AstroVed Menu
AstroVed
search
search

மகரம் ஜூலை மாத ராசி பலன் 2021 | July Matha Magaram Rasi Palan 2021

dateJune 3, 2021

மகரம் ஜூலை மாத பொதுப்பலன் 2021:

மகர ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் சிறந்த பலன்கள் கிடைக்கும் என்றாலும் சில பின்னடைவுகளையும் சந்திக்க நேரும். கிரக நிலைகள் உங்களுக்கு சிறப்பாக உள்ளதால் நீங்கள் நல்ல பலன்களையே எதிர்பார்க்கலாம். உங்கள் குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இந்த சாதகமான நேரத்தை நீங்கள் சரியாகப் பயன்படுத்தினால் வெற்றி உங்களை நாடி வரும். பணியிடத்தில் சக பணியாளர்களின் கருத்து வேறுபாடு காரணமாக சில மோதல்களை நீங்கள் சந்திக்க நேரும். என்றாலும் இந்தச் சூழ்நிலையை நீங்கள்  சமாளித்து வெற்றி காண்பீர்கள். பணியிடத்தில் நீங்கள் கடினமாகப் பணி புரிவீர்கள். நீங்கள் தன்னம்பிக்கையுடனும் ஆக்கப் பூர்வமாகவும் செயல்படுவீர்கள்.  உங்கள் ஆரோக்கியம் இந்த மாதம் சிறப்பாக இருக்கும். அதிக பணிகள் காரணமாக மனதில் பதட்ட நிலை இருக்கும். மாணவர்கள் சிறந்த பலன்களைக் காண கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.

மகரம் ஜூலை மாத காதல் / குடும்பம் :

காதலிக்கும் இளம் வயது மகர ராசி அன்பர்கள் இந்த மாதம் சில சவால்களை சந்திக்க நேரும். திருமணமான மகர ராசி அன்பர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையிடம் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்களிடம் கவனமாகப் பேச வேண்டும்.  எனவே நீங்கள் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். உங்கள் வார்த்தைகளில் இருக்கும் கடுமை உங்கள் வாழ்க்கைத் துணையின் மனதை பாதிக்கும். எனவே கவனமாகச் செயல்பட வேண்டும். 

திருமண உறவில் நல்லிணக்கம் காண : சுக்கிரன் பூஜை 

மகரம் ஜூலை மாத நிதிநிலை :

பொருளாதாரத்தைப் பொறுத்தவரை மகர ராசி அன்பர்கள் இந்த மாதம் சில  நெருக்கடிகளை சந்திக்க நேரும். செலவுகள் உங்கள் கை மீறிப் போகும். இதனால் பதட்டமான சூழ்நிலையை காணப்படும்.  கடன் சுமைகள் உங்களை அழுத்தும். உங்கள் வருமானத்தில் இருக்கும் ஏற்றந்த்தாழ்வான நிலையும் உங்களுக்கு கூடுதல் சுமையாக இருக்கும். பணப்புழக்கம் சுமாராக இருக்கும்.எதிர்கால நலனுக்காக நீங்கள் பணத்தை சேமிக்க வேண்டியது அவசியம். 

உங்கள் நிதிநிலை மேம்பட : அங்காரகன் பூஜை 

மகரம் ஜூலை மாத வேலை :

உத்தியோகத்தில் இருக்கும் மகர ராசி அன்பர்கள் இந்த மாதம் நன்மை தீமை இரண்டும் கலந்த பலன்களைக் காண்பீர்கள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் சில தடைகளும் தாமதங்களும் காணப்படும். யோசித்துப் பொறுமையுடன் செயல்பட வேண்டும். பணியிடத்தில் சில போட்டிகளை நீங்கள் சந்திக்க நேரும். சக பணியாளர்களிடம் அனாவசிய பேச்சு வார்த்தைகளைத் தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் சிலர் உங்களுக்கு எதிராகச் செயல்படலாம். என்றாலும் அவர்களை நீங்கள் எளிதில் வெற்றி கொள்வீர்கள்.  

மகரம் ஜூலை மாத தொழில் :

உங்கள் தொழில் இந்த மாதம் சிறப்பாக நடக்கும். அதிலும் குறிப்பாக  கூட்டுத் தொழில் சிறப்பாக நடக்கும். தொழில் சார்ந்த பேச்சு வார்த்தைகளில் கவனம் தேவை. உங்களில் சிலர் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். கூட்டுத் தொழில் மேற்கொள்ள புதிய கூட்டாளிகளை சந்தித்து பேச்சு வார்த்தைகளை நடத்துவீர்கள். அவர்களிடம் நன்றாக யோசித்து ஆலோசனைகளை மேற்கொள்வீர்கள்.  புதிய தொழில் முதலீடுகளை இப்போதைக்கு தள்ளிப்போடுவது நன்மை அளிக்கும்.  

மகரம் ஜூலை மாத தொழில் வல்லுனர்கள் :

மகர ராசி தொழில் வல்லுனர்கள் தொழிலைப் பொறுத்தவரை இந்த மாதம் எந்தவொரு  விஷயத்தையும்  நன்கு யோசித்துச் செயல்படுத்துவீர்கள்.  வாடிக்கையாளர்கள் பாராட்டும் வகையில் நீங்கள் செயல்படுவீர்கள்.  தொழிலில் போட்டியாளர்கள் அதிக அளவில் இருப்பார்கள்.  உங்களுக்கு தொழிலில் அங்கீகாரம் கிட்டும். லாபம் உயரும்.என்றாலும் சில முயற்சிகளில் ஏற்படும் தாமதம் உங்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கும். 

உங்கள் கல்வியில் மேன்மை பெற : சனி பூஜை

மகரம் ஜூலை மாத ஆரோக்கியம் :

அதிக பணிகள் காரணமாக அதிக சோர்வு ஏற்படும். பதட்டம், தலைவலி போன்ற சிறு சிறு உபாதைகள் ஏற்படும். பெரிய அளவிலான ஆரோக்கிய பாதிப்புகள் எதையும் நீங்கள் எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது. சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். எனவே உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால் தான் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.  உங்கள் ஆரோக்கியத்தை சீராக வைத்துக் கொள்ள தியானம் மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.  

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : குரு பூஜை 

மகரம் ஜூலை மாத மாணவர்கள் :

மகர ராசி மாணவர்கள் இந்த மாதம் கல்வியில் கவனம் செலுத்திப் படிக்க வேண்டும். கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.  உழைத்துப் படிப்பதன் மூலம் தேர்வில் வெற்றி பெறலாம். இலக்குகளை அடையலாம். உங்கள் தன்னம்பிக்கை குறையும் வாய்ப்பு உள்ளது. நீங்கள் கல்வியில் முன்னேற்றம் காண உங்கள் பெற்றோர், ஆசிரியர் மற்றும் நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். 

உங்கள் கல்வியில் மேன்மை பெற : அங்காரகன் பூஜை 

சுப நாட்கள் :  1, 2, 3, 4, 7, 10, 11, 13, 17, 18, 23, 24, 25, 21, 28, 29, 30.
அசுப நாட்கள் :  5, 6, 8, 9, 12, 14, 15, 16, 19, 20, 22, 26, 27, 31.


banner

Leave a Reply