கும்பம் ஜூலை மாத ராசி பலன் 2020 | July Matha Kumbam Rasi Palan 2020

கும்ப ராசி ஜூலை மாத பொதுப் பலன்கள்:
கும்ப ராசி அன்பர்களே! இந்த மாதம், உங்கள் நிதி மற்றும் வேலை, தொழில் நிலை வலுவாக இருப்பதைக் காணலாம். தாயின் தரப்பிலிருந்து நீங்கள் சில ஆதாயங்களைப் பெறலாம். சிலர் வாகனங்கள் வாங்கும் வாய்ப்பும் உள்ளது. எனினும், காதல் விவகாரங்களில் சில தடைகள் உருவாகலாம். அதே நேரம், உங்கள் காதல் உறவு, வெற்றிகரமாக, திருமணத்தில் முடியும் வாய்ப்பும் உள்ளது. திருமணமானவர்கள் குழந்தைப் பேற்றிற்கான பாக்கியம் பெறலாம். எனினும், தந்தையின் உடல்நிலை உங்கள் மனதில் கவலையை ஏற்படுத்தக்கூடும். பணியில் இருப்பவர்கள், மிதமான அதிர்ஷ்டத்தை எதிர்பார்க்கலாம். தொலைதூர நாடுகளிலிருந்து சிலருக்கு அழைப்புகள் வரலாம். இந்த அழைப்புகளை ஏற்று, சிலர் தொலைதூரப் பயணங்களையும் மேற்கொள்ளலாம். இந்த நேரத்தில், செலவுகள் அதிகமாக இருக்கும். இதன் காரணமாக, நீங்கள் பற்றாக்குறையை சந்திக்க நேரலாம். இப்பொழுது சிலர், புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால் தொழில் நடவடிக்கைகளில், நீங்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். உங்களில் சிலர், ஆலயங்களுக்குப் புனித யாத்திரை செல்லும் வாய்ப்பு உள்ளது. ஜோதிடம், ராசி பலன், நட்சத்திர பலன், இன்றைய பஞ்சாங்கம், வார ராசி பலன்கள், வருடாந்திர ராசி பலன்கள், பரிகாரங்கள் பற்றி மேலும் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.
காதல் மற்றும் திருமண வாழ்க்கை:
உங்கள் காதல் உறவில் மோதலும், சலசலப்பும் இருக்கக் கூடும். எனவே காதல் விவகாரங்களைக் கையாள்வதில் பொறுமை தேவை. மண வாழ்க்கை நடத்துபவர்களும், தங்கள் உறவில் நல்லிணக்கம் காண, பொறுமை காப்பது அவசியம்.
நிதி நிலை :
உங்கள் பொருளாதார நிலை ஓரளவு சீராக இருக்கும். பண விஷயங்களில் ஏற்படும் முன்னேற்றங்கள், உங்களுக்கு மகிழ்ச்சி தரும். உங்கள் வருமானமும், உங்கள் பொருளாதாரக் கடமைகள் அனைத்தையும் நிறைவேற்றப் போதுமானதாக இருக்கும்.
வேலை :
பணியில் இருப்பவர்கள், அது தொடர்பான அனைத்துப் பிரச்சனைகளையும் கவனமாகச் சமாளிக்க வேண்டியிருக்கும். பணியில் முன்னேற்றம் ஏற்படும். இருப்பினும் அது சீராகவோ, நிலையானதாகவோ இருக்காது. எனினும், அலுவலகத்தில் எழும் பல்வேறு தடைகளையும், நீங்கள் தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் எதிர் கொள்ள முடியும். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களுடன், நீங்கள் நல்லுறவுடன் பழகுவீர்கள். இதன் மூலம், அவர்கள் ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும்.
தொழில் :
தொழிலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணலாம். மேலதிகாரிகளுடன் நல்லுறவைப் பேணுவதன் மூலம், உங்கள் முயற்சிகளுக்கு அவர்களின் ஆதரவை, நீங்கள் பெறலாம். இந்த மாதம், உங்களில் சிலர், தங்கள் முழுத் திறனுடன் செயலாற்ற இயலாத நிலை எழக் கூடும். அத்தகையவர்கள், தங்கள் தொழில் வளர்ச்சியில் முழுக் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
தொழில் வல்லுநர்:
கும்ப ராசி தொழில் வல்லுநர்கள், தாங்கள் கடந்த காலத்தில் இழந்ததை மீட்பதற்கு, இந்த மாதம் உகந்த நேரமாக இருக்கலாம். உங்கள் செயல் திறன், உங்களுக்குப் பாராட்டுதல்களையும், லாபத்தையும் அளிக்கலாம். பணியின் மீது நீங்கள் கட்டும் அர்ப்பணிப்பு, இப்பொழுது உங்களுக்குச் சில மதிப்பு மிக்க பொறுப்புகளைப் பெற்றுத் தரலாம்.
ஆரோக்கியம் :
உங்கள் ஆரோக்கியம் கவலை தரும் வகையில் இருக்காது என்றாலும், இந்த மாதம் உங்கள் உடல் நிலையில் கவனம் தேவை. இது குறித்து, தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நீங்கள் எடுத்துக் கொள்வது உகந்ததாகும். இதன் மூலம் நீங்கள் முழு ஆரோக்கியத்துடனும், உடல் வலுவுடனும், சுறுசுறுப்புடனும் செயலாற்ற முடியும்.
மாணவர்கள்:
மாணவர்கள் தங்கள் படிப்பில் முழு கவனம் செலுத்தி, சிறப்பாகச் செயல்படக்கூடிய ஒரு முற்போக்கான காலகட்டமாக இந்த மாதம் இருக்கும். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் உங்களுக்கு நல்லுறவு நிலவும். நண்பர்களுடன் நெருங்கிய உறவை வளர்த்துக் கொள்வதும், உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
சுப தினங்கள் : 1,5,6,19,20,27,28,29
அசுப தினங்கள் : 7,8,21,22,25,26
பரிகாரம்:
ஸ்ரீ ஆஞ்சநேயர் மற்றும் முருகப் பெருமானுக்கு பூஜை செய்தல். ஆலயம் சென்று வழிபடுதல்.
குரு, சனி மற்றும் ராகு, கேது பகவானை வழிபடுதல். அவர்களுக்குப் பூஜை மற்றும் ஹோமம் செய்தல்.
ஏழை. முதியோர், உடல் ஊனமுற்றோர், ஆதரவற்றோர் மற்றும் உதவி தேவைப்படுவோருக்கு உதவி புரிதல். மேலும் அன்னதானம் செய்தல்.
