Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

கும்பம் ஜூலை மாத ராசி பலன் 2021 | July Matha Kumbam Rasi Palan 2021

June 3, 2021 | Total Views : 518
Zoom In Zoom Out Print

கும்பம் ஜூலை மாத பொதுப்பலன் 2021 :

கும்ப ராசி அன்பர்களுக்கு இது வரவேற்கத்தக்க மாதமாக இருக்கும். நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.  உங்கள் கடின உழைப்பின் மூலன் இந்த மாதம் நீங்கள் உங்கள் வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள்.  இளம் வயது கும்ப ராசி அன்பர்கள் மனதில் காதல் அரும்பு மலரும். குடும்பத்தில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு ஆதரவாகச்  செயல்படுவார்கள். குடும்பத்தில் சுபச் செய்திகளை நீங்கள் எதிர்பார்க்கலாம். உங்கள் உத்தியோகம் மற்றும் தொழில் சிறப்பாக இருக்கும். போட்டியாளர்களை எளிதில் வெல்வீர்கள். எதிரிகள் கூட உங்களுக்கு நண்பர்களாக மாறும் காலக் கட்டமாக இந்த மாதம் உங்களுக்கு அமையும். இந்த மாதம் உங்களுக்கு சிறந்த பலன்களை அளிக்கும் மாதம் என்றாலும் நீங்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டும்.மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.

கும்பம் ஜூலை மாத காதல் / குடும்பம் :

கும்ப ராசி இளம் வயது அன்பர்களின் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். உங்கள் காதல் உறவு கனிந்து திருமண உறவாக மாறும். திருமணமான தம்பதிகள் இடையே நெருக்கம் அதிகரிக்கும். நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நேரத்தைக் கழிப்பீர்கள். குடும்பத்துடனும் நேரத்தைக் கழிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும். நீங்கள்  மிகுந்த  தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை இரண்டையும் குழப்பிக் கொள்ளாத வகையில் செயல்படுங்கள்.

திருமண உறவில் நல்லிணக்கம் காண : சுக்கிரன் பூஜை 

கும்பம் ஜூலை மாத நிதிநிலை :

நிதி நிலையைப் பொறுத்தவரை இந்த மாதம் சிறப்பாக இருக்கும். நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு முன்னேற்றம் காணும் வாய்ப்பு உள்ளது. இந்த மாதம் நீங்கள் காணும் வளர்ச்சி நீங்களே எதிர்பாராத ஒன்றாகக் கூட இருக்கும் வாய்ப்பு உள்ளது. பணவரவு அதிகம் இருக்கும். இதனால் பணப்புழக்கமும் சரளமாக இருக்கும். உங்கள் அதிக பணத்தை முதலீடு செய்யும் எண்ணம் இருந்தால் குடும்பத்துடன் கலந்து ஆலோசித்து பிறகு முடிவுகளை எடுப்பது நல்லது.

கும்பம் ஜூலை மாத வேலை :

பணியிடச் சூழல் உங்களுக்கு  சிறப்பாக இருக்கும். உங்கள் செயல் திறன் காரணமாக மேலதிகாரிகளின் பாராட்டிற்கு ஆளாவீர்கள். உத்தியோகத்தில் நீங்கள் புத்திசாலித்தனமாகச் செயல்படுவீர்கள். தைரியம் உங்களுக்கு கை கொடுக்கும். உங்கள் தகவல் தொடர்புத்திறன் சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் சில போட்டிகள் மற்றும் போட்டியாளர்களை சந்திப்பீர்கள். உங்களுக்கு எதிராகச் செயல்படுபவர்களை வெற்றி கொள்வீர்கள்.

கும்பம் ஜூலை மாத தொழில் :

இந்த மாதம் தொழில் சிறப்பாக இருக்கும். குறிப்பாக கூட்டுத் தொழில் செய்பவர்கள் இந்த மாதம் சிறந்த பலன்களைக் காண்பார்கள். தொழிலில் வாடிக்கையாளர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். இதனால் லாபமும் தொழில் முன்னேற்றமும் கிடைக்கும். அதே சமயத்தில் சிறு அளவிலான நஷ்டத்தையும் நீங்கள் சந்திக்க நேரும். எனவே கவனம் சிதறாமல் செயல்பட வேண்டும். உங்களின் பேச்சுத் திறன் உங்கள் தொழில் சிறக்க கை கொடுக்கும்.

கும்பம் ஜூலை மாத தொழில் வல்லுனர்கள்:

கும்ப ராசி தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் கண்ணும் கருத்துமாகச் செயல்பட வேண்டியிருக்கும்.  உங்கள் சுய நலத்தை விட பொது நலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். உங்கள் வார்த்தைகளில் கவனம் தேவை. தொழில் குறித்த முடிவுகளை நன்கு ஆராய்ந்து பார்த்த பிறகே எடுக்க வேண்டும்.

வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் காண : சுக்கிரன் பூஜை 

கும்பம் ஜூலை மாத ஆரோக்கியம்:  

ஆரோக்கியமான மனம் ஆரோக்கியமான உடலுக்கு வழி வகுக்கும். உங்கள் மனதில் இருக்கும் தன்னம்பிக்கை உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். உத்தியோகம் மற்றும் தொழிலில் காணப்படும் அதிக பணிகள் காரணமாக மனதில் ஏற்படும் பதட்டம் சிறு சிறு உடல் உபாதைகளுக்கு காரணமாக அமையும். மனதின் ஆரோக்கியத்தைத் தக்க வைத்துக் கொள்ள தியானமும் உடலின் ஆரோக்கியோத்தைத் தக்க வைத்துக் கொள்ள உடற்பயிற்சியும்  மேற்கொள்வது நல்லது.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட ; அங்காரகன் பூஜை 

கும்பம் ஜூலை மாத மாணவர்கள் :

மாணவர்கள் இந்த மாதம் சிறந்த பலன்களைக் காண்பார்கள். ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான் காரணமாக நீங்கள் இந்த மாதம் சிறந்த முறையில் படிப்பீர்கள். வெளிநாடு சென்று மேல்படிப்பு படிக்க நினைக்கும் மாணவர்கள் தங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பார்கள். உங்கள் பெற்றோர், ஆசிரியர் மற்றும் வழிகாட்டிகளின் ஆலோசனைகளைப் பெறுவீர்கள். உயர் கல்வி முடித்த மாணவர்கள் உத்தியோகம் கிடைக்கப் பெறுவார்கள்.

கல்வியில் மேன்மை பெற : குரு பூஜை 

சுப நாட்கள் :  1, 2, 3, 4, 5, 12, 13, 14, 15, 16, 17, 18, 27, 28, 29, 30, 31.
அசுப நாட்கள் :  7, 6, 8, 9, 10, 11, 19, 20, 21, 22, 23, 24, 25, 26.

banner

Leave a Reply

Submit Comment