அளிக்கப்பட்ட பணிகளை நீங்கள் குறிப்பிட்ட நேரத்தில் முடிப்பீர்கள். பணியிடத்தில் நீங்கள் நல்ல பெயரை எடுப்பீர்கள். 

தொழில் :

கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப் பெற்று இந்த மாதம் சிறப்பான பலன் தரும் மாதமாக இருக்கும்.வியாபாரம் நடத்துவதில் சிரமங்கள் குறைவாக இருக்கும். உங்கள் வியாபாரத் நடவடிக்கைகள் சாதகமான பலன்களை பெற்றுத் தரும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் தங்கள் பேச்சுத் திறமை மூலம் கூட்டாளிகளை தங்கள் பக்கம் கவர்ந்து தொழிலை  வெற்றிகரமாக நடத்துவார்கள். 

வியாபாரம்:

தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் இந்த மாதம் தொழில் நிமித்தமாக வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும்.  இந்த மாதம் நீங்கள் மிகவும் பொறுமையுடன் செயல்படுவீர்கள். உங்கள் அறிவுத் திறமைக்கு வாடிக்கையாளர்களின் பாராட்டு கிடைக்கும். நீங்கள் உங்கள் திறமை, அறிவுக்கூர்மை மற்றும் பேச்சுத் திறன் காரணமாக  பிறருக்கு ஆலோசனை கூறுவீர்கள். அதற்கான பாராட்டையும் பெறுவீர்கள். 

வேலை மற்றும் தொழிலில் மேம்பட : சுக்கிரன் பூஜை 

ஆரோக்கியம் :

உங்கள் மனநிலை மற்றும் உடல் நிலை ஆரோக்கியமாக இருக்கக் காண்பீர்கள். அதிக பணிச்சுமைகள் காரணமாக மன அழுத்தம் ஏற்பட வாய்புள்ளது. இதனால் தலைவலி மற்றும் வாய்வுப் பிரச்சிணைகளை நீங்கள் சந்திக்க நேரும். எனவே உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்கள் உணவில் கவனம் தேவை. முறையான ஒய்வு மற்றும் எளிய உடற்பயிற்சி உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.  

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : அங்காரகன் பூஜை 

மாணவர்கள் :

மாணவர்கள் இந்த மாதம் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். வெளிநாடு சென்று படிக்க நினைக்கும் மாணவர்கள் தங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பார்கள். ஆசிரியர்கள் மற்றும் வழிகாட்டிகளின் ஆலோசனை உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். படிப்பு முடித்த மாணவர்கள் தங்கள் திறமை மூலம் வேலை கிடைக்கப் பெறுவார்கள். 

கல்வியில் மேம்பட : குரு பூஜை

சுப தேதிகள் :  1, 2, 3, 4, 5, 12, 13, 14, 15, 16, 17, 18, 27, 28, 29, 30, 31.
அசுப தேதிகள் :  7, 6, 8, 9, 10, 11, 19, 20, 21, 22, 23, 24, 25, 26.

banner

Leave a Reply

Submit Comment