Rama Navami Ceremonies & Grand Ram Lalla Statue Installation On Ram’s Birthday Powertime JOIN NOW

January Month Rasi Palan 2019 in Tamil

December 3, 2018 | Total Views : 9,819
Zoom In Zoom Out Print

கும்பம் ஜனவரி மாத ராசி பலன் 2019 - January Matha Kumbam Rasi Palan in Tamil 2019

பொதுப்பலன்கள்

இந்தக் மாதம்  உங்கள் அனைத்து செயல்களிலும் சாதாரண பலன்களே கிட்டும்.  உங்கள் தொழில்சார்ந்த பணிகளில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். கூடுதல் வேலையால் மன அழுத்தம் உண்டாகலாம்.  பல்வேறு பணிகள் ஒரே நேரத்தில் செய்ய வேண்டிஇருந்தால் கவனமாக செய்யவும்.  ஆனால் உங்களுடைய புத்திசாலித்தனத்தால் உங்கள் வேலைகளை எளிதாக முடித்துவிடுவீர்கள். அதனால் நீங்கள் ஆறுதல் அடைவீர்கள். சிறியளவில் பயணங்கள் மேற்கொள்ள நேரிட்டு அதனால் செலவுகள் ஏற்படலாம். நிதி சம்பந்தமான விஷயங்களில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும். ஆனாலும் உங்களால் அவற்றைச் சிறந்த முறையில் கையாள முடியும். தேவையான நேரங்களில் உங்களுடைய கூர்மையான அறிவாற்றல் உங்களுக்கு கை கொடுக்கும். குடும்ப வாழ்வில் கருத்து வேறுபாடுகள் எழுவதற்கு வாய்ப்பு உண்டு. கடுமையான வேலைப்பளுவால் உங்கள் தனிப்பட்ட தேவைகளுக்கு நேரம் ஒதுக்க முடியாமல் இருக்கலாம். நேரம் தவறி உட்கொள்ளும் உணவால் உடல் ரீதியான சோர்வு ஏற்படும். மேலும் அதனால் மருத்துவ செலவுகளும் ஏற்படலாம். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

உங்களது ஜாதக பிரத்யேக பலன்களை தெரிந்து கொள்ள ஜோதிட வல்லுனரை அணுகவும்

மேஷம் ஜனவரி மாத ராசி பலன் 2019 - January Matha Mesham Rasi Palan in Tamil 2019            

பொதுப்பலன்கள்

இந்த மாதம் உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை சவால்கள் நிறைந்த மாதமாக இருக்கும். உங்களுக்கு சாதகமான பலன்களைக் காண ஒவ்வொரு சூழ்நிலையிலும் நீங்கள் கடினமாக முயற்சி செய்ய வேண்டும். வேலையில் உங்கள் கவனக்குறைவு காரணமாக நீங்கள் சில வாய்ப்புகளை இழக்க நேரிடலாம். உங்கள் நற்பெயரை மேம்படுத்தக்கூடிய வகையில் சமூக வட்டத்தில் நீங்கள் ஆர்வமுடன்  பங்கேற்பீர்கள். எல்லா விஷயங்களிலும் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும். பிறருடன் பேசும் போது  அமைதியான முறையில்  நடந்துகொள்ள வேண்டும்.  சமூக வாழ்வில் ஏற்படும்  மகிழ்ச்சியான தருணங்கள் உங்கள் பலத்தை அதிகரிக்கும்.  உங்கள் சக ஊழியர்கள் உங்கள் நம்பகத்தன்மையை சந்தேகிக்கலாம். இடம் மாறுவதற்கு நீங்கள் திட்டமிடுவீர்கள். அது சற்று கால தாமதம் ஆகலாம். உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் முறையான கவனம் செலுத்த வேண்டும். சில நேரங்களில் அது உங்களுக்கு பதற்றத்தைத் தரலாம். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

உங்களது ஜாதக பிரத்யேக பலன்களை தெரிந்து கொள்ள ஜோதிட வல்லுனரை அணுகவும்

கடகம் ஜனவரி மாத ராசி பலன் 2019 - January Matha Kadagam Rasi Palan in Tamil 2019

பொதுப்பலன்கள்

இது பெரும் வெற்றிக்கான ஒரு நல்ல மாதம். உங்கள் பேச்சுக்களிலும்  செயல்களிலும் நடவடிக்கைகளிலும்  எச்சரிக்கையாக இருங்கள். சமூக வாழ்வில் சுமூகமான சூழ்நிலை  உங்களை மகிழ்ச்சிப்படுத்தும். பாக்கியுள்ள பணிகளை குறிப்பிட்ட நேரத்தில் திட்டமிட்டு அதன்படி  முடிக்க முயலுங்கள்.  நீங்கள் நினைத்தபடி ஒரு வேளை முடிக்க முடியாமல் போனால் அந்தப் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். வாழ்வில் நன்மை பெற  உங்கள் மூதாதையர்களைப் பிரார்த்தனை செய்வது, அல்லது பித்ரு சாந்தி  செய்வது நல்லது. உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உங்கள் அன்றாட வேலைகளை  நீங்கள் செய்து அதன் மூலம் திருப்தியடைவீர்கள். உங்களுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் நேரடியாக  தொடர்பு கொண்டு பழகுவதன் மூலம் உங்கள் மேல் அவர்கள் வைத்திருக்கும் மரியாதை மேம்படச் செய்யலாம். நீங்கள் விரும்பிய வகையில் அசையாச்  சொத்து வாங்கலாம். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாகவும் ஆதரவாகவும் இருக்கும். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

உங்களது ஜாதக பிரத்யேக பலன்களை தெரிந்து கொள்ள ஜோதிட வல்லுனரை அணுகவும்

மகரம் ஜனவரி மாத ராசி பலன் 2019 - January Matha Makara Rasi Palan in Tamil 2019

பொதுப்பலன்கள்

இந்த மாதம், உங்கள் வாழ்வும், செயலும் சீராக இருக்கும். பிறருடன் பேசுவதற்கும், பழகுவதற்கும் தேவைப்படும் திறனை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். சமூக வட்டத்தில் புது தொடர்புகள் ஏற்படும். தொழில் ரீதியாக, உங்கள் மதிப்பை நிரூபிக்க இது சரியான தருணம். ஊதிய உயர்வு மன நிறவைத் தரும். அலுவலகக் கூட்டங்கள், இனிய சந்திப்புகள் ஆகியவற்றில், ஆர்வத்துடன் பங்கேற்ப்பீர்கள். புனிதப் பயணங்களுக்கு நீங்கள் செலவு செய்ய நேரலாம். ஆன்மீக குருமார்களைச் சந்தித்து, வழிகாட்டுதல் பெறலாம். அவர்களது ஆசிகளால் உங்கள் செயலாற்றல் பெருகும். தற்போது செலவுகள் அதிகரிக்கக்கூடும், எனவே கட்டுப்பாடு அவசியம். உங்களுக்குக் கீழே பணிபுரிபவர்களின் தவறான அபிப்ராயங்கள், உங்கள் முயற்சியால் விலகும். ஆரோக்கியம் படிப்படியாக சீரடையும். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

உங்களது ஜாதக பிரத்யேக பலன்களை தெரிந்து கொள்ள ஜோதிட வல்லுனரை அணுகவும்

மிதுனம் ஜனவரி மாத ராசி பலன் 2019 - January Matha Mithunam Rasi Palan in Tamil 2019

பொதுப்பலன்கள்

உங்களது நியாயமான தேவைகள் அனைத்தும் நிறைவேறக்கூடிய, மிகவும் ஆதரவான காலகட்டம் இது. வாழ்க்கையில் முன்னேறுவதற்கும், எதிர்காலத் தேவைகளுக்கு திட்டமிடுவதற்கும் ஏற்ற காலமும் இதுதான். ஆனால், உறவினர் சிலர் பொறாமை காரணமாக, உங்கள் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்க முயலலாம். அவர்களிடம் எச்சரிக்கை தேவை.     பொது காரியங்களில் உங்கள்  நடவடிக்கைகளும், ஒத்துழைப்பும், ஆதரவும் பாராட்டு பெறும். நீங்கள் எண்ணங்களில் தெளிவாக இருக்க வேண்டும், பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கவும் வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கையில் அதிக பயணங்கள் செய்ய நேரிடும், எனவே அவற்றுக்குத் தயாராக இருக்க வேண்டும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற உறுதி பூணுங்கள், இதனால் உங்கள் மீதுள்ள நம்பகத்தன்மை மேம்படும். உங்களுடைய போலித்தனமான எண்ணங்கள் காரணமாக, சில சமயங்களில் உங்கள் முயற்சிகளுக்கு நற்பலன் ஏற்படாமல் போகலாம். கவனமாக இருங்கள். இப்போது உங்கள் உடல் நலம் சிறப்பாக இருக்கும்.

சிம்மம் ஜனவரி மாத ராசி பலன் 2019 - January Matha Simha Rasi Palan in Tamil 2019

பொதுப்பலன்கள்

இந்த மாதத்தில் எல்லா விஷயங்களும் நன்றாகவே நடைபெறும். மேற்கொள்ளும் பயணங்கள் மகிழ்ச்சியையும், புதிய அனுபவத்தையும் தரும். தொலைதூரத் தொடர்புகள் புதிய நட்புகளை உருவாக்கக் கூடும். இவை வருங்காலத்தில் உங்களுக்கு நல்ல ஆதரவை அளிக்கும். தொழில் ரீதியாக, நன்மை பயக்கக்கூடிய வாய்ப்புகள் உருவாகும். சூழ்நிலைகள், சில சமயங்களில், உங்கள் பொறுமையை சோதிக்கலாம். ஆயினும், எளிதில் நம்பிக்கை இழக்காதீர்கள். கடினமாக உழைத்து, அதிக உற்பத்தித் திறனை அடையும் காலம் இது. நண்பர்களுடன் சிறு விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடும்ப விஷயங்களில் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. உங்கள் ஆரோக்கியம் சீராக இருக்கும். அதைப்பற்றிக் கவலைப்பட தேவையில்லை. மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

துலாம் ஜனவரி மாத ராசி பலன் 2019 - January Matha Thulam Rasi Palan in Tamil 2019

பொதுப்பலன்கள்

இந்த காலம், உங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு நல்ல ஆரம்பமாக அமையும். ஆயினும், முடிவுகள் சில நேரங்களில் உங்கள் விருப்பம் போல் அமையாமல் போகலாம். இதனால், நீங்கள் நம்பிக்கை இழக்கக் கூடாது. பொறுமையாகப் பணி புரிந்தால், நல்ல பலன்களை மெதுவாகவாவது பெறுவீர்கள். உங்கள் சமூகத் தொடர்புத் திறனை மேம்படுத்திக் கொண்டால், நல்ல வேலை வாய்ப்பைப் பெறலாம். குடும்ப உறுப்பினர்களுடன் இனிமையான பயணம் மேற்கொள்வீர்கள். உங்கள் அனைத்து முயற்சிகளுக்கும் சிறப்பான அங்கீகாரம் கிடைக்கும். தொழிலில் மேலும் சிறப்பாக வளர்ச்சி பெறுவதற்கு உங்கள் தன்னம்பிக்கையை இது மேம்படுத்தும். நிதி ரீதியாக இந்தக் காலகட்டம் உங்களை வலிமையாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், நீங்கள் தேவையில்லாத உடற்சோர்வை ஏற்படுத்திக் கொள்ளுவீர்கள். அது மருத்துவ செலவிற்கு வழி வகுக்கும். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

மீனம்  ஜனவரி மாத ராசி பலன் 2019 - January Matha Meenam Rasi Palan in Tamil 2019

பொதுப்பலன்கள்

இந்தக் காலகட்டம் உங்களுக்கு சாதாரணமாக இருக்கும். எதிர்கால வளர்ச்சிக்குத் தேவையான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உங்கள் தனிப்பட்ட திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். சமூக வட்டத்தில் புதிய தொடர்புகள் அதிகரிக்கும். தொழில் ரீதியாக உங்கள் மதிப்பை நிரூபிப்பதற்கு இது சரியான நேரம். ஊதிய உயர்வு உங்களுக்குத் திருப்தியை அளிக்கும். விருந்துகளில் பங்கேற்க ஆர்வம் காட்டுவீர்கள். இந்தக் காலகட்டத்தில் ஆன்மீக பயணங்களுக்கு நீங்கள் செலவு செய்யலாம். ஆன்மீக குருமார்களையும் சந்திக்கலாம் இதன் மூலம், அவர்கள், உங்கள் வாழ்க்கையைச் சிறந்த முறையில் நடத்துவதற்கான வழிகாட்டுதலை வழங்குவார்கள்.  அவர்களின் ஆசீர்வாதம் திறம்பட வேலை செய்வதற்கான ஆற்றலை உங்களுக்கு அளிக்கும். உங்கள் உடல்நிலை சாதாரணமாக இருக்கும். உணவு கட்டுப்பாட்டிற்கு முக்கியத்துவம் அளியுங்கள். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

துலாம் ஜனவரி மாத ராசி பலன் 2019 - January Matha Dhanu Rasi Palan in Tamil 2019

பொதுப்பலன்கள்

இந்த மாதப் பலன்கள் சராசரியாக இருக்கும். எல்லாவற்றிலும் உங்களுடைய கடுமையான முயற்சி தேவைப்படும். அப்போது தான் நல்ல பலன்களைப் பெற முடியும். தகவல் தொடர்புகளில் உள்ள குழப்பத்தால் மன அழுத்தம் மற்றும் கவலை ஏற்படலாம். உங்களுடைய தனிப்பட்ட வேலைகளுக்கு நேரம் ஒதுக்குவதில் ஆர்வம் காட்டமாட்டீர்கள். அண்டை வீட்டாருடன் தேவையற்ற பேச்சு வார்த்தைகளைத் தவிர்க்கவும். அவர்கள் உங்கள் அன்றாட வேலைகளில் தலையிட முயற்சி செய்வார்கள். இந்தக் காலகட்டத்தில் குடும்பத்துடன் பயணம் செய்வது உங்களுக்கு ஓய்வைத் தரும். நண்பர்களுடனான நல்ல உறவு உங்களை மன அழுத்தத்தில் இருந்து காப்பாற்றும். திருமணத்துக்காக, உங்களைத் தேடி சில வரன்கள் வரலாம். அவை சாதாரணமாகத் தோன்றினாலும், அவற்றை நன்கு பார்வையிட்டு, அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முயற்சி செய்யலாமா என்று பாருங்கள். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக்கொள்ளாததன் காரணமாக நீங்கள் உடல் சோர்வு அடையலாம். உணவு மற்றும் தூக்கம் ஆகியவற்றில் சரியான நேரத்தைப் பின்பற்றுங்கள்.. மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

மீனம்  ஜனவரி மாத ராசி பலன் 2019 - January Matha Meenam Rasi Palan in Tamil 2019

பொதுப்பலன்கள்

இந்தக் காலகட்டம் உங்களுக்கு சாதாரணமாக இருக்கும். எதிர்கால வளர்ச்சிக்குத் தேவையான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உங்கள் தனிப்பட்ட திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். சமூக வட்டத்தில் புதிய தொடர்புகள் அதிகரிக்கும். தொழில் ரீதியாக உங்கள் மதிப்பை நிரூபிப்பதற்கு இது சரியான நேரம். ஊதிய உயர்வு உங்களுக்குத் திருப்தியை அளிக்கும். விருந்துகளில் பங்கேற்க ஆர்வம் காட்டுவீர்கள். இந்தக் காலகட்டத்தில் ஆன்மீக பயணங்களுக்கு நீங்கள் செலவு செய்யலாம். ஆன்மீக குருமார்களையும் சந்திக்கலாம் இதன் மூலம், அவர்கள், உங்கள் வாழ்க்கையைச் சிறந்த முறையில் நடத்துவதற்கான வழிகாட்டுதலை வழங்குவார்கள்.  அவர்களின் ஆசீர்வாதம் திறம்பட வேலை செய்வதற்கான ஆற்றலை உங்களுக்கு அளிக்கும். உங்கள் உடல்நிலை சாதாரணமாக இருக்கும். உணவு கட்டுப்பாட்டிற்கு முக்கியத்துவம் அளியுங்கள். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

தனுசு ஜனவரி மாத ராசி பலன் 2019 - January Matha Dhanu Rasi Palan in Tamil 2019

பொதுப்பலன்கள்

இந்த மாதப் பலன்கள் சராசரியாக இருக்கும். எல்லாவற்றிலும் உங்களுடைய கடுமையான முயற்சி தேவைப்படும். அப்போது தான் நல்ல பலன்களைப் பெற முடியும். தகவல் தொடர்புகளில் உள்ள குழப்பத்தால் மன அழுத்தம் மற்றும் கவலை ஏற்படலாம். உங்களுடைய தனிப்பட்ட வேலைகளுக்கு நேரம் ஒதுக்குவதில் ஆர்வம் காட்டமாட்டீர்கள். அண்டை வீட்டாருடன் தேவையற்ற பேச்சு வார்த்தைகளைத் தவிர்க்கவும். அவர்கள் உங்கள் அன்றாட வேலைகளில் தலையிட முயற்சி செய்வார்கள். இந்தக் காலகட்டத்தில் குடும்பத்துடன் பயணம் செய்வது உங்களுக்கு ஓய்வைத் தரும். நண்பர்களுடனான நல்ல உறவு உங்களை மன அழுத்தத்தில் இருந்து காப்பாற்றும். திருமணத்துக்காக, உங்களைத் தேடி சில வரன்கள் வரலாம். அவை சாதாரணமாகத் தோன்றினாலும், அவற்றை நன்கு பார்வையிட்டு, அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முயற்சி செய்யலாமா என்று பாருங்கள். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக்கொள்ளாததன் காரணமாக நீங்கள் உடல் சோர்வு அடையலாம். உணவு மற்றும் தூக்கம் ஆகியவற்றில் சரியான நேரத்தைப் பின்பற்றுங்கள்.. மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

விருச்சிகம் ஜனவரி மாத ராசி பலன் 2019 - January Matha Viruchigam Rasi Palan in Tamil 2019

பொதுப்பலன்கள்

இந்த மாதம் நிதி மற்றும் தொழில்துறை தொடர்பான நடவடிக்கைகள் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். தொலை தூரங்களிலிருந்து உங்களுக்கு வரவேற்பு அழைப்புகள் வரும். இதனால் நீண்ட பயணங்களை நீங்கள் மேற்கொள்ளுவீர்கள். மதத்தில் பற்று ஏற்பட்டு நீங்கள் புனித யாத்திரை செல்ல நேரிடலாம். உங்கள் வருவாய் சற்றே அதிகரிக்கும். கடுமையான சூழல்களில் குடும்ப உறுப்பினர்களுடனான நெருங்கிய தொடர்பு உதவிகரமாக இருக்கும். குறுகிய தூர பயணங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். பயணத்தின் போது நீங்கள் சில ஆவணங்கள் அல்லது உடைமைகள் போன்றவற்றை இழக்க நேரிடலாம். ஊக முதலீடுகளைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அவற்றில் நீங்கள் நஷ்டம் அடைய வாய்ப்பு உண்டு. உங்கள் குடும்ப உறுப்பினர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். அன்றாட வாழ்க்கையும் மிக அமைதியாக இருக்கும். உடல் நலனில் சிறப்பு கவனம் தேவைப்படலாம். நீங்கள் பலவீனத்தால் பாதிக்கப்படலாம். உடல்நிலையும் சரியில்லாமல் போகலாம். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

ரிஷபம் ஜனவரி மாத ராசி பலன் 2019 - January Matha Rishabam Rasi Palan in Tamil 2019

பொதுப்பலன்கள்

உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை மேம்படுத்திக்கொள்ள இது ஒரு மிகச் சரியான நேரம். உறவினர்களிடமிருந்தும், நண்பர்களிடமிருந்தும் ஒத்துழைப்பும், ஆதரவும் கிடைக்கும். உங்கள் திட்டங்கள் இப்போது அதி வேகத்துடன் செயல் படத்தொடங்கும்.  உங்கள் விருப்பப்படி ஒரு சொத்தை வாங்குவீர்கள். அன்றாட நடவடிக்கைகளில் உங்களுடைய  தீவிரமான ஈடுபாடு, எல்லோரையும் ஈர்த்து உங்களுடன் இணைந்து செயலாற்ற வைக்கும்.. இந்த மாதம் உங்கள் வாழ்க்கையில் நடக்கும் எல்லா நிகழ்வுகளிலும் உங்கள் கையே ஒங்கி இருக்கும். வேலையில் உங்கள் மதிப்பை நிரூபித்து நீங்கள் எதிர்பார்த்த சாதகமான முடிவுகளையும் பெறுவீர்கள். ஆனால், சிறிய விஷயங்களில் கூட அகம்பாவத்துடன் நடந்து கொள்ள வேண்டாம். உங்களுடைய உற்பத்தித்திறன், நீங்கள் விரும்பிய உயர்ந்த நிலை அல்லது அந்தஸ்தை உங்களுக்கு பெற்றுத் தரும். சிலருக்கு வெளிநாட்டுப் பயணம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நாகரீகமான பொருட்களில் அதிக ஆர்வம் இருக்கும். ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

கன்னி ஜனவரி மாத ராசி பலன் 2019 - January Matha Kanni Rasi Palan in Tamil 2019

பொதுப்பலன்கள்

கன்னி ராசிக்காரர்களுக்கு இது ஒரு சீராக மாதமாக இருக்கும். சமூக வட்டத்தில் புதிய தொடர்புகள் அதிகரிக்கும். நிகழ்ச்சிகளிலும், கூட்டங்களிலும் நீங்கள் எல்லோரையும் கவரும் வகையில் ஈர்ப்பு மையமாக இருப்பீர்கள். இவையெல்லாம் ஆரம்பத்தில் நன்றாகவே இருக்கும், ஆனால் பின்னர், இவற்றிலெல்லாம் உங்கள் ஆர்வம் குறையும். உங்கள் தனிப்பட்ட திறமைகள் வளரும். புனிதப் பயணங்களுக்கு நீங்கள் செலவு செய்ய நேரிடும். வழிகாட்டுதலுக்காக ஆன்மீக குருக்களை நீங்கள் சந்திக்க நேரிடலாம். அவர்களுடைய ஆசீர்வாதம், நீங்கள் திறம்பட வேலை செய்வதற்கு வேண்டிய ஆற்றலைத் தரும். அதிகப்படியாகக் கருதப்படும் செலவினங்களை நீங்கள் கண்காணிக்க வேண்டும். பணி விஷயங்களில் உடன் பணியாற்றுபவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். அன்றாட நடவடிக்கைகளில் கலந்துகொள்ளும் போது நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். உங்கள் உடல் ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும். உணவுக் கட்டுப்பாட்டில் கவனம் செலுத்துங்கள். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

banner

Leave a Reply

Submit Comment