Arupadai Veedu Muruga Program 2024: Invoke Muruga at His 6 Powerful Abodes During the 6th Moon Powertime Days JOIN NOW

மீனம் ஜூலை மாத ராசி பலன் 2021 | July Matha Meenam Rasi Palan 2021

June 3, 2021 | Total Views : 670
Zoom In Zoom Out Print

மீனம் ஜூலை மாத பொதுப்பலன் 2021 :

மீன ராசி அன்பர்களே!  இந்த மாதம் உங்கள் குடும்ப உறவு சிறப்பாக இருக்கும். மேலும்  தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் நல்லுறவை பராமரிப்பார்கள். கணவன் மனைவி  இடையே நெருக்கம் அதிகரிக்கும். நீங்கள் பரஸ்பரம் அனுசரணை மற்றும் கருத்தொருமித்து நல்லிணக்க உறவை பராமரிப்பார்கள். பணியில் இருக்கும் மீன ராசி அன்பர்கள் பணியில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். கடின உழைப்பை மேற்கொள்வீர்கள். உங்களுக்கு அளிக்கப்படும் பணிகளை உரிய நேரத்தில் முடித்து அளிப்பீர்கள். உங்கள் சிறந்த செயல்திறன் மூலம் வெற்றியும் காண்பீர்கள். உங்களின் சிறப்பான செயலாற்றல் பிறருக்கு ஊக்கத்தை அளிக்கும். சிறு உடல் நலக் குறைவு ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனைகளை மேற்கொள்வது நல்லது. மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.

மீனம் ஜூலை மாத காதல் / குடும்ப உறவு :

கணவன் மனைவி  இடையே கருத்து ஒற்றுமை இருக்கும். பரஸ்பரம் விட்டுக்கொடுத்து நல்லுறவு பராமரிப்பீர்கள். இதனால் குடும்பத்தில் அமைதி நிலவும். இல்லத்தில் சுப விசேஷங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. அதில் கலந்து கொண்டு நீங்கள் மகிழ்ச்சி காணலாம். அதன் மூலம் நீங்கள் புதிய நண்பர்களைப் பெற இயலும். நண்பர்கள் மூலம் பண உதவி பெறும் வாய்ப்பும் உள்ளது.  

திருமண உறவில் நல்லிணக்கம் காண : சுக்கிரன் பூஜை 

மீனம் ஜூலை மாத நிதிநிலை :

உங்கள் நிதிநிலை இந்த மாதம் திருப்திகரமாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். கையில் பணம் சரளமாகப் புழங்கும். இந்த மாதம் உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள ஏதுவாக உங்கள் நிதிநிலை இருக்கும். நீங்கள் சுய தொழில் மேற்கொள்பவர் என்றால்  உங்கள் நிதிநிலையில் சற்று ஏற்ற இறக்க நிலை இருக்கும். பங்குச் சந்தை மூலம் வருமானம் பெருகும். ஊக வணிகம் லாபம் அளிக்கும்.  வெளிநாட்டு மூலதனம் மூலம் லாபங்கள் கிட்டும்.  

உங்கள் நிதிநிலை மேம்பட :துர்கா பூஜை 

மீனம் ஜூலை மாத வேலை :

பணியில் இருப்பவர்களுக்கு வேலைப் பளு அதிகம் இருக்கும். என்றாலும் நீங்கள் சமாளித்து  சிறப்பாக பணியாற்றி முடிப்பீர்கள். புதிய பணிகள் மற்றும் பொறுப்புகள் உங்களுக்கு வழங்கப்படும். பணியிடத்தில் உங்கள் செயல்திறன் பிறர் பாராட்டும் வகையில் இருக்கும். பணியிடச் சூழல் உங்களுக்கு சாதகமாக இருக்கும். 

மீனம் ஜூலை மாத தொழில் :  

நீங்கள் தொழில் அல்லது வியாபாரம் செய்பவர் என்றால் இந்த மாதம் அதிக அளவில் வாடிக்கையாளர்கள் கிடைக்கப் பெறுவார்கள். குறிப்பிட்ட ஒரு தொழிலை நம்பி அதில் மட்டுமே பணத்தை முதலீடு செய்யாதீர்கள். இரண்டு மூன்று துறைகளில் முதலீடுகளை செலுத்துங்கள். இப்படி செய்வதன் மூலம் உங்கள் வியாபாரமும் பெருகும். பணமும் பத்திரமாக இருக்கும். அயல் நாட்டுத்  தொழில் செய்பவர்களுக்கு கணிசமான லாபங்கள் கிட்டும். 

மீனம் ஜூலை மாத தொழில் வல்லுனர்கள் :  

மீன ராசி தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் உங்கள் தொழில் சம்பந்தமான நுணுக்கங்களை கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டுவீர்கள். அதன் மூலம் புதிய வாடிக்கையாளர்கள் மற்றும் பழைய வாடிக்கையளர்களின் ஆதரவு மற்றும் அங்கீகாரத்தைப் பெறுவீர்கள்.  வருமானம் மற்றும் பண வரவு அதிகரிக்கும். பொருளாதாரநிலை கணிசமாக உயரும்.

வேலை மற்றும் தொழில் மேம்பட :சூரியன் பூஜை 

மீனம் ஜூலை மாத ஆரோக்கியம் :

வேலைப் பளு காரணமாக உங்கள் உடல் நலத்தில் சில சிறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. என்றாலும் இந்த மாதம் உங்களுக்கு பெரிய அளவிலான ஆரோக்கிய பாதிப்புகள் ஏதும் இருக்காது. அதிக பணிகள் காரணமாக மனதில் பதட்டம் ஏற்படும் ஆனால் உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆதரவு உங்களுக்கு பக்க பலமாக இருக்கும். தியானம், யோகா மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உங்கள் உடல் ஆரோக்கியத்தை நீங்கள் காத்துக் கொள்ளலாம். 

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : அங்காரகன் பூஜை 

மீனம் ஜூலை மாத மாணவர்கள் :

மாணவர்களுக்கு இந்த மாதம் சிறந்த மாதமாக இருக்கும். நன்றாகப் படித்து முன்னேறுவார்கள். மனதை ஒருமுகப்படுத்தி கவனமுடன் படித்து கல்வியில் வெற்றி பெறுவார்கள். ஆசிரியர்களின் பாராட்டு உங்களுக்கு திருப்தியையும் மகிழ்ச்சியையும் அளிக்கும்.

கல்வியில் மேன்மை பெற : புதன் பூஜை 

சுப நாட்கள் : 4, 8, 7, 15, 16, 22, 23, 29, 30
அசுப நாட்கள் : 2, 3, 9, 17, 18, 19, 23, 24, 27 

banner

Leave a Reply

Submit Comment