மீனம் ஜூன் மாத ராசி பலன் 2021 | June Matha Meenam Rasi Palan 2021

மீனம் ஜூன் மாத பொதுப்பலன் 2021 :
மீன ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் சவால்கள் நிறைந்த மாதமாக இருக்கும். அதே சமயத்தில் சில நன்மைகளும் நடக்கும். தங்கள் பேச்சுத் திறமை மூலம் குடும்பச் சூழலை குதூகலமாக வைத்திருக்க முயற்சிகளை மேற்கொள்வார்கள். அன்பாகவும் புத்திசாலித்தனமாகவும் குடும்பத்தில் நடந்து கொள்வதன் மூலம் குடும்ப சூழலை இனிமையாக்கிக் கொள்ளலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளுடன் நல்லுறவு பராமரிக்க அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். நீடித்த நிலையான முன்னேற்றம் காண வாய்ப்பு உண்டு. உத்தியோகம் மற்றும் வேலை நிமித்தமாக வெளியிடங்களுக்கு பயணம் மேற்கொள்ள நேரும். குடும்பம், வேலை, கல்வி என அனைத்திலும் சவால்களை சமாளித்து முன்னேற வேண்டிய சுமாரான பலன்கள் கிடக்கும் மாதமாக இந்த மாதம் இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறிய உடல் உபாதைகள் வந்து போகும் எனவே உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.
காதல் / குடும்பம் :
சென்ற மாதத்தை விட இந்த மாதம் உங்கள் காதல் மற்றும் குடும்ப உறவில் சவால்கள் நிறைந்து இருக்கும். குடும்பத்திற்கென முக்கியத்துவம் அளிக்காவிடில் வாக்கு வாதங்களும் சண்டை சச்சரவுகளும் ஏற்படும். கணவன் மனைவி உறவில் ஒற்றுமை நிலைக்க முயற்சிக்க வேண்டியிருக்கும். குடும்பத்துடன் மனம் விட்டுப் பேச நேரம் ஒதுக்குங்கள். இதனால் உறவில் ஒற்றுமை ஏற்படுத்த இயலும். அன்பும் அனுசரணையும் குடும்ப உறவை மேம்படுத்தும்.
திருமண உறவில் நல்லிணக்கம் காண : சுக்கிரன் பூஜை
நிதிநிலை :
உங்கள் சேமிப்பை விட செலவு அதிகமாக இருக்கும். யோசிக்காமல் முதலீடுகளை மேற்கொள்ளாதீர்கள். பணப்புழக்கத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். இந்த மாதம் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களிடம் கடன் வாங்க வாய்ப்பு உண்டு. எனவே இருப்பதைக் கொண்டு செலவுகளை சமாளிக்க முயற்சி மேற்கொள்ளுங்கள்.
உங்கள் நிதிநிலை மேம்பட : அங்காரகன் பூஜை
வேலை :
இந்த மாதம் உங்கள் உத்தியோகத்தில் முன்னேற்றம் இருக்கும். என்றாலும் அது சிறிய அளவில் தான் இருக்கும். வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு இந்த மாதம் வேலைவாய்ப்பு கிட்டும். உங்கள் நிர்வாகத் திறமை சிறப்பாக இருக்கும். சக பணியாளர்களுடன் சில மோதல்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே கவனமாக இருக்க வேண்டும். உத்தியோகம் அல்லது வேலை நிமித்தமாக நீங்கள் வெளியிடங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கும். இதனால் நீங்கள் குடும்பத்தை விட்டுப் பிரிய நேரும். அது உங்களுக்கு சற்று வருத்தத்தை அளிக்கும்.
தொழில் :
நீங்கள் முயற்சிகளை மேற்கொண்டால் உங்கள் தொழிலில் லாபம் காணலாம். புதிய தொழில் குறித்த ஆலோசனைகளை நீங்கள் மேற்கொள்வீர்கள். கூட்டுத் தொழிலில் ஏற்ற இறக்க நிலை இருக்கும். பணப்புழக்கம் ஓரளவு இருக்கும். வெளிநாட்டு தொடர்புடைய தொழில் செய்பவர்கள் இந்த மாதம் லாபம் காண்பார்கள். தொழிலில் புதுமையை புகுத்துவதன் மூலம் நீங்கள் சிறப்பாக தொழிலை மேற்கொள்ள இயலும்.
தொழில் வல்லுனர்கள் :
உங்கள் தொழிலில் பொறுப்புக்கள் கூடும். நீங்கள் பெயரும் புகழும் பெறுவீர்கள். மேலதிகாரிகள் உங்களை பாராட்டுவார்கள். நீங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். நீங்கள் அறிவுக் கூர்மையுடன் செயல்பட்டு தொழிலில் ஏற்படும் பிரச்சினைகளை புரிந்து கொண்டு அவற்றை தீர்த்து வைப்பீர்கள்.
வேலை மற்றும் தொழிலில் மேம்பட : சுக்கிரன் பூஜை
ஆரோக்கியம் :
மனதில் ஏற்படும் பதட்டநிலை உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் சில சவால்களை நீங்கள் சந்திக்க நேரும். சிறிய உடல் உபாதைகள் இருந்தாலும் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளுங்கள். சாத்வீக உணவை உண்ணுங்கள் தியானம் மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உங்கள் உடல் ஆரோக்கியத்தை காத்துக் கொள்ள இயலும்.
உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சூரியன் பூஜை
மாணவர்கள் :
மாணவர்களுக்கு இந்த மாதம் அனுகூலமான மாதமாக இருக்கும். மாணவர்கள் கடினமாக உழைத்துப் படிப்பதன் மூலம் வெற்றி காண இயலும். வெளிநாடு சென்று படிக்க நினைக்கும் மாணவர்கள் இந்த மாதம் தங்கள் எண்ணம் நிறைவேறக் காண்பார்கள். தாங்கள் விரும்பும் கல்லூரியில் சேர்க்கை கிடைக்கப் பெறுவார்கள். மாணவர்கள் போட்டியாளர்களை சந்திக்க நேரும். அதில் வெற்றியும் பெறுவார்கள். தங்கள் விருப்பங்கள் யாவும் நிறைவேறக் காண்பார்கள்.
கல்வியில் மேன்மை பெற : குரு பூஜை
சுப தேதிகள்: 5, 6, 10, 11, 12, 13, 21, 22, 26, 27, 28, 29, 30, 31.
அசுப தேதிகள்: 2, 3, 7, 8, 9, 14, 15, 16, 17, 18, 19, 20, 23, 24, 25.
