AstroVed Menu
AstroVed
search
search

July Matha Dhanusu Rasi Palan 2020

dateJune 9, 2020

தனுசு ராசி ஜூலை மாத பொதுப் பலன்கள்: 

தனுசு ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்களுக்கு, நன்மை தீமை இரண்டும் கலந்த பலன்கள் கிடைக்கும் எனலாம். பணப்புழக்கம் சரளமாக இல்லாமல் போகலாம். காதல் உறவையும் கவனமாகக் கையாளுதல் வேண்டும். இளைய உடன்பிறப்புகளின் காரணமாக பிரச்சினைகள் வரும் வாய்ப்புள்ளது. ஆனால் தொழில் முன்னேற்றம் திருப்திகரமாக இருக்கும். உங்கள் வழக்கமான பொறுப்புகளை நிறைவேற்றுவதில் கூட நீங்கள் காட்டும் தீவிர ஈடுபாடு மற்றவர்களைக் கவரும். உங்களுடன் சேர்ந்து செயலாற்ற வேண்டும் என்ற விருப்பத்தை, அவர்களிடமும் ஏற்படுத்தும். இப்பொழுது உங்கள் மறைமுக எதிரிகளைக் கூட நீங்கள் வென்று, அவர்களையும் உங்கள் நண்பர்களாக்கிக் கொள்ள முடியும். உங்களில் சிலர் பணி தொடர்பான சுற்றுப் பயணங்கள் செல்ல வாய்ப்பு உள்ளது. இன்னும் சிலருக்கு, ஆடம்பரப் பொருட்களில் ஆர்வம் ஏற்படும். வாழ்க்கையில் நீங்கள் அதிக மகிழ்ச்சி காணவும் இது சரியான நேரமாகும். ஆனால் உங்கள் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். ஜோதிடம், ராசி பலன், நட்சத்திர பலன், இன்றைய பஞ்சாங்கம், வார ராசி பலன்கள், வருடாந்திர ராசி பலன்கள், பரிகாரங்கள் பற்றி மேலும் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.

காதல் மற்றும் திருமண வாழ்க்கை

வாழ்க்கை துணையுடன் நல்லுறவு நிலவும். மற்ற குடும்பத்தினருடனும் உங்கள் உறவு சுமுகமாக இருக்கும்.  உங்கள் துணையுடன் சில இனிமையான தருணங்களையும், நீங்கள் அனுபவிப்பீர்கள். பொதுவாக, உங்கள் செயல்களுக்கேற்ற நல்ல பலன்களை இப்பொழுது நீங்கள் பெறலாம். 

நிதி நிலை:

உங்கள் பொருளாதார நிலை சாதாரணமாகவே இருக்கும். எனவே, பணம் தொடர்பான எந்தவொரு செயலையும்  தொடங்குவதற்கு முன், ஒருமுறைக்குப் பலமுறை சிந்திப்பது அவசியம். எனினும் நீங்கள், அரசாங்கத்திடமிருந்தோ அல்லது அரசாங்கம் சம்பந்தப்பட்ட பணியின் மூலமாகவோ அதிக வருமானத்தை  எதிர்பார்க்கலாம். 

வேலை:

வேலையில் முன்னேற்றம் காண்பீர்கள். நீங்கள்  எந்தத் துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும், ஏதேனும் ஒரு நன்மையை, இப்பொழுது நீங்கள் எதிர்பார்க்கலாம். உயர் அதிகாரிகளும், உங்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ள வாய்ப்பு உள்ளது. எனினும், எந்த வேலையை முடித்தாலும், அதை இறுதியாகச் சமர்ப்பிப்பதற்கு முன்பு, அதனை நன்கு, ஆராய்ந்து, சரிபார்த்து விட்டு அளிக்கவும். இதன் மூலம், உங்கள்  பணியின் தரத்தை நீங்கள் மேம்படுத்திக் கொள்ள முடியும்.

தொழில்:

தொழில் செய்யும் தனுசு ராசி அன்பர்கள், இந்த மாதம் சற்றே எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். புதிய கூட்டுத் தொழில் ஒப்பந்தங்களை, இந்த நேரத்தில் தவிர்ப்பது நல்லது.  நீங்கள் அறியாமலேயே, சிலர் அதில் உங்களை ஈடுபடுத்த முயல்வர். எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு, ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து எந்தவொரு முடிவையும் எடுப்பது நல்லது. 

தொழில் வல்லுனர்:

இது உங்களுக்குப் பயனுள்ள காலமாக இருக்கும். உங்கள் தொடர் முயற்சிகள் காரணமாக, நீங்கள் எதிர்பார்க்கும் பலன்கள் இப்பொழுது உங்களுக்குக் கிடைக்கும். உங்களது சில பணிகள் நிலுவையில் இருக்கும். என்றாலும், அது பற்றி நீங்கள் பெரிதாகக் கவலை கொள்ளத் தேவையில்லை. 

ஆரோக்கியம் :

 உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படலாம். உங்களுக்கு சில உடல் உபாதைகள் ஏற்படலாம். ஆனால் அவை விரைவில்  குணமடையக்கூடும். அதன் பிறகு உங்கள் உடல் நிலையில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். நீங்கள் அமைதியான, பதற்றம் இல்லாத வாழ்க்கையை அனுபவிக்கலாம். இயற்கை உணவை அதிக அளவில் எடுத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். இது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவியாக இருக்கும். 

மாணவர்கள் :

தனுசு ராசி மாணவர்கள், நண்பர்கள் அல்லது பிறருடன் வெளியே செல்வதைக் குறைத்துக் கொள்வது அவசியம். இதற்கு பதிலாக, படிப்புக்குக் கூடுதல் நேரத்தை ஒதுக்குவது நன்மை தரும். உங்கள் கல்வியில் அதிக அக்கறை செலுத்துவதற்கு, இது உங்களுக்கு உதவக் கூடும். உங்களில் சிலர், கல்வி சாரா பிற கலை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று மகிழ்வீர்கள். 

சுப தினங்கள்   :  1,14,15,23,24,27,28,29  
அசுப தினங்கள் :    2,3,4,16,17,18,21,22,30,31

பரிகாரம்:

ஆலயம் சென்று பகவான் தட்சிணா மூர்த்தியை வழிபடுதல். சித்தர் சமாதி சென்று தரிசனம் செய்தல். 
குரு, சனி, மற்றும் ராகு, கேது பகவானுக்கு பூஜை மற்றும் ஹோமம் செய்தல்.  
சாதுக்களுக்கு உதவுதல். ஆலயத்திற்கு சேவை செய்தல். நாய்களுக்கு உணவளித்தல்.  


banner

Leave a Reply