Arupadai Veedu Muruga Program 2024: Invoke Muruga at His 6 Powerful Abodes During the 6th Moon Powertime Days JOIN NOW

மகரம் ஜூலை மாத ராசி பலன் 2020 | July Matha Magaram Rasi Palan 2020

June 9, 2020 | Total Views : 689
Zoom In Zoom Out Print

மகர ராசி ஜூலை மாத பொதுப் பலன்கள்:          

மகர ராசி அன்பர்களுக்கு, இந்த மாதம், சில பிரச்சனைகள் அல்லது கவலைகள் தொந்தரவு கொடுக்கலாம். ஒரு சிலர் தலைவலி மற்றும் குழப்பங்களால் கூட பாதிக்கப்படலாம். இளைய உடன்பிறப்புகள் உங்கள் மனதில் சில கசப்பான உணர்வுகள் எழக் காரணமாக இருக்கக் கூடும். மேலும், சில வீண் செலவுகள் அல்லது இழப்புகளையும் நீங்கள்  சந்திக்க நேரிடும். சிறு வியாதிகளாலும் நீங்கள் பாதிக்கப்படலாம்.  அதே நேரம், தாயின் உடல் நிலையிலும் கவனம் தேவைப்படலாம். நிலங்கள் அல்லது வாகனங்கள் சம்பந்தமான வழக்குகளுக்கும் வாய்ப்புகள் உள்ளன. தொழில் நடவடிக்கைகளில், இப்பொழுது நீங்கள்  கவனமாக இருப்பதும் அவசியம். இருப்பினும், அதில் நீங்கள் லாபம் ஈட்ட முடியும். குடும்ப உறவுகள் சுமுகமாக இருக்கும். அதே நேரம், குழந்தைகளுக்கும் சில நன்மைகள் விளையும். நீங்கள் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொள்வீர்கள். உங்களில் சிலர் புனித யாத்திரை மேற்கொள்வதற்கும் வாய்ப்புள்ளது. ஜோதிடம், ராசி பலன், நட்சத்திர பலன், இன்றைய பஞ்சாங்கம், வார ராசி பலன்கள், வருடாந்திர ராசி பலன்கள், பரிகாரங்கள் பற்றி மேலும் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.

காதல் மற்றும் திருமண வாழ்க்கை:
  
காதல் வாழ்க்கை மிகவும் சுவையாக இருக்கும். கணவன் மனைவி உறவும் மன நிறைவு அளிக்கும். நீங்கள் குடும்ப விஷயங்களில் அனுசரித்து நடந்து கொள்வீர்கள். இருப்பினும், குடும்ப நல்லுறவைப் பேணிக் காக்க, நீங்கள் தொடர்ந்து முயற்சி மேற் கொள்ள வேண்டியிருக்கும். 

நிதி நிலை:
     
உங்கள் பொருளாதார நிலை திருப்தி அளிக்கும். உங்கள் சேமிப்பு, உங்களது பணத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதுமானதாக இருக்கும். இருப்பினும், உங்கள் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் முயற்சியில், நீங்கள் பயனற்ற செலவுகளைச் செய்ய நேரலாம். எனவே பணம் தொடர்பான எந்தவொரு நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பு, நீங்கள் நன்கு சிந்தித்துச் செயல்படுவது நல்லது.

வேலை :

 பணித் துறை திருப்திகரமாக இருக்கும். எனினும், நீங்கள் இப்பொழுது கூடுதல் பொறுப்புக்களை ஏற்க வேண்டியிருக்கும். உங்களது அனைத்துப் பணிகளையும், முடிந்தவரை சிறப்பாக நிறைவேற்றி முடிக்க, அனைத்து முயற்சிகளையும் செய்யுங்கள். இது உங்களுக்கு தாராளமான புகழைப் பெற்றுத் தருவதுடன், மிகுந்த மன நிறைவையும், மகிழ்ச்சியையும் அளிக்கும். 

தொழில் : 

தொழில் வாய்ப்புகள் சாதாரணமாக இருக்கும். எனவே, உங்கள் தொழில்  நடவடிக்கைகளில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. இருப்பினும், நல்ல வருவாயைப் பெறுவதற்கும், இது உங்களுக்கு ஒரு உகந்த மாதமாக இருக்கும் எனலாம். எனினும், சில நேரங்களில், உங்கள் முன்னேற்றம் குறித்த அதிருப்தி, உங்கள் மனதில் நிலவக் கூடும். 

தொழில் வல்லுனர்:

மகர ராசி தொழில் வல்லுநர்கள், இப்போது தங்கள் வேலையில் கவனமாக இருப்பது மிகவும் அவசியம் ஆகும். உங்கள் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு, நிர்ணயிக்கப்பட்ட காலக் கெடுவிற்குள், தேவைக்கேற்ப, அவற்றை முறையாக முடிக்க முயற்சிக்கவும். இல்லையெனில், இதனால் ஏற்படும் தோல்வி அல்லது பின்னடைவு, உங்கள் தொழில் முன்னேற்றத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். 

ஆரோக்கியம்:

உங்கள் உடல் நிலை சீராக இல்லாமல் போகலாம். அதில் ஏற்ற, இறக்கங்கள் காணப்படலாம். எனவே, இப்பொழுது நீங்கள் பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்வது நல்லது. இது உங்கள் வலிமை மற்றும் எதிர்ப்புத் திறனை மேம்படுத்த உதவும். மேலும், சிறு உடற்பயிற்சிகளை செய்வதன் வழியாகவும் கூட, நீங்கள் ஆரோக்கியம் தொடர்பான சிக்கல்களை எதிர்த்துப் போராட இயலும். 

மாணவர்கள் :

இப்பொழுது, மாணவர்களின் கவனம் திசை திரும்பவும், சிதறவும் வாய்ப்பு உள்ளது. இது அவர்களது படிப்புக்கு இடையூறு விளைவிக்கலாம். எனவே, உங்கள் கல்வி முயற்சிகளில் வெற்றி அடைவதற்கு, நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியது அவசியம். மேலும், உங்கள் பாடங்களை முழு கவனத்துடன் படிப்பதும் அவசியம். 

சுப தினங்கள்  : 2,3,4,17,18,25,26,30,31
அசுப தினங்கள் : 5,6,19,20.23,24

பரிகாரம்:

ஸ்ரீ ஆஞ்சநேயர் மற்றும் முருகப் பெருமானுக்கு பூஜை மற்றும் வழிபாடு செய்தல். ஆலயம் சென்று அவர்களை வழிபடுதல்.  
குரு, சனி, ராகு மற்றும் கேது பகவானுக்கு ஹோமம் மற்றும் பூஜை செய்தல்.  
ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி செய்தல். முதியவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவி செய்தல்.  

banner

Leave a Reply

Submit Comment